அவர் விசாரிக்கிறவராயிருக்கிறார் நீ கவலை கொள்கிறாயா-? HE CARES. DO YOU CARE-? 1 நன்றி சகோதரனே, ஜெபத்திற்காக சிறிது நேரம் நாம் நிற்போமாக. நமது தலைகளை வணங்கியவர்களாய் யாராகிலும் ஜெப விண்ணப்பத்தை கை உயர்த்தியாவது அல்லது தங்கள் வாயைத் திறந்து கூறும்படி உள்ளவர்கள் அப்படியே இப்பொழுது செய்யுங்கள். 2 எங்கள் பரலோகப் பிதாவே, தங்கள் தேவைகளுக்காக தங்கள் கரங்களை உயர்த்தியவர்களுக்காக மறுபடியும் உம்மிடத்தில் வருகிறோம். அநேக காரியங்களின் தேவைகளுக்காக இந்தக் காலையில் இவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இருதயத்தில் எதைச் சிந்திக்கிறார்கள் என்று உமக்குத் தெரியும். ஏனென்றால் நீர் வார்த்தையாக இருந்து வார்த்தை செய்கிற கிரியையாகிய எண்ணங்களையும் இதயத்தின் வாஞ்சைகளையும் வகையறுக்கிறீர். மிகவும் கிருபையுள்ள தேவனே, நீர் அவர்கள் தேவைகளுக்கேற்ப, ஒவ்வொருவருக்கும் பதிலளிப்பீர் என்பதை நான் அறிந்து, அவர்கள் விசுவாசத்திற்கேற்றபடி நீர் செய்வீர் என்று உம்மை நோக்கி ஜெபிக்கிறேன். உமது வார்த்தையை நாங்கள் பேசும்போது, தேவனே, எங்களுக்கும் விசுவாசத்தை தந்து, அவர்களுக்கும் வார்த்தையானது விசுவாசத்தைக் கொண்டு வரும்படி செய்யும். உமது வார்த்தை சத்தியமாய் இருப்பதினால் நான் உமது வார்த்தையைப் பேச உதவி செய்யும். இந்த வார்த்தை இங்கே வைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு பதிலளிக்கக் கூடிய விசுவாசத்தை இவர்களுக்குக் கொடுக்கட்டும். மேலும் இங்கே சத்தியமார்க்கமாகிய நெருக்கமான வாசல் வழியாய் செல்லாதபடி வழி விலகிப்போனவர்கள் இருக்கலாம். அவர்களுக்கும் பிதாவே, இன்று ஏதாகிலும் செய்யப்பட்டு, தெரியப்படுத்தப்பட்டு, அவர்களும் சீக்கிரமாக கிறிஸ்துவுடன் கூட இருக்கும் ஐக்கியப் பாதையில் வரும்படியாகச் செய்யும் காலங்கள் வேகமாய்க் கடந்து சென்று, பொல்லாப்பு எங்கும் எதிலும் காணப்பட்டு, மாபெரும் ஆவிக்குரிய வீழ்ச்சி உண்டாகி இருக்கிறது. பிதாவே, அற்புதங்களின்; மூலமாகவும், எங்கள் மத்தியில் உள்ள வியாதியஸ்தர்கள் தெய்வீக சுகம் பெறுவதன் மூலமாகவும், இன்று உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தும். நீர் இவைகளைச் செய்து தான் நீர் தேவன் என்று எங்களுக்கு நிரூபிக்க அவசியமில்லை. ஆனால் இவைகளைச் செய்வேன் என்று வாக்குரைத்திருக்கிறீர். நாங்கள் உமது வாக்குத்தத்தங்கள் உண்மை என்றும், அவைகளை விசுவாசிப்பதினால் உமது வாக்குத்தத்தங்களை அருளிச் செய்வீர் என்றும்-! நாங்கள் அறிகிறோம். இந்த இரக்க ஈவுகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென், (எல்லோரும் உட்காருங்கள்) 3 இங்கே வைக்கப்பட்டிருக்கிற 2 அல்லது 3 விண்ணப்பங்களை சில நிமிடங்கள் வாசித்து அவைகளில் ஒன்று ஜெபத்திற்கான வேண்டுகோள் என்று அறிந்தேன். மேலும் இங்கே அநேக கைக்குட்டைகள் ஜெபிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது கைக்குட்டைகள் மீது ஜெபிக்க மிகவும் ஆவல் உள்ளவர் களாய் இருக்கிறோம். சபையிலுள்ள அனைவரும் அவருடைய பிரசன்னத்தால் அபிஷேகிக்கப்படும் போது அவ்வாறே செய்வோம். 4 கோடை காலத்தின் அதி வெப்ப நிலையில் இருக்கும் இந்நாள் ஈரப்பசை 100 சதவீதமும் 100 டிகிரி வெயிலும் இருப்பது மிகவும் வியர்த்துக் கொண்டு உஷ்ணமாக இருக்கும் இந்நேரத்தில், இங்குள்ள அநேகர் உட்காருவதற்குக்கூட இடமில்லாமல் நின்று கொண்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. 5 இன்று காலை சுகமளிக்கும் ஆராதனையைப் பற்றி அறிவித்தேன்; இல்லையா-? சுகமளிக்கும் 'ஆராதனை என்று ஏன் குறிப்பிடுகிறேனென்றால் அவர் வாக்குத்தத்தம் பண்ணினதின் பேரில் மாத்திரம் என் விசுவாசத்தை வைக்கிறேன். பாருங்கள், நான் அவர் செய்வார் என்று கூற முடியாது. ஆனால் அவருடைய வார்த்தையைக் கேட்டபின்பு அவர் வாக்குப்பண்ணினதின் பேரில் நமது விசுவாசத்தை வைக்கும் போது பின்பு அவருடைய இரட்சிப்பின் வாக்குத்தத்தங்களின்மேல் இருக்கும் உரிமையைப் போல் அவருடைய சுகமளிக்கும் வாக்குத்தத்தங்களைப் பெற்றுக் கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது , 6 இங்கே இரண்டு விண்ணப்பங்கள். இதற்கான பதிவுக்கருவிகள் வேலை செய்கின்றனவா என்று தெரியவில்லை. அவைகள் வேலை செய்தால் நல்லது வெளியிலுள்ள எல்லா மக்களும் இந்த விண்ணப்பத்தைக் கேட்டால் நல்லது என்று எண்ணுகிறேன். இது ஒரு வேண்டுகோளாயிருக்கிறது. கேள்வி:- நீங்கள் பத்து லட்சம் நீக்ரோ மக்கள் கொல்லப் படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்தீர்களா-? அல்லது இந்தக் காரியம் நடக்கும் என்று அறிவித்தீர்களா-? 7 பாருங்கள். நான் பேசும் போது நீங்கள் கேட்பதைக் குறித்து கவனமாயிருக்கும்படி நான் எப்பொழுதும் உங்களைக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். அவைகளில் மனுஷீகத் தன்மைக்கு உரியதும் உண்டு. ஆனால் உரைக்கப்படவேண்டியிருந்தால் அது “கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொல்லும். அது தரிசனங் களுக்கும் மற்றவைக்கும் பொருந்தும், பிரசங்கபீடத்திலும், மக்கள் கூடியிருக்கும் பக்கமும் உண்டாகிற தரிசனங்கள் தேவனல்ல. அவைகள் நீங்களாக காணுபவைகள். அவைகள் மனிதனுக்கு உரியவைகளே. தேவன் அந்த தரிசனத்தை உண்டு பண்ணுகிறவர் அல்ல. நீயே அதைச்செய்கிறாய். ஒரு தெய்வீக ஈவின் பேரிலுள்ள விசுவாசத்தினால் அது நிகழ்கிறது. 8 அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட ஸ்திரியைப் போல. அவள் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவளே அதைச் செய்தாள். பாருங்கள்-? அது “கர்த்தர் உரைக்கிற-தாவது'' என்றில்லை. ஆனால் இயேசு திரும்ப அவளிடம் பேசி, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது '' என்று சொன்னது "கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று அமைகிறது. ஆனால், பாருங்கள் நீங்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும். 9 இல்லை. நான் சிறிது நேரம் முன்பு அமெரிக்காவின் தெற்குப் பாகத்தில் கறுப்பு நிறத்தவர் மத்தியில், நடந்த பெரிய ஆபத்தை-யும் மார்ட்டின்-கிங்கைப் பற்றியும் பேசிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது நான் இவர்கள் அடிமைகளாக இருப்பார்கள் ஆனால், நான் என்னுடைய சபையை தெற்கே கூட்டிக் கொண்டு போய் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பேன்" என்று கூறினேன். நான் நிச்சயம் அவ்வாறே செய்வேன். ஏனென்றால் மனிதனே அடிமைகளை உண்டாக்கியவன், தேவனல்ல, நாம் அனைவரும் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஆதாம் என்னும் ஒரே மரத்திலிருந்து உண்டானவர்கள். கர்த்தர் ஒரே இரத்தத்தினாலே பூமியெங்கும் பல தேச மக்களை உண்டு பண்ணினார். நாம் கறுப்போ, மஞ்சளோ, சிவப்போ, மாநிறமோ எப்படியிருந்தாலும் நாம் அனைவரும் சர்வ வல்லவருடைய சிருஷ்டிகளாய் இருக்கிறோம். பாருங்கள்-? நமது மத்தியில் ஒரு வித்தியாசமும் இருக்கக் கூடாது. 10 அங்கே என்ன பிரச்சினை என்றால், கறுப்பருக்கும் வெள்ளை-யருக்கும் தனிப்பட்ட பள்ளிகள். முதல் போராட்டத்தின் சமயத்தில் அங்கிருந்தேன் நான் கேட்டேன். நான் பேசுவது என்ன என்று தெரியும். மற்றவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும்: கறுப்பு நிறத்தவர்க்கு மிகவும் அருமையான பள்ளிகள் உண்டு' உதாரணமாக ஷ்ரீவ் போர்ட்டில் கறுப்பு நிறத்தவர்க்கு வெள்ளை நிறத்தவரைவிட மிகவும் அருமையான பள்ளிகள் உண்டு. ஆனால் இரு நிறத்தவரும் ஒருங்கே சேர்த்து கலந்திருக்க வேண்டும் என்பது நல்லது தான். ஆனால் ஒருவர் இதை ஊக்குவிக்கும் போது, மற்ற அமெரிக்க தென் பகுதியினர் இரு நிறத்தவரும் கலப்பதை எதிர்க்கும் போது, அதினால் என்ன பயன்-? 11 மார்டின்-லூத்தர்-கிங் பொதுவுடைமைக் கொள்கையினால் ஊக்குவிக்கப்பட்டவராய் ஒரு பத்து லட்சம் மக்களை நிச்சயமான மரணவலைக்குள் வழி நடத்திக் கொண்டு செல்லுகிறார் என்று நினைக்கிறேன். பாருங்கள். அந்தக்காரியம் அப்படி செய்யப்படக் கூடாது. மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்து மற்றவர்களை சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் ஏதோ ஒன்றிற்காக........ 12 இந்த அமெரிக்க அரசு எனக்குத் தனிப்பட்ட, முறையில் கொடுக்கப்பட்ட காசோலையை நான் கையெழுத்திடக் கூடாது என்று சொல்லுகிறது. பாருங்கள். அப்படிச் செய்வது என்னுடைய ஜீவாதார உரிமைகளைப் பறித்துக் கொள்வதாகும். ஆனால் நான் என்ன செய்வது அப்படியே விட்டு விட வேண்டியது தான். பாருங்கள்-? நான் அமெரிக்கக் குடிமகனாக இருந்த போதிலும், அந்தக் காசோலையைப் பணமாக்க வேண்டுமென்றால் அது மற்றொரு அமைப்பின் வழியாக, இந்தச் சபையின் வழியாகச் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. நான் அதைப் பணமாக்க முடியாது, பாருங்கள். அது சரியல்ல. அது தேசச் சட்டத்துக்கு முரணானது. ஆனால், நான் என்ன செய்ய முடியும்-? அதில் ஒன்றுமில்லை. இங்கு இருக்கும் வரி வசூலிப்பவர் நான் அப்படிச் செய்யக் கூடாது என்றார். நல்லது. காரியம் இப்படியாய் இருக்கிறது அது. இப்படி இருந்தால், அதைப்பற்றி என்ன. அதை அப்படியே விட்டு விடுவது தான். 13 இந்தக் காரியமும் அவ்வாறே இருக்க வேண்டும். அமெரிக்க தென்பகுதியிலுள்ள என்னுடைய கறுப்பு நிற சகோதர சகோதரிகள் இந்தச் சிறு காரியத்திற்காக தங்களுடைய சகோதரர்களுக்கு விரோதமாய் எழும்புவது கூடாது. என்ன-? நீ எங்கே, எந்தப் பள்ளிக்குச் சென்றால் என்ன வித்தியாசம் உண்டாகிறது-? அன்று ஷ்ரீவ்-போர்டில் நடந்த புரட்சி சமயத்தில் அருமையான ஒரு கறுப்பு நிற ஸ்திரீயைப் பார்த்தேன். அன்று ஒரு வயோதிப ஊழியக்காரர் அந்தப் புரட்சிக் கும்பலைப் பார்த்து நான் அவர்களோடு பேசட்டும்,'' என்றார். அந்த வயது முதிர்ந்த தேவ மனிதன் அங்கே நின்று, "என்னுடைய நிறத்தைப் பற்றி வெட்கப் பட்டதே இல்லை,'' என்று சொல்லி விட்டு, 'என்னை உண்டாக் கியவர் நான் இருக்கும் வண்ணம் உண்டாக்கினார் என்பதைக் குறித்து இன்று காலை வரை வெட்கப்படாதிருந்தேன். ஆனால் என் மக்களே, நீங்கள் இந்த விதமாய் நடப்பதைப் பார்க்கும் போது கருமை நிறமுள்ள மனிதனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்.'' என்று முடித்தார். அந்தப் புரட்சிக் கும்பல் அவரைக் கூக்குரலிட்டு உட்காரவைத்தது. 14 பின்பு கல்வியில் சிறந்த நன்றாகக் காணக்கூடிய கறுப்பு நிற ஸ்திரீ எழுந்து நின்று, புத்திக்கூர்மையுடன், "என் பிள்ளைகள் ஒரு வெள்ளை நிற ஸ்திரீயால் பாடம் கற்பிக்கப்படுவது எனக்கு இஷ்டம் இல்லை'' என்றாள். 15 ஏனென்றால் அவள் என் பிள்ளைகள் மேல் கறுப்பு நிற ஆசிரியைப் போல் கவனமெடுத்து சிரத்தையுடன் கற்பிக்க மாட்டாள்'' என்று கூறினாள். மேலும் அவள், ''இங்கே உள்ள நம் பள்ளிகளைப் பாருங்கள். ஏன் இந்தக் கூச்சல் போடுகிறீர்கள்-? நமக்கு நீச்சல் குளங்கள் மற்றும் எல்லா வசதிகளும் நம் பள்ளிகளில் உள்ளன. ஆனால் வெள்ளையர் பள்ளிகளில் ஒன்றுமே இல்லை ஏன் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்-?'' என்று கூறினாள். அவர்களோ அவளைக் கூச்சலிட்டு உட்கார வைத்தனர். பாருங்கள். 16 தப்பிதமான முறையில் அந்த மக்கள் ஊக்குவிக்கப்பட்டு உள்ளனர். ஆகையினால் தான் நான் அதைப் பற்றி கூறியது தீர்க்கதரிசனம் அல்ல அதைப் பற்றிக் கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒன்றுமில்லை. நிச்சயமாய் அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் இடத்திலிருந்து எதையாகிலும் நான் உங்களுக்குக் கூறினால், நான் இப்பொழுது சொல்லுகிறேன். கேளுங்கள். அவர் பேசும் போது. அது நான் அல்ல- அது கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறுவேன். அவர் எனக்குக் கூறும் வரை நான் ஒன்றும் சொல்லக் கூடாது. மார்ட்டின் லூத்தர் கிங்கைப் பற்றிய என்னுடைய எண்ணம் முற்றிலும் தவறுடையதாக இருக்கலாம். எனக்குத் தெரியாது என்னால் கூற முடியாது. அது என்னுடைய சொந்த அபிப்பிராயம். இக்கடைசி நாட்களில் இன்னல்களை விளைவிக்-கிறது எல்லாம் பிசாசினால் உந்தப்பட்டதாகும். நம்முடைய தேச நலனையோ நம்முடைய மற்றதையோ இந்த விதமாக எழும்பிக் கெடுப்பதெல்லாம் சாத்தானால் ஊக்குவிக்கப்படுவதே. அங்குள்ள மக்களுக்கு விரோதமாக இருக்கிறேன் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம். எல்லாரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆவல். ஆனால் அதற்குரிய சூழ்நிலை அந்த மக்கள் இடத்தில் இல்லை. ஆனால் இப்போது என்ன நடக்கும். அந்தக் கிளர்ச்சியை நிறுத்தாவிட்டால் மற்றொரு புரட்சியே ஆரம்பித்து விடும். பாருங்கள். பொதுவுடைமைக்காரர் அந்த மக்கள் மத்தியில் இவ்விதக்கிரியை செய்கிறார்கள். 17 இதைப் போன்ற காரியத்தைச் செய்த பொழுது நான் ஆப்பிரிக்காவில் இருந்தேன். அங்கே பொதுவுடைமைக்காரர் வந்து அங்கிருந்த கறுப்பர்கள் இடம், ஓ-! நீங்கள் இப்படியும் அப்படியுமாக இருக்க வேண்டும். நீங்கள் வேற்றுமைப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்.'' என்றெல்லாம் கூறினது எனக்குத் தெரியும். அதன் முதல் விளைவு என்ன என்று தெரியுமா-? ஆயிரக்கணக்கானவர் கொல்லப்படும்படியாக நேரிட்டது. அதனால் வந்த பலன் ஒன்றுமே இல்லை. 18 நான் மனித உயிரை அதிகமாக நேசிக்கிறேன். நாம் கர்த்தரைச் சேவிப்போம். நமது ராஜ்யம் மேலானவைகளுக்குரியது. இதைப் போலொத்த காரியம் கிடையவே கிடையாது. நாம் புசித்தும், குடித்துக் கொண்டும், இருக்கும் பொழுது வேற என்ன தேவை-? பாருங்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியும். அது கஷ்டத்தை விளைவிக்கும் என்று நான் உணருகிறேன். இப்போது மற்றொரு கேள்வி யோவான்-ஸ்நானன் இயேசுவை சந்தித்த பொழுது, பாருங்கள், ஏன் இயேசு இவ்விதமாகக் கூறினார்-? ''இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது,'' இதன் அர்த்தம் என்ன-? 19 நல்லது. எனக்கு ஞாபகமிருக்கிறது. நான் எடுத்த ஒரே ஞானஸ்நானத்தை என் நெருங்கிய நண்பர் டாக்டர்.ராய்-டேவிஸ் தான் கொடுத்தார். அவர்கள் உடைய பள்ளியில் அவர் கற்ற விதத்தை இவ்விதமாகக் கூறினார். யோவானுக்குத் தெரியும். அவன் ஒரு போதும் ஞானஸ்நானம் பெறவில்லை. ஆகையால் அவன்... இயேசுவை... யோவான்.. இயேசு. அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க இடம் கொடுத்தார். நல்லது. அந்தப் பெரிய டாக்டர் விளக்கியதற்கு தான் மாறுபட்ட கருத்தை உடையவனாக இருக்கிறேன். 20 வேண்டுமென்று எதிர்மாறானதைச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் சத்தியத்திற்காக இதைச் சொல்லலாம். இல்லை. அங்கு 2 மனிதர் - அந்த வேளையின் 2 தலைவர்கள்- மேசியாவும் அவருடைய தீர்க்கதரிசியும் தண்ணீரில் சந்தித்தார்கள். இப்பொழுது ஞாபகம் வையுங்கள். யோவான் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. ஆனால் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் கொடுத்தான். பாவ மன்னிப்புக்கென்று அல்ல. ஏனென்றால் பலி இன்னும் உண்டாக்கப் படவில்லை. பாருங்கள். பலி இன்னும் செலுத்தப்படவில்லை. 'பலி'யானது தண்ணிருக்குள் அவனிடத்தில் வருகிறது. இப்பொழுது பாருங்கள். யோவான், இயேசு தம்மிடம் வருவதைக் கண்டு நான் உ.ம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாய் இருக்க நீர் என்னிடத்தில் வரலாமா," என்றான். 21 இயேசு அவனைப் பார்த்து, "இப்பொழுது இடம் கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது,'' என்றார். தீர்க்கதரிசி இடமே தேவனுடைய வார்த்தை வருகிறது. யோவான், தீர்க்க தரிசியாய் இருந்தபடியால் அவன் இடத்தில் கர்த்தருடைய வார்த்தை வந்தது. யோவான் தீர்க்கதரிசியாய் இருந்தபடியால், அது பலி என்று புரிந்து கொண்டான். நியாயப் பிரமாணத்தின்படி, பலியானது படைக்கப்படும் முன் கழுவப்பட வேண்டும். இந்தக் காரணத்திற்காகவே யோவான், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். பாருங்கள்-! இப்படி நாம் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது'', பலியாக இருந்த அவர் (இயேசு பலியாக இருந்தார்) படைக்கப்படுவதற்கு முன்னால் வெண்கலத் தொட்டியில் கழுவப்பட வேண்டி இருந்தது இது யோவானுக்குத் தெரியும். அவர் படைக்கப்படும் முன் கழுவப்பட வேண்டியதும் அவருக்குத் தெரியும். இவைகள் நடந்து முடிந்தவுடனே இயேசு பொதுமக்களுடைய சோதனைக் காகவும் எல்லா மனித ஜீவனுடைய பாவியாகவும் படைக்கப்பட்டார். 22 இப்பொழுது 'நாம் ஒரு சிறிய செய்தியைப் பெறப்போகிறோம். அதன் மூலமாக கர்த்தர் நமக்கு ஆசீர்வாதங்களை அருளிச் செய்வாரென்று நம்புகிறேன். இப்பொழுது சிறிது மற்ற காரியத்தை பார்ப்போம். அடுத்த வாரம் விடுமுறைக்காக பிள்ளைகளை மலைக்கு எடுத்துச் செல்வேன். கர்த்தர் அனுமதித்து, இங்கு போதகரும் அனுமதிப்பாரென்றால், நான் சரியான நேரத்தில் திரும்புவேனாகில் நாங்கள் அடுத்த ஞாயிறு பேச வேண்டுமென்று விரும்புகிறோம். இந்தப் பட்டணத்துக்கு வெளியில் இருப்போர்க்கும் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்துவோம். நாம் என் கிறிஸ்துவைப் பற்றி விசுவாசிக்கிற காரியங்கள் இந்த விதமாகத் தான் இருக்க வேண்டும்; மற்ற வகையில் இருக்க முடியாது என்ற குறிப்பான ஒரு பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். பாருங்கள்-? அதை வேதத்தினாலே நிரூபிக்க வேண்டும். இப்பொழுது கர்த்தருக்குச் சித்தம் ஆனால், கர்த்தருடைய வருகை தாமதித்தும் நானும் உயிரோடு இருப்பேனானால், இந்த மாரி காலத்திலாவது அல்லது அடுத்த கோடை காலத்தில்லாவது நாங்கள் திரும்ப வரும்போது நான் உங்களைப் பார்க்க முயற்சிப்பேன். பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக நாங்கள் திரும்ப அரிசோனாவிலுள்ள வீட்டிற்குப் போகிறோம். 23 இக்காலையில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்னால் கர்த்தருடைய வார்த்தையில் இருந்து சிலவற்றைப் படிக்கப் போகிறோம். அந்த வார்த்தையில்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று நாம் அறிவோம். வியாதியஸ்தருக்கும், தேவை இருப்போருக்கும் நாம் கேட்கும் ஆசீர்வாதங்களை, வார்த்தை மாத்திரமே தர முடியும். நான் 1-பேதுரு.5-ம் அதிகாரத்தில் முதலாம் வசனத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். அதன் பின்பு எபிரேயர் புஸ்தகத்தில் இருந்து எபிரேயர்-2, 2 முதல் 4 வரை வாசிக்க விரும்புகிறேன். உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாய் இருக்கிற நான் புத்தி சொல்லுகிறது என்ன என்றால்: உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும் அவலட்சணமான ஆதாயத் திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச்செய்யுங்கள். அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும் போது மகிமை உள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். அந்தப்படி இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத் தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும் படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கி இருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலை களையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:1-7 24 எபிரேயர்.2-ம் அதிகாரத்தில் கீழ்க்கண்ட வசனங்களை வாசிக்கிறோம். வசனக்குறிப்பாக ”உங்கள் கவலைகளை அவர்மீது வைத்துவிடுங்கள்,'' என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுகிறேன். நான் என்னுடைய பொருள் அவர் விசாரிக்கிறார். நீ கவலை கொள்கிறாயா-? நீங்கள் எபிரேயர் 2-ம் அதிகாரத்துக்குத் திருப்பும் பொழுது. இந்த வசனங்களின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் பார்க்கும்படியாக நான் வாசிக்க விரும்புகிறேன். ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப் பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவர் இடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பல விதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளூவோம். எபி 2:1-4 25 நான், அவர் விசாரிக்கிறவராயிருக்கிறார். நீ கவலை கொள்கிறாயா-?' என்ற பொருளை உபயோகிக்க விரும்புகிறேன். அவர் இப்பூமியில் இருந்த பொழுது, மக்களுக்காக கவலைப்பட்டார். அவர்களை விசாரித்துக் கவனித்தார். எந்த விதமான தேவைகளோடு மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்பதை அறியாமல், வியாதியஸ்தருக்காக பேசவும், ஜெபிப்பதற்கும் முன்னால் அந்த எண்ணம் என் மனதில் எழும்புகிறது. 26 முதலாவது இதைப் பேசுவதற்கு முன்னால் இங்கு குழுமியிருக்கும் நீங்கள் விசுவாசத்தினால் அபிஷேகிக்கப்பட வேண்டும். உங்களுக்கு விசுவாசம் இல்லாவிட்டால் நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக வரவேண்டிய அவசியமில்லை. ஏன் என்றால் நான் அவரை நம்புகிற விசுவாசமும் நீங்கள் அவரை நம்பும் விசுவாசமும் சேர்ந்து தான் அது நடக்கும். நான் பேசிக் கொண்டே போகும் பொழுது இதை மறந்து விடக்கூடாது. நம் விசுவாசத்தின் மீது எதைச் செய்ய முயற்சிக்கிறோம் என்பதைப் பற்றி முழு உறுதி உடையவர்களாய் இருக்க வேண்டும். ஏனென்றால், போதுமான விசுவாசம் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்ய அணுகும் பொழுது, அவன் நிச்சயமாய் தோல்வியைச் சந்திப்பான். ஆனால் போதுமான விசுவாசத்தோடு அதை அணுகும் போதும், அது தேவனுடைய சித்தம், நோக்கத்தின்படி இருக்கும் போதும் நிச்சயமாக அவன் வெற்றி பெறுவான். 27 இப்பொழுது அவரை விசாரிக்கிறவராக நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்று மாலை வினோதமான நிலையில் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டேன். சகோதரன் உட் செய்திருந்த இணைப்பு வண்டி (trailer) அவருடைய டிரக்குக்குப் பின்னால் சேர்க்கப்பட சிலரோடு காத்திருக்கும் பொழுது, நான் ஏன் என்னுடைய நல்ல நண்பராகிய சகோ.எவான்ஸைக் கண்டு பிடிக்க முயற்சித்து, நெடுஞ்சாலைப் பாதையில் மேற்கொண்டு செல்ல ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. இவை யாவும் உண்மை என்று என்னுடைய மனைவியும் இங்கே உட்கார்ந்து இருக்கிற என் குடும்பத்தினரும் அறிவார்கள். ஏதோ புது விதமாக சம்பவித்து திரும்பவும் ஒரு சிறு உணவு விடுதிக்குச் சென்றேன். 28 ஓ-! அங்கே இரண்டு நிமிஷ நேரத்தில் என்னுடைய அநேக நண்பர்கள் அனைவரும் குழுமியது என்னுடைய இருதயத்தைக் குதூகலப்படுத்தியது. மேலும் அவர்கள் கூடியதால் நெடுஞ்சாலை இட நெருக்கமாகும் அளவுக்கு எனது உண்மையான நண்பர்கள், பல நூற்றுக்கணக்கான மைல்கள் ஜார்ஜியா டென்னஸ்ஸி, அலாபாமா இன்னும் சுற்றுப்புற இடங்களிலிருந்து ஆராதனையைக் கேட்கும்படியாக கார்களில் வந்திருந்தனர். அப்பொழுது நியாயத் தீர்ப்பின் நாளிலே, நான் இவர்களுக்குக் கூறுவதற்கு எல்லாம் பொறுப்பானவன் என்று நினைக்கும் பொழுது இந்த மக்களுக்கு என்ன சொல்ல வேண்டும்,'' என்ற இந்த எண்ணம் என் மனதில் தோன்றினது, மேலும் வரப் போகும் இந்தப் பெரிய வாழ்க்கையை நேசிக்கிறவனாக இருக்கிற நான் அங்கிருக்க விரும்புகிறேன். 29 பின்பு எதிர்பாரா வண்ணம் என் காரில் ஒரு வினோதமான திருப்பத்துடன் வளைந்து ஓரிடத்திற்குச் சென்றேன். அந்த இடத்திலேயே வளைந்து திரும்புவதற்குப் பதிலாக, நான் மேலே சென்று ஒரு வளைவு உண்டாக்கினேன். அச்சமயம் என் காரின் வெளிச்சம் சாலை ஓரத்திலிருந்த 2 இளந்தம்பதிகள் மீதுபட்டது. அவர்கள் யாரென்றால் சமீபத்தில் 2 இளைமையான ஊழியக்காரர்களுடன் இணைக்கப்பட்ட 2 இளம் ஸ்திரீகளே. அவர்களில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணைவியை இந்தப் பீடத்தில் பெற்றுக் கொண்டவராய் ஊழியத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை பிசாசானவன் கண்டான். தங்களுடைய தேன்நிலவைக் கழிக்க அவர்கள் சந்தோஷமாக அவ்விடம் விட்டுப் புறப்பட்டனர். ஆனால் எதிராளியாகிய பிசாசானவன் இந்த வாலிபனைப் பற்றிப் பிடித்தான். நான் இதை இப்படிச் சொல்வது, ஏனென்றால், நான் சொல்வதை அழுத்தமாக விளக்கிக் கூறுவதற்காக. அவர் விசாரிக்கிறாரா-? இல்லை என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளாத விசுவாசத்துடன் எப்படியாகிலும் நாம் திரும்பி விடுவோம் என்ற எண்ணத்துடன் இவர்கள் தேன்நிலவை முடித்து திரும்பி வந்து உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே நுழைந்த பொழுது இந்த அழகான வாலிப மனிதனும் அவனுடைய மனைவியும் உட்கார்ந்து கொண்டு இருந்ததைக் கண்டேன். அவள் அழுது கொண்டிருக்கும் பொழுது மற்ற மனிதனும் மற்றச் சகோதரனும் (இந்த வாலிபனுடைய நண்பன்) ஓடோடி வந்து, ''ஓ சகோ. பிரான்ஹாமே-! இன்னின்ன பிரகாரமாக நடந்தது,” என்று கூறினார். 30 நான் அங்கு சென்று, தன்னுடைய வாழ்க்கையில் உச்சக் கட்டமாகிய இளம் வாலிபப் பருவத்தில் இருக்கும் அவன், அநேக வாலிபருக்குத் தலைவராய் வழிகாட்டியாய் இருக்கும் அவன், சாத்தானால் கட்டப்பட்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அவன் என்னைக் கவனிக்கவில்லை. நான் என் இடதுகையை எடுத்து அவனுடைய வலது கையைப் பிடித்துக் குலுக்கி வியாதி ஏதும் அவனைப் பிடித்திருக்கிறதா, என்று பார்த்தேன். ஆனால் ஓர் அதிர்வு அலை (Vibration) கூட இல்லை. உபவாசத்திலும் ஜெபத்திலும் கர்த்தருக்குக் காத்திருக்குதலிலும் இருந்ததால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எங்களை அங்கே வழி நடத்திற்று. பின்பு அவன் மேலிருந்த இருளின் நிழலை நான் பார்த்து, நான் செய்யப் போவதை சொல்லாமலே ஒரு சில வினாடிகளில் அந்த இருள் எல்லாம் போய் விட்டது. அவனுடைய கை கால்களில் குளிர்மை அவனை விட்டு அகன்றது. தன்னைப் பற்றிய சூழ் நிலையை உணர்வதற்க்கு முன் அவன் சத்தம் போட்டு கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தான். இக்காலை நமது கூட்டத்திலே அவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். பாருங்கள். சாத்தான் எவ்விதத்தில் அந்த வாலிபனை, ஒரு வித மனோபாவனையை உண்டு பண்ணி அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் போது, பரிசுத்தாவியானவர் அதை அறிந்து, நான் இவைகளைத் தரிசனத்தில் காணும்படி செய்தார். கர்த்தர் அந்த மனிதனுக்காக கவலைப்பட்டு, அந்த வாலிபனை விசாரிக்கிறவராக இருக்கிறர். 31 சில வினாடிக்கு முன்னால் இங்கே மக்கள் உட்காரக் கூடிய இடத்திலே ஒரு ஸ்தீர்யைக் கண்டு அவளை அமரப் பண்ணினேன். அவள் என்னை நோக்கி, "கடந்த 9 வருஷங்களாக, சகோ.பிரான்ஹாமே, உங்களைக் காண அதிகமாக முயற்சித்தேன். நான் மிகவும் பதறிய நிலையில் இருக்கிறேன். மிகவும் பிந்தினவளாய் ஜெப வரிசைக்கு அட்டை கூடக் கிடைக்காத நிலையில் இருக்கிறேன்,'' என்று கூறினாள். 32 நான் தொந்தரவுப்படுத்தபடக் கூடாது என்னும் கட்டளையைப் பெற்றவனாய் பில்லி என்னை உள்ளே அழைத்து வெளியே கொண்டு போய் விடுகிறான். பில்லியின் மீது தப்பு அபிப்பிராயம் கொள்ள வேண்டாம். இச்சபையின் தர்மகர்த்தாககளின் கட்டளைப்படியே அவ்விதமாகச் செய்கிறான். அவன் இவ்விதம் செய்யாவிடில் நான் இந்த ஜெப வரிசைக்குள் வரமுடியாது. அதை நீங்கள் உணர வேண்டும். பாருங்கள்-! நாம் எதைச் செய்தாலும் அதை கிரமமாகச் செய்ய வேண்டும். பாருங்கள். நாம் ஒழுங்கு உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆனால் பில்லி அவசரப்பட்டு, ”அப்பா, சீக்கிரம் செய்யுங்கள்,'' என்று சொல்வது சரியல்ல... 33 அந்த ஸ்திரி அசைந்தவளாய் “சகோ.பிரான்ஹாமே, உங்களோடு ஒரு வார்த்தை,” என்று கூற, அங்கு நின்ற எனக்கு இந்த அழகான வாலிப ஸ்தீரீயைப் பற்றி தரிசனம் வந்தது. அவள் இருதயம் பாரத்துடன் இருப்பதைக் கண்டேன். அவள் தன் ஜீவனாம்சத்துக்காக உழைக்க முயற்சித்தாள். அவளுடைய பெற்றோர்களுடன் ஜீவித்த இளம் பிராயத்தில் நடந்த ஓர் பெரிய காரியம், இப்பொழுது இந்த பெரிய நிகழ்ச்சிக்கு வழி நடத்திற்று. கர்த்தராகிய இயேசு அதை வெளிப்படுத்தி அது என்னவென்று அவளுக்குக் காட்டி, ஒரு வினாடி நேரத்தில் அந்தப் பாரத்தை அவள் இடத்திலிருந்து எடுத்து விட்டார். அவள் சந்தோஷத்துடன் சென்றாள். இப்பொழுது அந்த சகோதரி நம் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்தக் காரியத்தின் உண்மை வெளிப்படுத்தப்பட்டது என்பதை அறிந்தவளாய், கண்ணீர் மல்க சந்தோஷத்துடன், தன் கண்களைத் துடைத்தவளாய் காணப்படுகிறாள். இந்த 'ஏழ்மையான மனநிலை பாதிக்கப் பட்ட. சிறிய ஸ்தீரி மிகவும் மனக்கலக்கமுடையவளாய், தனக்குத்தானே என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவளாய், எல்லாம் முடிந்தது பரிசுத்தாவி இல்லை என்றும், தன் வாழ் நாளின் கடைசிநாள் என... ஆம் எண்ணியிருந்தாள். 9 வருஷங்களாக முயற்சி செய்து அவநம்பிக்கையின் முடிவில் கர்த்தர் இந்த சின்ன ஸ்தீரீக்காக, மற்றவர்களால் எண்ணப்படாத அவளுக்காக, கவலைப்படுகிறார். என்ன அருமையான நேரம். அவர் கவலைப்படுகிறார். விசாரிக்கிறார். 34 கர்த்தர் இந்தப் பூமியில் இருந்த பொழுது, நாம் சொல்லுகிற பிரகாரம், அவர்களை சொஸ்தப்படுத்தியும், அவர்கள் இருதயங்களை ஆறுதல் படுத்தியும், அவர்களுக்காக அவர் போய் ஓர் ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி மீண்டும் அவர் வந்து தம்முடன் சேர்த்துக் கொள்வதாகக் கூறியும் வந்தார். அவர்களுக்காகக் கவலைப்பட்டார். கவனியுங்கள்-! அவர் எந்த அளவுக்கு விசாரிக்கிறவராக இருந்தார் என்றால், இந்தப் பெரிய காரியத்தைக் கொணர்வதற்காக இந்தப் பூமியை விட்டுச்செல்ல வேண்டும் என்று அறிந்த போது அவர் "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். ஆனால் பரிசுத்தாவியை அனுப்புவேன். அவர் வந்து நான் உங்களை கவனிக்கும் வேலையைத் தொடர்ந்து,'' நான் திரும்பி வரும் வரைக்கும் செய்வார் என்றார். இயேசுவைப் போல விசாரிக்கிறவர் யாருமில்லை. தன்னுடைய சரீரம், ஒரு பிரதான ஆசாரியனைப் போல இப்பொழுது செய்கிற மத்தியஸ்த ஊழியத்தைச் செய்ய, தேவன், பாவியினுடைய பாவத்தைப் பாராமல், தன் சொந்தக் குமாரனுடைய இரத்தத்தை மாத்திரம் பார்க்கவும், பரிந்து பேசுவதற்காக "சரீரம்,’’ எப்பொழுதும் தேவ பிரசன்னத்திலே இருக்க வேண்டும் என்பதை அறிந்து, தம்முடைய மக்கள் தொடர்ந்து தேற்றப்படும்படி, பரிசுத்த ஆவியானவரைத் திரும்பவும் அனுப்பினார். அவர் விசாரிக்கிறாரா-? (He cares) என்ற வார்த்தைக்கு தமிழ் வேதாகமத்தில் விசாரிக்கிறார்' என்றெழுதப்பட்டு இருக்கிறது. நாங்கள் அதை கவனிக்கிறார். 'கவலைப்படுகிறார்' என்ற வார்த்தைகளை ஆங்காங்கே பொருந்தக்கூடிய இடங்களில் உபயோகப்படுத்தியிருக்கிறோம் (தமிழாக்கியோன்.) நிச்சயமாக அவர் விசாரிக்கிறவராக இருக்கிறார். இப்பொழுதும் தொடர்ந்து மக்களுக்காக கவலைப்படுகிறவராய், அவர் இங்கே பூமியில் இருக்கையில் எந்த அளவு கவலைப்பட்டாரோ அதே அளவு இப்பொழுது இப்பூமியிலுள்ள தம் மக்களுக்காகக் கவலைப்படுகிறார். ஏனென்றால் அவர் பரிசுத்த யோவான் எழுதின புஸ்தகத்திலே 15-ம் அதிகாரத்திலே - நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால் நான் குறிப்பிடுகிற வாக்கியங்களிலே யோவான் 15:26, 27ல் கூறுகிறார். அவைகள் என் குறிப்புகளிலே என் முன்னால் வைக்கப்பட்டு இருக்கின்றன. 35 உங்களில் அநேகர் வேதவாக்கியங்களை எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் இதை அறியாமலிருந்தால் அநேக முறை இதை வேதத்திலே இருப்பதை நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். நான் வேத பாகத்தை எழுதி வைக்கிறேன். பின்பு இங்கே எதிலிருந்து பேசுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அது எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையிலே இருக்கிறது. பாருங்கள். 36 அவர் கூறியதாவது - அவருடைய நாமத்திலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவர் வரும் பொழுது, அவர் தம்மைப் பற்றி சாட்சி கொடுப்பார். - என்பதே. மற்ற வார்த்தையில் கூற வேண்டுமென்றால் அவர் செய்ததையே இவரும் செய்வார், (பரிசுத்தாவியானவர்) இவர் பரிசுத்தம் ஆக்கின கூடாரத்தின் மூலமாக அவர் செய்ததையே செய்வார். இப்பொழுது, அது நமக்காக என்ன செய்ய வேண்டும்-! பின்பு இன்று, அதே தேற்றும் கர்த்தராகிய இயேசு தேவன் கிரியை செய்கிற மற்றொரு பணியாகிய (office) பரிசுத்தாவியின் ரூபத்திலே இங்கு இன்றைக்கு நம் மத்தியில் கிரியை செய்கிறார் என்பதை நாம் அறிவோம். 37 அவர் இஸ்ரவேலுக்கு தேறுதலாகவும் அவர்கள் நோக்கிப் பார்த்து காணக் கூடிய அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்தார். தேவனால் நிரூபிக்கப்பட்ட சத்தியமான வார்த்தைகளைப் பேசுகிற தீர்க்கதரிசியை இஸ்ரவேல் கேட்டது. அது அவர்களின் தேறுதலாக இருந்தது. 38 மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் மனிதனாக இந்தப் பூமியிலே இருந்த பொழுது அவர் 'தேறுதலாக' (Comfort) இருந்தார். தேவன் தம்மையே ஒரு பிரதிநிதியாக, இயேசு கிறிஸ்து என்ற ஒரு 'மனுஷனின்,' மூலமாகத் தம்மை வெளிப்படுத்தினார். இந்த, ‘இயேசு,’ நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். மேலும் நான் பிதாவினிடத்திற்குப்போய், நானே ஆவியின் ரூபத்திலிருக்கிற பரிசுத்தாவியைத் திரும்ப அனுப்புவேன். மேலும் நான் உங்களுடனும் உங்களுக்குள்ளும் வாசமாயிருப்பேன். பரிசுத்தாவியாகிய அவர் வரும்பொழுது நான் இங்கே செய்த அதே காரியங்களை அவர் என் நாமத்திலே செய்வார் பாருங்கள். ஆகையினால் தான் அவர் பிராயச்சித்தம்-(Atotlement)-பிராயச்சித்தப் பலி (ஒருவருக்காக மற்றொருவர் ஏற்றுக் கொள்ளும் தண்டனை) செய்யப்பட்ட பின்பு அதற்கு எதிராகப் பேசுவது,'' மன்னிக்கப்படாத பாவம் ஆகும். அது பரிசுத்தாவியைக் குறித்த தேவ தூஷணம் ஆகும். 39. அவர், இந்த விதமாகவே செய்வார். உலகப்பிரகாரமான எண்ணத்தின் தேற்றரவாளன், அல்லது நம்மீது கரங்களைப் போட்டு அரவணைத்து நம்மை சிறிது நல்லவன் என்று நினைக்கப் பண்ணுகிற ஒரு வயோதிபனுடைய தேற்றரவாளன் அல்லது நீ எங்களுடையவன், உன்னைப் பெற்றுக் கொண்டோம். நீ மற்றவர்களுக்குச் சொந்தமானவனல்ல. ஏனென்றால் மற்றவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறும் வேதாகமக் கல்லூரியின் சபைப் போதனையா என்பதை நாம் அறிந்து கொள்வோம். 40. (இயேசு) இதை நேரடியாக உறுதிப்படுத்தினார் பாருங்கள். என்னுடைய நாமத்தில் அவர் பேசுவார். அவர் உங்கள் மீது இருக்கும் பொழுது நான் செய்யும் கிரியைகளை நிங்களும் செய்வீர்கள்' என்றார். பாருங்கள். அவர் நம்முடைய பாவங்களை எல்லாம் மன்னித்து, நம்முடைய நோய்களை எல்லாம் குணமாக்கி, வரப் போகிற ராஜ்யத்தின் தேற்றரவை நம்முடனே பேசி அவர் தேற்றிய விதமாகவே நம்மைத் தேற்றுவார் பாருங்கள், இவ்விதமாக தேவன், இயேசு கிறிஸ்துவினாலே தம்மை நிரூபித்ததைப் போல. இவர் தம்மை நம் மத்தியில் நிரூபிப்பார். மேலும் 2-தீமோத்தேயு-1 தீமோத்தேயு-3:16-ன்படி நாம் தேவனை அறிந்து கொள்ள வேண்டும். அன்றியும், தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், நாம் தேவனை மாம்சத்திலே பார்த்தோம். அவரும் நம்மில் ஒருவராக ஆகும் அளவிற்கு நமக்காக கவலைப்படுகிறவராக (விசாரிக்கிறவராக) வந்தார் என்று அறிகிற அறிவு தேவனுடைய தேற்றரவாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். மற்றொரு ஆளல்ல, ஆனால் தேவனே தம்மில் தாமே-! 41. இன்னும் ஓர் முறை தெளிவாகக் கூறினால் - அவர் பரிசுத்த ஆவியை அனுப்பி நமது தேவைகளுக்காக கவலைப்படுகிறார். நம்முடன் தங்கி இருக்கிறார். ஓ-! நம்மை எவ்வளவாக விசாரிக்கிறார். 42. நாம் இப்பொழுது வேதத்தின் மற்றொரு பாகத்துக்கு அல்லது மற்றொரு எண்ணத்திற்குச் செல்ல வேண்டும். அது நாம் பேசிக் கொண்டிருக்கும் காரியத்தை வலுப்படுத்துவதற்க்கும். இன்னும் மேலே செல்வதற்கு முன் நான் இதைச் சொல்ல வேண்டும். எல்லாரும் இந்தத் தேற்றரவாளனை உடையவர்களாக இல்லை, அதை அவர்கள் - அவர்கள் கொண்டவர்களாக இல்லை. அதை ஏன் அவர்கள் உடையவர்களாக இல்லையென்றால், அதை (அவரை) அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்கள் பொறுப்பு; ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இப்பொழுது நான் சொல்லுகிறதை கிரகிக்கக் கூடிய அளவுக்கு நீங்கள் ஆவிக்கு உரியவர்களாய் இருப்பீர்களென நம்புகிறேன், பாருங்கள். இன்னும் சில நிமிஷங்களில் ஜெபிக்கப்படப் போகிற ஒரு கூட்டம் மக்களுக்கு நான் பேசுகிறேன். தேற்றரவாளனாக அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் தேற்றரவு நமக்கு உண்டு. ஆனால் எல்லா மக்களும் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிலே அவர்கள் விசுவாசம் வைப்பதில்லை. பாருங்கள். அவர்கள் தங்கள் தேற்றரவை மற்ற இடங்களிலிருந்தும், மற்ற முறைகளின் மூலமும் சேகரிக்கின்றனர் அவர்கள் தேவனால் நியமிக்கப் பட்ட, தேற்றரவாளனைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக மற்ற ஏதாவதொரு தேற்றரவாளனை அடைய வேண்டியவர்களாக இருக்கின்றனர், ஏனென்றால், பாருங்கள், நீங்கள் ஜீவிப்பதற்காக என்று இல்லாமல் ஜீவிக்க முடியாது. 43. மேலும் நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் (பெற்றுக் கொண்டீர்கள்) என நம்புகிறேன். விசேஷமாக வைத்தியர்களால் தொடப்படக் கூடாத கஷ்டங்களுள்ளவர்கள், அசெளகரியத்துடன் இந்தக் காலையில் ஜெபிக்கப் படும்படியாக வந்திருக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 44. வைத்தியர்கள் மக்களுக்கு உதவுகிறார்கள் என்று நம்புகிறோம், தேவன் மருந்துகளின் மூலமாக, இரண சிகிச்சையின் மூலமாக, புரிந்து கொள்ளுதலின் மூலமாக சுகமளிக்கிறார் - என்று நான் நம்புகிறேன். தேவன் அன்பினால் சுகமளிக்கிறார். - ஓர் சிறிய அன்புகாட்டுதல் எவ்வளவோ காரியத்தைச் சாதிக்கிறது. யாராவது ஒருவர் முழுவதுமாக கஷ்டத்தில் இருக்கையில், அவர்களுக்காக கவலைப்படுவதைக் காண்பியுங்கள். பாருங்கள் தேவன் அன்பினால் சுகமளிக்கிறார், ஜெபத்தினால் தேவன் சுகமளிக்கிறார். கர்த்தர் சுகமளிக்கிறார். இதன் மூலமாவாவது, தேவன் சுகமளிக்கிறார். அற்புதங்களினால் தேவன் சுகமளிக்கிறார். தம்முடைய வார்த்தையினால் தேவன் சுகமளிக்கிறார். சுகமளிப்பது தேவனே-! ஏனென்றால் "உன் நோய்களை யெல்லாம் குணமாக்கும் கர்த்தர் நானே'' என்று அவர் கூறுகிறார். ஆகையால் இவையனைத்தும் ஒருங்கே சேர்ந்து கிரியை செய்கிறது. பல விதமான ஊழியங்களிலுள்ள மனிதன் அதற்காக ஒன்று சேர்ந்து கிரியை செய்யவேண்டும். பாருங்கள் ஆனால் அவர்கள் அந்த விதமாகச் செய்வதில்லை. ஏனென்றால் தேவனுடைய வார்த்தையில் நின்று எடுக்கக்கூடிய விசுவாச நிலைமையினின்று அவர்கள் தடுக்கப்படுகின்றனர் காரணம் அவர்களுடைய ஸ்தாபனம் அதைக்செய்வதற்கு உரிமை அளிப்பது இல்லை, உத்தரவு கொடுப்பதில்லை, ஆனால் இச்செயலானது சத்தியத்தை நிறுத்த முடியாது - தேவன் தம் முறையிலேயே தொடர்ந்து சுகமளித்துக் கொண்டே இருக்கின்றார். 45. ஆகையால் அவர்கள் மற்ற மூலப்பொருள்களிலிருந்து சந்தோஷத்தை (ஆதரவை, தேற்றரவை) பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர். முதலாவது ஆத்துமாவைக் குறித்துப் பேசுவோம். 46. அநேக மக்கள் தங்கள் ஆறுதலை, குடியின் மூலம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கினறனர் என்பதை நாம் கண்டு உள்ளோம்-! நம் மத்தியில் இந்நட்களில் பரவலாகப் பேசப்படுகிற பேச்சு என்ன என்று உங்களுக்குத் தெரியும். அநேக போதகன்மார்கள் பிரசங்க பீடத்துக்குச் செல்லும் முன் நன்றாக போதை உண்டாகும் அளவுக்குக் குடித்து விடுகின்றனர். குடி போதையினால் பிரசங்க மேடையில் தள்ளாடுகிற போதகன்மார்களைப் பார்க்கும் காரியம் தெரிந்த ஒன்றாகும் அது அவ்விம் இருக்கக்கூடாது. அப்படிச் செய்யப்படவும் கூடாது. அநேக முறைகளில் அந்த மனிதனை நாம் குற்றப்படுத்துகிறோம். நாம் அப்படிக் குற்றப்படுத்துவது விடுத்து, ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று மூல காரணத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். சாராயத்திலிருந்து மனம் மாறியவர்கள் அநேகர் அவர்களில் உண்டு. அவர்கள் அவ்விதமான நிலையிலிருப்பது மிகவும் வெட்க்கேடானதும் கேவலமானதும் என்று நாம் அறிவோம். ஆனால் பொய் சொல்லுவது, திருடுவது , பெண்களின் மேல் உள்ள காம வெறி, மற்றும் கற்பனைகளில் கூறப்பட்டவைகளைப் போன்றதே இக்குடி வெறிப்பழக்கமும், பாருங்கள் ஒரு வேளை ஒரு மனிதன் அதிக இச்சை உள்ளவனாய் பிறந்திருக்கலாம், அவன் தெருக்களில் இந்த நவீனகால அரை நிர்வாண உடுப்பணிந்து இருக்கும் பெண்களைப் பார்த்தவுடன் அடிக்கடி அவன் சோதனைக்குட்படுகின்றான். பாருங்கள், அவன் அந்த மனிதன் அந்த விதமாகப் பிறந்திருக்கிறான். இப்பொழுது குடிக்கின்ற அந்தப் பாதிரியார் அல்லது புகைபிடிக்கின்ற ஸ்திரி அல்லது - செய்கின்றவர் என்ன செய்ய வேண்டுமென்றால் 47. தன்னை ஒரு மனிதன் காணவேண்டுமென்று ஒழுக்கங்கெட்ட முறையில் எல்லாவற்றையும் சேர்த்து இணைத்து அரை நிர்வாணமாய் உடுத்துகிறவள், தன் செய்கையில் 'தேற்றரவை'ப் பெற முயற்சிக்கிறாள். வேறு காரணம் ஒன்றுமில்லை. அவள் ஒரு அரைப்பைத்தியக்காரி. பாருங்கள். சரியான புத்தி உள்ளவள், உணர்வுள்ளவள் ஒரு மனுஷனுக்கு முன்பாக தன்னை நிர்வாணம் ஆக்கமாட்டாள் பாருங்கள், அப்படிச் செய்யக் காரணமே இல்லை. ஆனால் அவள் அப்படிச் செய்ய முயற்சிக்கிறாள். இன்றைக்கு தெருக்களில் செல்லுகிற இளம்பெண்கள் இவ்விதமாக... அவர்கள் உண்மையாக அப்படிச் செய்கிறார்கள். நல்லது, நான் இப்படிக் கூறுவதைப் பொறுத்தருளமாறு கேட்கிறேன். ஞாபகம் வையுங்கள். இந்த ஒலிநாடா இங்குள்ள மக்களுக்கு மட்டுமல்ல, உலகமுழுவதும் செல்கின்றது. பாருங்கள். 48. மேலும் தன்னிலுள்ள ஆடைகளை அகற்றும் ஸ்திரி, உஷ்ணமாக இருப்பதால் அப்படிச் செய்வதாக சொல்லுகிறாள். சூரிய வெளிச்சத்திலே: (உஷ்ணத்திலே) நிர்வாணமாக நடந்தபின் சில உடுப்புகளை அணிந்தவளாய் திரும்புகிறாள் (உடுப்புகள் இருக்கும் போது தான் உடலில் குளிர்ச்சி உண்டாகிறது) பாபாகோஸிலும், நவாஜோஸிலும் உள்ள இந்தியர்கள், விசேஷமாக பெண்கள் நாணமுள்ளவர்களாக இருப்பதால் தடியான நூலில் நெய்யப்பட்ட ஜமுக்காளங்களைப் போர்த்துக்கொண்டு வெயிலில் உட்கார்ந்து குளிர்மையை பெறுகின்றனர். ஏன்-? எவ்வாறு-? அவர்களுக்கு அப்போது அதிகம் வியர்க்கிறது. அப்போது வீசும் காற்று அவர்களுக்கு குளிர்மையை அளிக்கின்றது. ஆனால் இங்கே உள்ள ஸ்திரிகளுக்கு வேறே காரணமில்லை. ஆனால் இவர்களுக்கு அது தெரியவில்லை, அதை உணர்வதில்லை. அவர்கள் அவ்விதமே செய்கிறார்கள் என்று கூறவில்லை. இவர்களில் அநேகர் மிகவும் அருமையானவார்கள். நான் மிகவும் கடினமாகச் சொல்வதற்கில்லை. நான் கூறுவதெல்லாம் அவர்களை விடுப்புறச் செய்ய முயற்சிப்பதே. பாருங்கள். 49. இது சாத்தானாக இருக்கிறது. பாருங்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும் ஆண்களைப் பாலுணர்வுடன் தூண்டுவதற்காக, அப்படிச் செய்து, அந்த ஆண்கள் தங்கள் டயர்கள் வெடிக்கும் அளவிற்குச் சடுதியாக காரை நிறுத்தி, ஒநாய் விசில்களை அடிக்கவும் செய்கிறது. அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்-? ஸ்திரிகள் செய்வதெல்லாம் மனிதனைத் தூண்டி அப்படிச் செய்வதற்காகவே, நீ ஏன் ஸ்திரியே நல்ல உஷ்ணமான 4 மணி பகல் வேலையில்; அப்படி வெளியே தங்கள் வேலைகள் மற்றவைகளிலிருந்து திரும்பும் பொழுது; நீ புல் மேய்வதற்காக போகிறாய்-? அது பைத்தியத் தன்மையைக் குறிக்கிறது. அவர்களில் அநேகருக்கு என்னைவிட லட்சக் கணக்கான மைகள் உயர்வான புத்திசாலித்தனமும் புத்தி கூர்மையும் இருக்கலாம், ஆனால் உன் புத்தி கூர்மையையும் உன் கிரியையும் தேவன் உடைய வார்த்தையை வைத்து சோதிக்கிறேன். பாருங்கள், அது தற்கால புத்தி கூர்மை. ஆனால் அவர்களின் வெளிப்படையான கிரியையும் அவர்களின் ஜீவியத்தின் கனிகளும் அதை நிரூபிக்கின்றன, ஆகையால் அதிலே தேற்றரவு பெற அவர்கள் முயற்சிக்கின்றனர். 50 அவர்களில் அநேகர் நல்லது நான் அப்படிச் செய்கிறதில்லை'' என்று கூறலாம். ஆனால் நீ பாலுணர்வைக் கிளப்பக் கூடிய வகையில், உடை உடுத்தி, அடுத்த நாள் காலையில் ஆலயத்தில் உனக்கருகில் உட்காரப் போகும் ஸ்திரீயைக் காட்டிலும் நவீனமாக உடுத்த முயற்சிக்கிற நீ, ஒரு நல்ல தொப்பியையோ அல்லது பூரணமான வஸ்திரத்தையோ, உடுத்தலாம். அதற்குரிய வசதி உன்னிடத்தில் உண்டு. பாருங்கள். ‘‘பாவம்,’’ எங்கெல்லாம் செல்கிறதென்று, இவ்விதமாகச்செய்வதில் ஆறுதல் பெற முயற்சிக்கின்றனர் மேலும் அவர்கள் அதைப்பெற்று... 51. இந்தக் காரியம் எந்த அளவுக்கு ஆகியிருக்கிறதென்றால் தேசம் முழுவதுமே, ஏன் உலகம் முழுவதும், அதில் மூழ்க்கடிக்கப்பட்டதாக ஆகியிருக்கிறது. அநேக காரியங்களை இங்கே நான் கூறலாம் ஆனால் சுகமளிக்கும் ஆராதனை நடக்க வேண்டி இருக்கிறது. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக நான் இதைப் பற்றி பரவலாகப் பேசாமல் விட்டு விடுகிறேன் நான் சொல்வதை புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறாக இது அரசியல் உலகம், அரசியல் வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தேசத்தின் சன்மார்க்க வாழ்க்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வைப் பாதித்திருக்கின்றது. அரசியல்வாதியாக ஆக விரும்புகிற ஒரு மனிதன், அரசியல்வாதி என்கிற பெயர் பெறும் வரைக்கும் அது அவ்விடத்தை அடைகிறது. பெரிய பெயர் பிரஸ்தாபத்திற்காக, பெரிய அரசியல்வாதி என்கிற பெயரைப் பெற கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்து, இயந்திரங்களை அமர்த்தி ஓட்டுக்களைச் சம்பாதித்து அதிகப் பணத்தைப் பெறவும் அது செய்கிறது. இதைப் பற்றி வேண்டிய அளவு கூறி விட்டேன். நான் எதைப்பற்றிப் பேசுகிறேனென்று உங்களுக்குத் தெரியும். 52. சமூக வாழ்க்கை-! ஜனங்கள் இந்தப் பைத்தியக்கார சமூக வாழ்க்கையில் ஒன்றுகூட முயற்சிக்கின்றனர். உலகமானது இப்பொழுது செய்கின்ற காரியங்களைப் பார்க்கும்போது, இந்த உலகம் பைத்தியம் பிடிக்காத உலகம் என்று சொல்லாதிருங்கள். அதி நிச்சயமாகவே இது பைத்தியக்கார உலகமே. இது மனம் பதறிய உலகம். கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே நாம் இதற்குத் தப்பமுடியும், கவனியுங்கள். இந்த சமூக வாழ்க்கையிலே சிறு சிறு குழுக்களாக சமூகப்படுத்தி, தங்கள் குழுவிலே உள்சென்று தாங்கள் தான் நல்ல குழுவினர்- மற்ற குழுவைக் காட்டிலும் தங்கள் குழுவே சிறந்தது'' என்று கூறுகின்றனர். பாருங்கள்-! அது இவ்விதமாகவே செய்யப்படுகிறது. இக்காரியங்கள் கடைசியில் ஒழுக்கங்களைக் குலைத்துப் போடுகின்றன. உண்மையிலேயே, நண்பர்களே-! 'ஒழுக்கம்' என்று ஒரு வார்த்தை உண்டா என்று கேட்கும் அளவுக்கு இத்தேசத்தின் 90 சதவீதத்தினர் இருக்கின்றனர். "சன்மார்க்கம்' என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர். அது அவர்கள் இடமிருந்து தப்பி விடுகிறது. மிகவும் வஞ்சனையாக அது செய்யப்படுகிறது. 53. சாத்தான் மிகவும் வஞ்சனையுள்ளவன், பாருங்கள், அவனுடைய வஞ்சனை இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக நுழைந்து அவன் முற்றிலுமாக கைப்பற்றுகிறான். அவனுக்கு ஏராளமான நேரம் இருக்கிறது அவன் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக ஓடி, முதல் காரியமாக, மெதுவாக ஜனங்களை அதற்குள்ளே இழுத்துக் கொள்ளுகிறான். நான் பதினாறு வயது வாலிபனாக இருந்த பொழுது, இப்பொழுது அரை நிர்வாணத்தோடு நடக்கும் ஸ்திரீகள் தெருவில் சென்றால் அவளை சிறைச் சாலைக்குள் தள்ளி விட்டிருப்பார்கள். நல்லது, அக்காலத்திலே அது தவறாக இருக்குமானால் இப்பொழுதும் அது தவறே, சாத்தான் உடுப்புகளை குறைத்துக் கொண்டே, கீழே இழுத்துக் கொண்டே போகிறான். என்றாகிலும் ஓர் நாள் இப்பொழுது செய்யப்படும் மிக்கினி அல்லது பிக்கினி' என்று சொல்லப்படும் அளவு உடுப்புக்கும் சிறியதான அத்தி இலையின் அளவுக்கும் கூட உடுப்பை குறைத்துச் செய்யும்படி செய்வான். நீங்கள் ஞாபகம் வையுங்கள். அது சரியே - சரியாக அது பின்னோக்கியே செல்கின்றது. இப்போதே நடைமுறையில் காணப்படுகின்றது. 54. நாம் காண்கிறபடி, ஜனங்கள் இந்தக்காரியங்களின் மூலமாக ஆறுதலைக் கண்டடைய முயற்சிக்கிறார்கள். அவர்கள் இவைகள் மூலம் ஆறுதல் பெற முயற்சித்து, கடைசியில் 'இந்த ஆறுதலே' பக்தி மார்க்கமாக' ஆகின்றது. இக் காரியங்களையே உங்கள் மதமாக பக்தி மார்க்கமாக ஆக்கி விட்டீர்கள். பாருங்கள். மரணமானது உங்களுக்கு முன்னாலே படுத்திருக்கிறது என்று உணரும் பொழுது, அது என்ன பரிதாபமான நிலை-! கடைசியில் இவை எல்லாம் நடந்து, தேசத்திலே உருப்படியான நிலைவரமான எதையும் கட்டக்கூடிய அஸ்திபாரமே இல்லாத அளவுக்கு ஆகிவிடுகின்றது. 55. நான் உங்களை ஒன்று கேட்கிறேன், நீ வேதத்தை தவிர வேறு ஒன்றையும் விசுவாசிக்க முடியாது. இன்னும் கிறிஸ்து நமக்கு இருக்கிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாருங்கள். நீங்கள் எல்லாவற்றையும் விசுவாசிக்க முடியாது. உதாரணமாக, டெலிவிஷனை திருப்பி அங்கே கூறப்படும் வியாபாரப் பொருட்களைப் பற்றிப் பார்க்கிறீர்கள், அந்த வியாபாரப் பொருட்களின்படி நூற்றுக்கு ஒரு வீதம் வாழ்ந்தால் கூட ஒரே வாரத்தில் மரித்துப் போவீர்கள் பாருங்கள். அப்படிச் செய்ய முடியாது. எந்தப் பொருள் மோசமாக இருக்கிறதோ, அந்த பொருளை அதே கம்பெனி விற்பதற்கு முயற்சிக்கிறது. மற்றொரு கம்பெனி வந்து இந்தப் பொருளை எடுக்காமல் மற்ற பொருளை எடுத்து விற்பனை செய்கிறது. அமெரிக்க மக்கள் இந்த விதமான பொருட்களையே விரும்பி வாங்கி கடைசியில் எல்லாம் நாசமாகி நம்பிக்கைக்கே இடமில்லாமற் போகிறது. எதை நம்ப வேண்டும் என்று மக்களுக்குத் தெரியவில்லை. கர்த்தருக்குச் சித்தமானால், உங்களுக்கு தேறுதல் (ஆறுதல்) தேவையாயிருப்பின், சிறிது நேரம் கழித்து, எதை விசுவாசிக்க வேண்டும் என்று கூறப்போகிறேன். 56. மக்கள் ஐந்து டாலர் கடன் வாங்குவதற்குக் நம்பிக்கைப் பத்திரத்தில் கையொப்பமிடும் அளவுக்கு, அவர்கள் பொய் சொல்லியும், ஏமாற்றியும் திருடியும் அலைகிறார்கள். பாருங்கள், வேதம் இவ்விதமாகக் கூறுகிறது. கடைசிகாலங்களில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மத்தியில் மாத்திரமே அன்பு காணப்படும். மற்ற ஒரு இடத்திலும் அன்பு காணப்படாது. அது சரியே வேதம் அவ்விதமே கூறுகிறது. மனைவிக்கு விரோதமாக புருஷனும், புருஷனுக்கு விரோதமாக மனைவியும் பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகளும். தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் மத்தியில் மாத்திரமே அன்பு காணப்படும். 57. சமூக வாழ்க்கையின் வாயிலாக இன்று சபைகளும் அதே காரியத்திற்குள் சென்றிருக்கிறது. தங்களுடைய சமூக வாழ்க்கை அரசியல் மற்றும் அநேக காரியங்களைச் சபைகளுக்குள் கொணர்ந்து, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அறியாத ஒரு குழப்பத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அரசியலை ஆலயத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தங்களுடைய சமூக வாழ்க்கை நடவடிக்கைகளைச் சபைக்குள் கொண்டு வந்து, தங்களுடைய பிங்கோக்களையும், நடனங்களையும் விருந்துகளையும் தேவனுடைய வீட்டில் நடத்துகின்றனர். ஏன்-! இது என்னே பரிதாபமான காட்சி. அவர்கள் நல்லது. ஆலயத்திற்குள் அல்ல, அதை அடுத்த கட்டடத்தில் தானே,' என்று கூறலாம். 58. ஞாபகமிருக்கட்டும், என்னுடைய பிதாவின் வீடு ஜெப வீடு என்று எழுதி இருக்கவில்லையா-? நீங்களோ அதை கள்ளர் குகையாக்கினீர்கள்,'' என்று கூறி வியாபாரிகளை தங்கள் வியாபாரத்தினின்று இயேசு விரட்டியடித்த இடமும் ஆலயத்தைச் சேர்ந்து தொடர்ச்சியாக இருந்த ஸ்தலமே, பாருங்கள். அது தவறு அது எங்கே, என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. சபை கட்டிடமானது உபயோகப்... சபை என்பது கட்டிடமல்ல, அந்தக் கட்டிடத்தில் உள்ள மக்களே. அவர்களே இந்தக் காரியங்களை எதிர் நோக்குகின்றனர். அது தவறேயாகும் அவர்களே இந்தப்பழக்கத்தை கொண்டு வந்தவர்கள் 59. இன்று சபைகளும், டெலிவிஷன் வியாபாரத்தைப் போலவும், மற்றவைகளைப் போலவும் எப்போதும் வாக்குகளைச் செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால் தாங்கள், வாக்குச் செய்தவைகளை, ஒருக்காலும் செய்து தருவதில்லை. என்னுடைய ஒரு பழைய வாக்கியத்தை ஞாபகப் படுத்த விரும்புகிறேன். அது என்ன என்றால். “மனிதன் தேவன் செய்தவை களுக்காக அவரைத் துதிக்கிறான்- அவர் தனக்கு என்னத்தைச் செய்யப் போகிறார் என்ற ஆவலில் அவர் செய்யப்போகிறவைகளுக்காக துதிக்கிறான். ஆனால் அவர் செய்து கொண்டிருக்கும் நிகழ் காரியங்களை கவனிக்காதே போகிறன்,'' பாருங்கள். அவர்கள் - அவர்கள் தோல்வி அடைகிறார்கள் இன்றையதை அறிந்து கொள்ள தவறியவர்களாய் தங்களையே கெடுத்துச் சிறிது காலத்தில் சரித்திரமாக மாறுகிறார்கள். இயேசு முன்பு ஈந்தளித்த தேற்றரவைப் பற்றி பேசலாம், மேலும் வருங்காலங்களில் அவர் கொடுக்கப் போகும் தேற்றரவைப் பற்றிப் பேசலாம். ஆனால் இப்பொழுது உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆதரவை உதறித் தள்ளுகிறீர்கள். பாருங்கள். அதே கோட்பாட்டில் நாம் இதைக் காண்கிறோம். நல்லது அது பெரிய காரியமாகி விட்டது. அவைகள் வந்ததைக் கவனியுங்கள்... 60. பெந்தேகோஸ்தேயினரும் தங்கள் சபைகளில் இவ்வாறு செய்கின்றனர். பெந்தேகொஸ்தே குழுவினரும் இந்த விதமாக எப்போதும் வாக்குகளைச் செய்து விட்டு விருதாவாகச் செல்கின்றனர். அதைச் செய்யவதில்லை. எப்போதும் அக்குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு உணர்ச்சி உண்டாகிறது. இது வேதத்தின்படியா இல்லையா என்று பார்ப்பதில்லை. உண்மைத் தன்மையே இல்லாத அளவுக்கு வாக்குகளைச் செய்து கொண்டே போகின்றனர். அவைகளை ஒருக்காலும் நிறைவேற்றுவதே கிடையாது. உண்மைத் தன்மையின் உண்மையான கருப்பொருளை ஜனங்கள் அடைவதே கிடையாது 'உண்மை,' என்ற வார்த்தையின் அர்த்தமே மறைந்து விட்டது. ஆங்கில வார்த்தையின் 'Sincerity' 'உண்மை' என்ற பதம் அதனுடைய மதிப்பையே இழந்து விட்டது. ஜனங்கள் ஜீவிக்கிற விதத்தில் வார்த்தை ஆனது அதன் உடைய அர்த்தத்தை இழந்து விட்டது. இப்பொழுது அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. 61. பாவ அறிக்கைகளிலும் அப்படியே இப்பொழுது என் வார்த்தையை நேரிலும் ஒலிநாடாவிலும் கேட்கும் மக்கள் மிகவும் உன்னிப்பாக இந்த குறிப்பிட்ட வார்த்தைகளைக் கவனிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். அது - அது... 62. நீ ஆழமுள்ள உண்மைத்துவமுள்ளவனாய் இருக்க வேண்டும். நீ சரியாகப் புரிந்து கொண்டாலொழிய நீ உண்மை உள்ளவனாய் இருக்க முடியாது. நீ யூகிகிக்றவனாகவோ அல்லது இப்படி இருக்கலாம் என்றோ அல்லது ஏதோ நம்புகிறேன் என்றோ இருப்பாயானால்," பின்பு தேவன் விரும்புகிற உண்மைத்துவத்தின் ஆழம் இருக்க முடியாது. விசுவாசமானது: ஏதோ நம்புகிறேன் என்றோ அல்லது இப்படி இருக்கலாம் என்றோ இருக்க முடியாது. அது அதிநிச்சயமான ஆமென்' என்றே இருக்கமுடியும். அதுவே உன் முடிவான நம்பிக்கை. அது... அது- உன்னுடைய அதிநிச்சயமானதாகும். இது உன்னோடு கட்டப்பட்ட ஒரு பொருளைப்போன்றது. பாருங்கள், உங்கள் முடிவுக் கட்டத்துக்கு வந்துவிட்டீர்கள். அதுவே சத்தியம். அது சத்தியத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அது அவ்வாறாகவே இருக்கவேண்டும். பின்பு நீ உன்னுடைய மனதிலே அதை உணர்ந்தவுடன் நீ அதை அடையும்படி உனக்குள்ள எல்லாவற்றையும் விற்றுவிட்டு, உன்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மற்றும் உனக்குள்ள எல்லாவற்றுடனும் நீ அதை அணுகவேண்டும். முத்துக்களை வாங்கின மனிதனுடைய உவமையிலே இயேசு கிருபையாக கற்றுத் தந்தது போல, அவன் அந்த விலையேறப் பெற்ற ஒன்றைக் கண்டவுடன், அதை அடையும் பொருட்டு தனக்கு உண்டான மற்ற அனைத்தையும் விற்றுப் போட்டான். தனக்கிருந்த மற்ற எல்லா உண்மைகளும் மற்றவைகள் அனைத்தும் நல்ல முத்துக்கள் என்று நினைத்தான். ஆனால் இந்த ஒன்று மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருந்தது மேலும் நீ தேவனுடைய முடிவானதை (ultimate) அவருடைய வார்த்தையை. ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதுள்ள ஒரு வாக்குத்தத்தத்தை காணும் போது நீ முதலாவது அது தேவனுடைய வார்த்தை என்றும், நீ காண செய்யப்படும் காரியம் தேவன் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே இப்படி இல்லை. அங்கே இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம், இப்படி இருக்கக் காணப்படலாம்," என்றெல்லாம் கூடாது. அது தேவன் பின்பு நீ குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்தவுடன் அதுவே அந்த விலையேறப் பெற்ற "முத்து," மற்றவர்கள் அதற்கு விரோதமாகச் சொல்லும்பொழுது, "நீ எதுவாக இருந்தாலும் அதை விட்டு அகலவேண்டும். மனுஷன் தன் முயற்சியால் பெற்றுக் கொண்டதை நீ நோக்கக் கூடாது. தேவன் என்ன கூறியிருக்கிறார், என்ன வாக்குப் பண்ணியிருக்கிறார் என்பதை மாத்திரம் நோக்கிப் பார்த்து, அவர் அதைச் செய்யும்படி விட்டு விடவேண்டும். பின்பு அது அங்கு உன்னுடைய முடிவான உரிமை ஆகும். அதன் பின்பு கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலத்திலுள்ள உனக்குள்ள எல்லாம், அந்த நேரத்தில் ஜீவனும் மரணமும் போன்ற காரியமாக நினைத்து அதன் மீது வைக்கப்பட வேண்டும். 63 பாவ அறிக்கையில், உண்மையான பாவ அறிக்கையில் குறைவு உள்ளவர்களாக இருப்பது சுகம் பெறுவதற்குள்ள தடைகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது உதாரணமாக இது மோசமானதாக கருதப்படலாம். ஆனால் அந்நோக்கத்தில் இதைக் கூறவில்லை. ஆனால் என்னுடைய மனைவி இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு, நான் இன்று வெளியே சென்று மற்றொரு ஸ்திரியின் மீது என்னுடைய கரங்களைப் போட்டு அவளைக் காதலிக்கும் பொழுது, அதைச் செய்த பின் அது தவறு, முற்றிலும் தவறு என்று அறிகிறேன். இப்பொழுது, நிச்சயமாக என்னுடைய தேற்றரவாளன் அவ்விதம் செய்வதிலிருந்து என்னைக் காத்துக்கொள்வார். பாருங்கள். பாருங்கள், ஆனால் அப்படிச் செய்தேன் என்று வைத்துக் கொண்டால், அல்லது நான் அந்த விதமாகவோ அல்லது அதைப்போலவோ செய்ய நேரிட்டால், தேவனிடத்திலே எதையும் சொல்வதற்கு முன்னால் முதல் காரியமாக என்னுடைய மனைவி இடத்திலே என்னை மன்னித்துவிடு,'' என்று சொல்வேன். ஏனென்றால் அவளுக்கு விரோதமாக நான் பாவஞ்செய்தேன். நீ பலி பீடத்தண்டையிலே வந்து, நீ செய்த குற்றத்தை நினைக்கும் பொழுது, அதை முதலாவது சரி செய்யச் செல்ல வேண்டும். அதன் பின்பு உன் காணிக்கையைப் படைப்பாயாக. நான் பாவ அறிக்கை என்பது காரியத்தை சரி செய்திடும் என்று நம்புகிறேன். இவ்விதமாக இல்லாவிட்டால் அது உண்மையான பாவ அறிக்கை அல்ல. 64. நான் இப்பொழுது, நான் தவறு செய்ததை அறிக்கையிடப் போகிறேன்'' என்று சொன்னால் என்ன-? என் நல்ல தேவனே, என் சிநேகிதனே, நான் உம்மை முழுவதும் அறிவேன் என்பது உமக்குத் தெரியும். தேவனுக்கு ஸ்தோத்திரம்-! அல்லேலூயா-! நீர் மிகவும் நல்ல பழமையான ஒருவர். என்னை மன்னியும். என்னுடைய மிகப்பழமையான நண்பனே, நீர் அறிவீர். நான் அவ்விதமாக அதை எண்ணவில்லை,' பாருங்கள் 65. நீ இப்பொழுது அதைப் பரிசுத்தக்குலைச்சல் எனலாம். ஆம், அப்படித்தான். ஒரு பாவ அறிக்கையை அப்படிச் செய்தால், அது அவ்விதமாகத் தான் கருதப்படும். 66. ஆனால் நான் இவ்விதமாகச் சொல்லிக் கொண்டே போனால், கர்த்தாவே; நான் - நான் அந்த விதமாகச் செய்தேன் என்று அர்த்தம் கொள்ளவில்லை. நீர் உதவி செய்யும், நான் அவ்விதமாக திரும்பவும் செய்ய மாட்டேன்,'' நான் முதலாவது சென்று என் மனைவியுடன் அந்தக் காரியத்தைச் சரி செய்யும் வரைக்கும் அவர் என்னுடைய எந்த தியாகத்தையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். 67. அதே அவமரியாதை உடன் என் மனைவியிடத்தில் பின்பு வந்து பார் பெரிய பெண்ணே-! என்னுடைய பழைய நண்பனே என்னுடைய பிள்ளைகளின் முதிர்ந்ததாயே, என்னுடைய இதயக்கனியே, நாம் இருவரும். அநேக வருஷங்களாக பழம் நண்பர்களாகவே இருக்கிறோம். மற்றொரு ஸ்திரியின் மீது என் கைகளைப் போட்டால், அதினால் என்ன-? சொல். அதைப் பற்றி என்ன சொல்லுகிறாய், என் மனைவியே, என்னை மன்னித்து விடுவாயோ-?'' இவ்வாறு பசப்பினால் என்ன பிரயோஜனம்-? 68. அவளுக்கு எப்படி இருக்கும் என்று என்னால் யூகிக்க முடியும். அவள் "என் பருஷனுக்கு என்ன நேர்ந்தது-?'' என்று நினைப்பாள். பார்- இப்பொழுது முதல் காரியமாக நான் அவளிடம் விளையாடுகிறேனா இல்லையா என்று அவளுக்கு தெரியாது. 69. மேலும் நீ இவ்விதமாக உன்னுடனிருக்கும் மனிதனுக்கோ தேவனுக்கோ ஒரு பாவ அறிக்கையைச் செய்ய முயச்சிக்காதே. நீ ஆழமான உண்மைத் துவத்துடனும் உன்னுடைய பாவத்துக்காக தெய்வீக துக்கத்துடனும் செல்ல வேண்டும். முதலாவது நீ துக்கப்பட வேண்டும். நான் இவ்விதமாக என் இருதயத்தின் இனிப்பானவளே-! இங்கே வா. நான் கூறப் போவது நமது மண வாழ்க்கையின் மீதி நாட்களைப் பாதிக்கக் கூடியதாக இருக்கலாம். இப்பொழுது என் இதயராணியாக இருக்கும் மற்றொரு ஸ்திரியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னை இத்தனை வருஷங்களாக எவ்வளவாக நேசித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது இந்தக் கட்டத்திலிருந்து என்னை விட்டு விடலாம். என்னுடனே ஜீவிக்காமல் போகலாம். என்னை ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விடலாம், அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காரியத்தைச் சரி செய்வதற்காக நான் உன்னோடு நல்மனம் பொருந்த வேண்டும்' அவளுக்கு என் இருதயத்தில் ஆழங்களிலிருந்து சொல்ல வேண்டும். 70. தேவனிடத்திலும் இதே மாதிரி நான் சொல்ல வேண்டும். கர்த்தருடைய கிருபையினால் திரும்பவுமாக இவ்வாறு செய்ய மாட்டேன் என்று தேவன் இடத்திலும் அவளிடத்திலும் எல்லா உண்மைத் தன்மையுடன் நான் கூற வேண்டும். பாருங்கள். உண்மையாக இப்படிச்செய்ய... நான் அவளிடத்தில் காரியங்களைக் கூறி அவளை நம்பச் செய்யலாம். ஆனால் என் பேச்சு தேவனிடத்தில் எடுபடாமல் செல்லலாம். அவர் என் இருதயத்தை அறிவார். இன்னும் சில வருடங்கள் கழித்து, தேவன் அனுமதித்தால், இந்த உலகத்தை விட்டே எடுத்துக் கொள்ளப்படுவோம். ஆனால் அது தேவனுடன் நித்தியத்தைக் குறிக்கிறதானது. ஆகையால் நான் ஆழமான உண்மைத் தன்மையுடன் தேவனிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். நான் அப்படி உண்மையுடன் இல்லாவிட்டால் தேவன், நான் பேசுவதைக் கேட்பது நான் அவருடைய நேரத்தை வீணாக்குவதாகும். 71. இன்றைக்கு அதுதான் மக்களிடையே காணப்படும் காரியம், மக்கள் இடையே காணப்படும் உண்மைத் தன்மையில் ஆழம் இல்லவே இல்லை. 72. ஜெபிக்கப்படும் படியாக வருகிற ஸ்திரீயாவது புருஷனாவது முதலாவது அவர்கள் செய்த காரியங்களை அறிக்கை செய்ய வேண்டும். ஒவ்வொரு காரியத்தையும் சரி செய்ய வேண்டும். சில சமயங்களில் பிரசங்க மேடையில் "கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பது எவ்வளவு தூரமாக காணப்படுகிறது என்பதை கவனியுங்கள் பாருங்கள். மக்களுடைய விசுவாசத்தினால் தரிசனம் முற்றுப் பெறுகிறது. முழுமை அடைகிறது இதை தேவன் ஒரு ஈவினால் வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆனால் சுகம் அடைதலானது வித்தியாசமானது. தேவன் அதை கண்டு கொள்ளுகிறார், 73. பாவ அறிக்கைக்காக வரும் மக்கள் ஆழமான உண்மைத் தன்மையுடன் வர வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் என்ற இடத்தில் நடந்ததை எழுதி வைத்திருக்கிறேன். வாசிக்க நேரமில்லை. ஆம், அது பிங்காம்டனில் தான் நடந்தது. என்ன தவறு-? எண்டிகோட் ஷு கம்பெனி உள்ள அந்த இடத்திலே, பெரிய அரங்கிலே கூட்டங்கள் நடந்தன. ஒரு நாள் காலை பில்லிபால் நான் இருந்த அறைக்கு அடுத்த அறையில் இருந்தான். அதிகக் குளிருடன் காற்றும் வீசிக் கொண்டு இருந்தது. அங்கே ஜனங்கள் மத்தியில் உண்மைத்தன்மை (Sincerity) குறைந்து காணப்பட்டது. ஏன் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட மனிதன் சுகம் பெற்றதைப் பற்றிப் பேசுகிறேன். அவன் பெரிய வியாதியினால் கட்டப்பட்டவனாய் இருந்து, அந்த இரவு சுகம் பெற்றவனாய் அங்கு நின்றான். நாங்கள் புறப்படுவதற்கு முன்னால், ஐந்து நாட்கள் கழித்து அந்த வியாதி திரும்ப அந்த ஆள் மேல் வந்து விட்டது. பாருங்கள்-! பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் அந்த வியாதி அவனை விட்டு நீங்கியது. இங்கே சிறிது நேரத்திற்கு முன்பு சுகமாக்கப்பட்ட வாலிப ஸ்திரீயைப் போலவும் நேற்றிரவு சுகமாக்கப்பட்ட வாலிப புருஷனைப் போலவும், பரிசுத்த ஆவியானவர் அந்தக் கட்டை நீக்கியிருந்தார். ஆனால் உன்னிலிருந்ததை நீக்கிப்போட்ட அதே தேவன் தொடர்ந்து உன்னிலிருந்து அதை நீக்கி வைக்க அதே அபிஷேகம் தேவை என்பதை உன் இருதயத்தின் ஆழத்தின் உண்மைத் தன்மையுடன் உணர வேண்டும். பாருங்கள். ஒரு நாள் காலையில் நல்ல வெளிச்சத்தில் கீழ்க் கண்டவாறு பேசினார், நீ பிரசங்க மேடையிலாவது அல்லது எங்காவது ஜனங்களை வரவழைத்து, நீ அவர்களுக்காக ஜெபிக்கும் முன், ''அவர்கள் செய்தவைகளை அறிக்கை இடும்படி சொல்.'' பாருங்கள். உண்மைத்துவத்தின் ஆழம், 74 உலகமானது மனந்திரும்பாவிடில் அழிந்து தான் ஆக வேண்டும். பாருங்கள். பாவ அறிக்கையே இன்றைய உலகத்தின் தேவையாகும். நேர்மையான அறிக்கை. 75 அது (பாவ அறிக்கை) வியாதிக்கு மருந்தைப் போன்றது. நாமெல்லாரும் ஒரு புட்டியில் மருந்து இருக்கும் போது அது என்ன மருந்து என்றும் எந்த வியாதிக்கு என்றும் எழுதியிருக்கிறதை நாம் காணலாம். எந்த வியாதியைச் சுகப்படுத்தும் என்றும் காணலாம். அந்த புட்டியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளை நான் வேதத்திற்கு ஒப்பிடுகிறேன். நமது பள்ளிகள், வேதபாடக் கல்லூரிகள் அந்த வார்த்தைகளை வாசிக்கின்றன. ஆனால், அந்த குறிப்புகளை வாசித்து அந்த மருந்தை எப்படி எடுக்க வேண்டும் என்று அறிந்தால் மட்டும் வியாதி சுகமாவதில்லை. பாருங்கள்-! அது மருந்தாக இருப்பதினால் அந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். ஒரு மனிதன், "நான் ஒரு வேதசாஸ்திரத்தைக் கற்றவன். வேதத்திலுள்ள காரியத்தை என்னிடம் பேசவேண்டாம். எனக்கு வேத எழுத்துக்கள் தெரியும். எனக்கு வேதம் இன்ன இன்ன பேசுகிறது என்று தெரியும்' என்று சொல்ல முடியும். 76 உதாரணமாக யோவான் 5:24 இல் கூறியபடி, என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; என்று எழுதியிருக்கிறது அல்லது ஜேம்ஸ் அரசன் பதிப்பில் எழுதி இருக்கிறபடி, 'எப்போதும் நிலைத்திருக்கிற' (everlasting) அல்லது நித்தியமான' (eternal. என அவன் விசுவாசித்ததினால் நித்தியஜீவன் உண்டு. அநேக மக்கள் தாங்கள் விசுவாசிப்பதாகக் கூறுகிறார்கள். அது உண்மையே. வேதம் சரியாகக் கூறுகிறது. நான் டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை வைத்து இருக்கிறேன். அதில் எழுதி இருக்கிறதை வாசிக்கிறேன். என் பாவத்துக்குரிய பரிகாரத்தை வாசிக்கிறேன். நான் அதை எடுக்கலாமா-? அதை விசுவாசிக்கலாமா-? ''நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறலாம். ஆனால் விசுவாசிக்கிறேனா-? அது தான் அடுத்த காரியம். அதை வெறுமனே வாசித்து, எழுதப்பட்ட கட்டளைகளை அறிந்தால் மாத்திரம் வியாதி சுகம் அடைந்து விடாது. நம் மீது குறை என்னவென்றால் பரிகாரம் சொல்லப் பட்டதை நாம் எடுத்துக்கொள்வது கிடையாது. நமக்கு பரிகாரம் கிடைத்து உள்ளது. ஆனால் அதை எடுத்து உபயோகிப்பதில்லை. நாம் வாசிக்க முடிகிறதினால் பரிகாரத்தை எடுத்துக் கொள்வதாகச் சொல்லுகிறோம். ஆனால் உண்மையில் பரிகாரத்தை எடுப்பதில்லை. பாருங்கள். சுவிசேஷமும் இந்த விஷயத்தில் அப்படித்தான் ஒரு மருந்தைப் போன்றதே. பரிகாரமானது வியாதியஸ்தனைக் குணப்படுத்துகிறது என்று நிரூபிக்கப் பட்ட போதிலும், வியாதியஸ்தன் அந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்ட விதம், மற்றும் அந்த பரிகாரத்திலுள்ள ஒவ்வொரு அவுன்ஸ் மருந்தைப் பற்றியும் மற்றும் ஒரு குறிப்பிட்ட மருந்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானியின் பேர் முதலாய் (உதாரணம் - இளம் பிள்ளை வாதத் தடுப்பு ஊசியைக் கண்டு பிடித்த "சாலக்' என்பவரை) அறிந்திருக்கலாம். நாம் 'வார்த்தையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்த போதிலும் அதை எடுப்பதற்கு மறுத்தோமானால் அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. பாருங்கள். அதினால் ஒரு உபயோகமும் இல்லை. 77 ஆனால் நாம் என்ன சொல்லுகிறோமென்றால், ''ஆனால் நாம் அதை எடுத்தோம்'' என்கிறோம். நீ அதை எடுத்தேன் என்று சொல்லி, வியாதியஸ்தனுக்கு ஒரு குணமும் கிடைக்காவிடில், அந்த மருந்தை எடுக்கவில்லை என்று பொருளாகிறது. அவ்வளவு தான். எப்படி-! சுவற்றில் இருக்கும் கடிகாரம் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லா விட்டால், நான் இங்கே தங்க விரும்புகிறேன். சுவிசேஷமானது இவைகளை எல்லாம் நிரூபித்தும் அவர்கள் அதை எடுத்தோம் என்று சொல்லியும், ஆனால் வாழ்க்கையில் அதை எடுக்கவில்லை என்று காண்பிக்கிறார்கள். சின்ன காரியமாகிய ஸ்திரீகள் முடிகளை வெட்டிக் கொள்வதும், குட்டையான ஆடைகளை அணிவதைப் பற்றியும் வேதத்திலே வாசித்தும், அந்த மருந்து சொல்லுகிறதற்கு வேறுவிதமாக வாழ்ந்து எப்படித் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்து கொள்கிறார்கள்-! பாருங்கள்-! எப்படி-? ஆவியிலே நடனமாடினேன். நான் பல பாஷைகளைப் பேசினேன்' என்று நீ சொல்லுகிறாய் அதற்கு அர்த்தமே கிடையாது. உன்னுடைய வாழ்க்கையே நீ அதை எடுக்கவில்லை என்று நிரூபிக்கிறது. நீ அதை எடுத்தேன் என்று சொல்லுகிறாய். ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை, ஏனென்றால் அந்த மருந்து குணப்படுத்தக்கூடிய எல்லா வியாதியின் அறிகுறிகளும் இன்னும் உன்னில் காணப்படுகின்றன. சுவிசேஷ வரிசையில் அந்த மருந்து நிச்சயமான, உறுதி தரப்பட்ட சுகத்தை அளிக்கவல்லது. அது அப்படியே இருக்க வேண்டும். இப்பொழுது பாருங்கள். நீ உன் வாழ்க்கையில் அதின் பலன்களைக் காட்ட வேண்டும். 78 நான் ஒரு விசுவாசியாக இருக்கிறேன்'' என்று சொல்லுகின்ற ஒரு ஆளை எடுத்துக்கொள். அவர்கள் மீது சுவிசேஷ வெளிச்சம் பட்ட மாத்திரத்தில், சகோதரனே, அதை அவர்கள் பெற்றுக் கொள்ளுகின்றனர். பெற்று, அதன் பலன்களை வாழ்க்கையில் காண்பிக்கின்றனர். நிச்சயமாக அந்த மனிதனை நீச்சல் குளங்களிலோ, கையில் சிகரெட்டுடனோ அல்லது குடித்துக் கொண்டிருக்கிறவனாகவோ காணமாட்டான். இல்லை. மற்ற ஸ்திரீகளோடு உல்லாசமாக அலைய மாட்டான். இல்லவே இல்லை. எவ்வளவு தூரம் அவன் கண் முன்னால் தங்கள் பெண்மையின் சரீரக் காரியங்களைக் காட்டினாலும் சரி, அதைப் பற்றி நான் கவலைப்படேன். அவன் உடனே தன் தலையை வானங்களுக்கு நேராகத் திருப்பி கிறிஸ்துவையே நோக்குவான். அது என்ன-? மருந்தின் பலன் கிட்டி விட்டது. அதன் பலன் கிட்டாவிட்டால் நீ என்ன சொல்லுகிறாய்- நல்லது-! நான் அந்த மருந்தை எடுத்தேன் என்று அறிவேன் - நல்லது. பின்பு இன்று நீ எங்கே இருக்கிறாய்-? நீ மரித்துக் கொண்டிருக்கிறாய். நீ காண்பி, நான் உன்னை வேதாகமம் காண்கிறது போல் காண்கிறேன் - உன்னுடைய வியாதியைக் கண்டு பிடிப்பது போல் நோக்குகிறேன், நீ இன்னும் பாவத்தில் இருக்கிறாய். பாவத்தின் சம்பளம் மரணம். இதைவிடத் தெளிவாகச் சொல்லப்படும் என்று எண்ணாதே-! பார்-! உன்னுடைய சொந்தக் கிரியைகளே அதை நிரூபிக்கின்றன. உன் சொந்தக் கிரியைகளே அந்த மருந்தை நீ எடுக்க வில்லை என்று நிரூபிக்கின்றன. நீ அதைச் செய்தேன் என்று நினைத்தாய். ஆமென். நீ அதைச் செய்கையில் எல்லா உண்மைத் தன்மையோடும் இருந்திருப்பாய் ஆனால் நீ அதைச் செய்யவில்லை. ஆனால் நீ அதைச் செய்திருந்தாய் என்று தேவன் வாக்குப் பண்ணியிருக்கிறார். அந்தப் பழைய பாவம் இன்னும் உன்னில் இருக்கிறது. அந்தப் பழைய ஆதாமின் சுபாவம் உன்னை கைப்பற்றிக் கொண்டு இருக்கிறது, அதுவே அந்தப் பழைய அவிசுவாசம், என்றாலும் உன் சகாக்களுக்கு முன் நல்லது, நான் ஓர் விசுவாசி, ஓ தேவனுக்கு மகிமை-! ஆம், நான் ஓர் விசுவாசி,'' என்று கூறுகிறாய். ஆனால், பார், அது உனக்கு ஒரு உதவியும் செய்யாது. 79. ஒருவேளை அந்த நோயாளி அந்த மருந்திற்கு முன் குறிக்கப்படாமலே இருந்திருக்கலாம் அப்படியாயின், அதின் பலனே கிடைத்திருக்காது. அது சரியே, 80. ஆனால் அந்தச் சிறிய ஒழுக்கங்கெட்ட ஸ்திரீயைப் பார். அவள் மீது அந்த வெளிச்சம் பட்ட மாத்திரத்தில், அவளுடைய நிலைமையைக் கவனிக்கும்படியாக ஏதோ ஒன்று அங்கே இருந்தது, பார். நாம் விசுவாசித்து, உண்மையாக அறிக்கை செய்தால் தேவனுடைய பாவப்பிணி போக்கும் மருந்து உடனே கிரியை செய்து பலன் தருகிறது. தேவன் இந்தக் காரியங்களுக்காக ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார். 81. இப்பொழுது பாருங்கள்-! மனிதன் போய் இவ்விதமாக நல்லது. நான் ஒரு சபையை சேர்ந்து கொண்டேன். அத்துடன் எல்லாம் என்னைப் பற்றி சரி ஆயிற்று'' என்று சொல்லுகிறான். அது தேவனால் நியமிக்கப்பட்ட வழியல்ல. 82. தேவன் நியமித்தது மனந்திரும்புதல், பாவங்களை அறிக்கையிடுதல், மேலும் அதன் பலன்களை காண்பித்தல்- மனம் திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்து, உண்மைத் தன்மையைக் காண்பித்தலாகும். இன்று காலையில் ஜெபிக்கப்படப் போகிறவர்கள் இந்தக் காரியத்தை மாத்திரம் செய்வீர்களாக: மேலும் இந்த ஒலி நாடாவை உலகெங்கிலும் உள்ளவர்கள் கேட்டு மற்றும் காடுகளிலோ அல்லது வேறெங்கிலும் இருப்பவர்கள் தங்கள் சபைக் குழுக்களில் அந்தந்த ஊழியக்காரன் அல்லது இந்த ஒலிநாடாவைப் போட்டு மற்றவர்கள் கேட்கும்படி செய்கிறவர்கள் முதலில் தங்கள் அறிக்கைகளை தெளிவாகச் செய்து, பின்பு விசுவாசத்தைத் தவிர உன் இருதயத்தில் வேறொன்றும் இல்லாமல் வரும் பொழுது, அப்புறம் நீ ஜெபிக்கப்பட்டால் அந்த மருந்து' உடனே கிரியை செய்து பலன் கிட்டும். 83, இயேசு 'ஒவ்வொருவரும் மனந்திரும்புங்கள்,' அதாவது பெந்தே கொஸ்தே நாளன்று பேதுரு, நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்றான். நீ ஆழமாக மனந்திரும்பி, கர்த்தரின் மீது விசுவாசம் வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற பின் பரிசுத்தாவியைப் பெறாவிட்டால் நீ தேவனைப் பொய்யனாக்குகிறாய், இயேசு தன்னுடைய சபைக்குக் கடைசிக் கட்டளையாக விசுவாசிக்கிற வர்களால் நடக்கும் அடையாளங்களாவன. வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது சொஸ்தமாவார்கள்.'' என்றார். ஒரு விசுவாசியால் நடக்கும் அடையாளங்களை நீ பார். நீ மேலே வந்து. அந்த விசுவாசி உன் மேல் கைகளை வைக்கவும், பின்பு ஒன்றுமே நடை பெறா விட்டால் அங்கே உன் விசுவாசத்திலே ஏதோ தவறு இருக்கிறது. பார்-? 'விசுவாசிக்கு''. ஓர் நியமிக்கப்பட்ட வழியை தேவன் வாக்குப் பண்ணினார். 84. நான் கேட்க வேண்டிய அவசியமில்லை'' என்று சொல்லி நாமே தேற்றரவைக் கண்டு கொள்ள முயற்சிக்கிறோம். இல்லை. அது உண்மையே. நீ கேட்க வேண்டிய அவசியமில்லை. 85. ஆனால் நீ நித்திய ஜீவனுக்கு முன் குறிக்கப்பட்டிருந்தால், நீ அதைக் கவனித்துக் கேட்டு அதிலே மகிழ்ச்சி கொள்ளுவாய். அது உன்னுடைய ஆறுதல். உன் வாழ் நாள் முழுவதும் நீ வாஞ்சித்த அந்தக் காரியம் அது. அதுவே அந்த முத்து - நீ அதற்காக எல்லாவற்றையும் விட்டு விடும்படியாக ஆயத்தமாய் இருக்கிறாய். பார். தேவனுடைய அன்பின் விசாரிப்பு உனக்காக இருப்பதை அறிகிறபடியினால், நீ அதை விரும்புகிறாய், அது உனக்குத் தேவையாக இருக்குமானால், உன் பாவத்தைக் குறித்த கேள்வியையும் அவிசுவாசத்தையும் மற்றும் உனக்கு எல்லாவற்றையும் செய்து முடிக்கக் கூடியதொன்றாய் இருக்கிறது. வைத்தியனுக்காக அலைந்து திரிபவன், தான் வியாதியஸ்தன் என்றும் தான் உண்மையிலேயே வியாதி உள்ளவன் என்றும் அறிவான். பாருங்கள்-! வியாதி இல்லாதவனுக்கு வைத்தியன் தேவை இல்லை என்று இயேசு சொன்னார். ஆனால் வியாதியுள்ளவனுக்குத் தேவை. நீ உன் உண்மையான நிலையை அறிவாயானால், நீ அவர் சொன்ன விதமாகவே செய்யவேண்டும். பின்பு அது நடந்தாக வேண்டும். இல்லா விட்டால் தேவன் தவறான ஓன்றைச் சொன்னதாக ஆகிறது. பாருங்கள். 86. தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளில் சில சமயத்தில் அநேக மக்கள் அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதில்லை. நீ உன் வாழ்க்கையை சுத்திகரித்துக் கொண்டவனாய், நீ ஓர் நிலையில் இருந்து, ஆம்-! நான் அதை விசுவாசிக்கிறேன்'' என்று உண்மையாகவே சொல்ல வேண்டும். அது உன் இருதயத்திலிருந்து வர வேண்டும். இப்பொழுது அன்புள்ள சகோதானே, அன்புள்ள சகோதரியே, நீ இதைச் செய்ய வேண்டும். நீ அதைச் செய்ய வேண்டும்'' என்று யாரும் உன்னிடம் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் சொல்ல வேண்டியதில்லை. நீ ஓர் விசுவாசி. உன்னிடத்திலுள்ள 'அதை' எவரும் எடுத்துக் கொள்ள முடியாது, எந்த வியாதிக் குறிப்போ எந்த மருத்துவமனையோ, எந்த டாக்டரோ, எந்த தேற்றரவாளனோ எந்த ஆறுதலோ வேறு எவரும் என்ன சொன்னாலும் சரி, நீ அதை. நம்பாதே. நீ அதை அறிய மாத்திரம் செய்கிறாய். அதைப்பற்றி நீ எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அது உனக்குத் தெரியும். இப்பொழுது அதுவே போலி இல்லாத ஒன்றாய் இருக்கிறது. 87 இன்றைக்கு எல்லாக் காரியங்களிலும் போலிகள் ஏராளமாய் உள்ளன. அது அப்படித் தான் இருக்க வேண்டும். அதைப் பற்றி மோசமாக எண்ண வேண்டாம். அது அங்கே இருக்க வேண்டும். அது எப்பொழுதும் அவ்வாறே இருந்திருக்கிறது. இனி மேலும் அப்படியே இருக்கும், ஆனால் இன்று காலை உங்களுக்கு சத்தியத்தையும், உண்மைக் காரியங்களையும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம், நாம் இதைச் சத்தியத்தின் அஸ்திபாரத்தின் மேல் வைக்க வேண்டும். பாருங்கள் சத்தியமாவது என்ன என்று அது அறிந்திருக்க வேண்டும். 88. மக்கள் தேவனுடைய வழியைப் பற்றியதான காரியத்தை எடுத்துக் கொள்வது இல்லை என்று பார்த்தோம். தேவன் உன்னுடைய தேறுதலுக்காக ஒரு வழியை நியமித்திருக்கிறார். இந்த எல்லாக் காரியங்களுக்கும் தேவன் ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார். ஆனால் ஜனங்களோ அதை விரும்பாமல், மற்ற வழிகளின் பின்னே செல்லுகின்றனர். தேவனுடைய வழி அல்லாத மற்ற ஏதாவது ஒரு வரியில் ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும் பொழுது, தங்கள் மேல் தேவ கோபத்தைக் குவித்துக் கொள்ளுகின்றனர். சரி. 89 நான் பேசிய இந்தக் காரியங்களான விஞ்ஞான முன்னேற்றங்களுக்குப் பின் செல்வதும், சபைகளின் முன்னேற்றங்களுக்குப் பின் செல்வதும், மற்றும் வித்தியாசமான காரியங்களுக்குப் பின் செல்லுதலானது நம்மை இந்த உலகத்தின் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். ஒரு நம்பிக்கையும் கூட விடப்படவில்லை. வாழ்வதற்குரிய நம்பிக்கை இல்லாதவர்களாய் இருக்கிறோம். நாம் பிழைப்பதற்கு ஒரு நம்பிக்கை கூட இல்லை. நான் சில நிமிஷங்கள் இந்தக் காரியங்களை விவரமாய்க் கூறி, அதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்க விரும்புகிறேன், 90 உங்களில் ஒவ்வொருவரும் ஒரு மருத்துவப் பத்திரிக்கையையோ, ரீடர்ஸ் டைஜஸ்ட்'' புஸ்தகத்தையோ அல்லது மற்றவைகளையோ வாங்கி இந்த விஞ்ஞான முன்னேற்றங்களை வாசிக்க வேண்டும். இப்பொழுது அதைச் செய்ய... 91 இங்குள்ள ஓர் ஊழியக்காரர் இந்தச் செய்தியை உலகத்தைச் சுற்றிலும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். நம்பிக்கையில்லாதவர்களாய், இரட்சிப்புக்கு அப்பாற்பட்டவர்களாய், இரட்சிப்புக்கும் நியாயத்தீர்ப்புக்கும், இடையேயுள்ள கோட்டைத் தாண்டியவர்களாய் இருக்கிறோம் என்ற இந்தச் செய்தியைக் கூறவேண்டுமாயின், நான் கூறியவற்றிற்குத் தகுந்த ஆதாரங்களை சபைக்கு முன் நான் வைக்க வேண்டும். தன்னுடைய தேசத்திற்கும், தன்னுடைய சபைக்கும் ஏன் இந்த உலகத்தைச் சுற்றி முப்பது அல்லது நாற்பதுக்கும் மேற்பட்ட வித்தியாசமான பல தேசங்களுக்கும் பல பாஷைக்காரருக்கும் நாம் உலகத்தின் கடைசிக் காலத்திலிருக்கிறோம்,'' என்ற செய்தியை சொல்வதற்கு சரியான புத்தியை உடைய என்னைப் போன்ற மனிதனுக்குத் தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும். இக்காலையில் நம்முடைய தலையாய செய்திக்குச் செல்வதற்கு முன்னால் நான் சொன்ன காரியத்தைச் சிறிது விளக்கிச் சொல்லுவது நமக்கு ஏற்றதாகக் காணப்படுகிறது. 92 பாருங்கள். விஞ்ஞானமும் கல்வியும் நமக்கு எதைக் கொண்டு வந்து உள்ளது என்றால் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஒரு விஞ்ஞானத் தின் ஒப்புதலை ஏற்கும் அளவுக்கு வந்துள்ளது. விஞ்ஞானமானது தான் முதலில் கூறிய காரியத்தைப் பின்பு மாற்றக் கூடியதாகவே இருக்கிறது. ஒரு பிரெஞ்சு தேசத்து விஞ்ஞானி 200 அல்லது 300 வருஷங்களுக்கு முன்னால் சொன்ன காரியத்தை இங்கே வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு பந்தை உலகத்தைச் சுற்றி உருட்டி விடுதல் - அதாவது இந்த உலகமானது மணிக்கு 30 மைல் வேகத்தில் உலகத்தைச் சுற்றக் கூடிய சாதனத்தைக் கண்டு பிடித்து, அப்படிச் செய்யுமானால் அந்தப் பொருளானது இந்தப் பூமியின் புவி ஈர்ப்பு சக்தியிலிருந்து இழுக்கப்பட்டு மேலே செல்லும்,' என்று விஞ்ஞானரீதியாக நிரூபித்தார். பாருங்கள். விஞ்ஞானமானது திரும்பவும் அவர் கூறியதை பரீட்சித்துப் பார்க்குமா-? நிச்சயமாக இல்லை. அது அவர்களுக்கு கடந்த காலம் என்றாகிறது. 93 இப்பொழுது நாம் எல்லாரும் என்ன சொல்லுகிறோம்-? ''நான் விஞ்ஞான ரீதியில் அதை நிரூபிக்க விருப்புகிறேன்,'' என்று மத சம்பந்தப்பட்ட சபையில் பல பிரிவுகள் கூறுகின்றன. அவர்களுக்கு விஞ்ஞான ரீதியில் ஒரு நிரூபித்தல் வேண்டும். நல்லது. நான் திரும்பிக் கேட்க விரும்புவது என்ன வென்றால்-- 'விஞ்ஞான ரீதியில் தேவன் உங்கள் சபையில் இருப்பதை நிரூபியுங்கள். உண்மையாக இருக்கக் கூடிய எதையும் விஞ்ஞான முறையில் நிரூபியுங்கள். நிரூபி என்று மாத்திரமே கூறுவேன். 94 எது உண்மை-? ஜீவன் அந்த ஜீவனின் பங்கைப் பெறுவதற்காக எனக்கு உள்ளதெல்லாவற்றையும் விற்க விரும்புகிறேன். ஜீவன் உண்மையானதா-? அது உண்மை இல்லை என்றால் நாம் அனைவரும் எதற்காக இங்கு இருக்கிறோம்-? 95 விஞ்ஞானமானது ஜீவன், விசுவாசம், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், பொறுமை இவைகளைத் தொடமுடியாது. அழியாத உண்மையான காரியம் அதுவே. எல்லா கிறிஸ்தவ சேனையும் காணக் கூடாததையே நோக்குகிறது. ஆனால் உணர்ச்சிகள் (ஐம்புலன்கள்) அந்தக் காரியங்களை எடுத்துக் கூறுவதில்லை. ஆனால் அவைகள் அங்கே இருக்கின்றன. ஆகையால் தான் விசுவாசத்தினால் அதை நம்புகிறோம். விசுவாசமானது கூறியதை உன்னில் விளைவிக்கிறது, தெய்வீக சுகத்தையும் மற்றதையும் கொண்டு வருகிறது. எது தெய்வீகமான சுகத்தைச் செய்கிறது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாது. ஆனால் தெய்வீக சுகமளித்தல் இருப்பதை அறிவார்கள். பாவத்திலிருந்து மீட்கப்படுவதை அவர்கள் நிரூபிக்க முடியாது. ஆனால் ஜனங்கள் பாவத்திலிருந்து மீட்கப் படுகிறார்கள் என்பதை அறிவார்கள். ஆகையால் விஞ்ஞான ரீதியில் அதை நிரூபிக்க முடியாது. ஆனால் தேவன் அதை நோக்கும் விதமானது, விஞ்ஞான ரீதியாக இருக்கிறது. 96 இப்பொழுது, விஞ்ஞானமானது நமக்கு எதைக் கொண்டு வந்துள்ளது-? இப்பொழுது நீ ஒரு நொடிப் பொழுது அதிர்ச்சியடையக் கூடும். விஞ்ஞானம் நமக்கு சுகமின்மை, மரணம், வியாதிகளைக் கொண்டு வந்து உள்ளது. விஞ்ஞானத்தின் ஒரு பாகத்தை மட்டும் நீங்கள் கற்றுத் தரப்பட்டுள்ளீர்கள். ஆனால் அதற்கு இரண்டு பக்கங்கள் (பாகங்கள்) உள்ளன. விஞ்ஞானம் இதை, அதை மற்றதைக் கண்டு பிடித்துள்ளது,'' என்று கூறுகிறாய் நல்லது, அந்த உரிமையை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். ஆனால் அதனுடைய மற்ற பாகத்தைப் பார்ப்போம். விஞ்ஞானமானது வியாதியைக் கொண்டு வந்துள்ளது. விஞ்ஞானமானது மரணத்தையும், ரோகங்களையும் கொண்டு வந்துள்ளது. 97 பார்-! விஞ்ஞான முறையில் ஒரு ரக வித்தையும், மறு ரக வித்தையும் சேர்த்து கலப்பினம் செய்து கிடைக்கும் ஆகாரங்கள், மற்றவைகள் தலை முறைகளுக்கு மரணத்தை கொண்டு வந்துள்ளது. அது மக்களை மிகவும் மிருதுத் தன்மையுள்ளவர்களாக்கி அவர்கள் ஒரு உருவமில்லாதவர்களைப் போன்று காணப்படவும் கழிவுப் பொருட்களினின்று செய்யப்பட்டவர்களைப் போன்ற ஆண்களாகவும் பெண்களாகவும் ஆக்கி விட்டது, அவர்கள் குளிர் சாதன, உஷ்ண சாதன வசதி இல்லாமல் வாழ முடியாது. அதில்லாமல் அழித்து விடுகின்றனர். அவர்களை பந்தாட்டங்கூட (Baseball) ஆடவிடாமல் பண்ணுகிறது. குத்துச் சண்டை மேடைகளில் தடுக்கி விழுந்தால் கூட அது அவனைக் கொல்லுகிறது. அது ஆணையும் பெண்ணையும் தாறுமாறாக்கப் பண்ணும் அளவுக்கு அவர்களை மிருதுவடையச் செய்கிறது, 98 இந்த கலப்பின முறையை அவர்கள் ஆடு மாடுகளுக்கும் ஊசியின் மூலம் செலுத்தி, விஞ்ஞானக் கூற்றின்படியே, அவைகளிலே தாறுமாறுகளை உண்டு பண்ணுகின்றனர். ஒரு பசுவோ அல்லது ஒரு ஆகாரமோ கலப்பினம் ஆக்கப்படும் போது அந்த ஆகாரத்தை மனிதன் உண்ணுகிறான். அந்த ஆகாரமே இரத்த அணுக்களை உண்டாக்குகிறது. அந்த இரத்த அணுவே உன் ஜீவனாகிறது. பார்-? அது எதைச் செய்தது என்று-! நாம் உண்ணும் மாம்சத்திலே இந்த மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றி அது மனித வம்சத்தையே கெடுக்கிறது. விஞ்ஞான முறைகள் 99 டீ.டீ.டி(D.D.T) என்ற தூள் மருந்தை வயல்களில், நிலங்களில் தெளிப்பதைப் பார்த்தேன். அதினால் நம்முடைய சமுதாயத்திலே 800-க்கும் அதிகமான பேர்கள் முட்டைகளைச் சாப்பிட்டு வியாதியஸ்தராயிருக்கிறார்கள். அநேக வருஷங்களுக்கு முன்னாலே, முதன் முதலாக சின்னக் கூடாரத்தினின்று நான் கடைசி நாட்களில் இவ்விதமாக நடக்கும். பள்ளத்தாக்குகளில் வசிக்காதீர்கள். முட்டையைச் சாப்பிடாதீர்கள்,'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தது ஞபாகமிருக்கிறதா-? அதை என் புத்தகத்திலே எழுதி உள்ளேன். அதைப்பற்றி அங்கே எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்து அதைப் போய்ப் பார்த்தேன். முட்டைகளைச் சாப்பிடாதே' என்று எழுதியிருந்தது, அந்த வருஷம் 1933 ஆகும். முட்டைக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது இப்பொழுது விஞ்ஞானமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு முட்டைக் கூடச் சாப்பிடக் கூடாது என்று கூறி - முட்டையைச் ஜீரணிக்க வைக்க இருதயத்துக்குக் கடினமான வேலையாகிறது என்று முடிவு செய்திருக்கிறது. வியாதிகள்-! 100 பால் - இதுவே மிகவும் மேலான உணவாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பொழுதோ டாக்டர்கள் அதைச் சாப்பிட வேண்டாம். அதை விட்டு விலகுங்கள். அது கபால நீர், அவடி நோய் (Sinus) முதலியவற்றை உண்டாக்குகிறது என்கின்றனர். இதே மனுஷன் தான் அதே பாலைக் குடித்துக் கொண்டு அவடி நோய் இல்லாமல் ஜீவித்தான். ஆனால் இன்றோ இந்தக் கலப்பின வித்தான பல ஆகாரங்களினால் மனிதன் ஒரு கழிவுப் பொருளினால் செய்யப்பட்ட ஒரு கொத்தைப் போலவும் - வியாதியினால் உண்டான ஒரு உருண்டையைப் போலவும் இருக்கிறான். இப்படியானது ஏன்-? விஞ்ஞானத்தினால்-! 101. பாருங்கள்-! மனிதனுக்கும் ஸ்திரிக்குமுள்ள ஜீவ அணுக்கள் (genes) பெலவீனம் அடைந்து பின்பு இந்த ஜீவ அணுக்கள் மூலமாக இந்த மனுக்குலம் பெலவீனமடைந்து கை கால்கள் பெலவீனமடைந்து மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகள் 30 சதவிகிதம் உள்ளனர். கண்கள் முகம் சிறுத்து, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த உணவுப் பொருட்களை கலப்பினம் ஆக்குவதின் மூலமாக (நாம் ஜீவிப்பதற்காக உண்ணப்படும் இந்த உணவுகள்) நமது சரீரம் பெலவீனம் அடைந்து நமக்கு புற்றுநோய், மனவியாதிகள், மற்றும் சரீரத்தைப் பெலவீனப்படுத்தும் எண்ணற்ற வியாதிகள் தன்னையே அழிக்கும் விஞ்ஞான முறை தேவனுடைய திட்டத்தைவிட்டு நம்மை தூரப் படுத்துகிறது. அவர் சொன்னது "அந்தந்த வித்து அதனதின்படி மூளைப்பிக்கக் கடவது.'' 102. பாருங்கள்-! நாம் எந்த நிலையில் இருக்கிறோம்-? நான் பேசிக் கொண்டே போகலாம். நமது நேரமும் கடந்து கொண்டே செல்லுகின்றது. ஆனால் கவனியுங்கள்-! விஞ்ஞானமானது என்னத்தைச் செய்தது-? விஞ்ஞானம் மரணத்தையும், வியாதியையும், அழிவையும் கொண்டு வந்துள்ளது, 103. அன்றொரு நாள் எனது இனிய நண்பர் இங்கே அமர்ந்துள்ள டாக்டர் வேயில் இடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மக்கள் பெனிசிலின் மருந்தினால் கொல்லப்படும் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருந்தார். அது உண்மையில் பெனிசிலின் மருந்தினால் அல்ல. அந்த மருந்தைச் செய்யும் பொழுது அதனுள்ளே புகுந்துவிடும் அழுக்கினால்-! அது பணத்தை அள்ளிக்கொண்டு செல்லும் பேராசை உள்ள திட்டம்-! ஆஸ்ப்பிரின் மாத்திரையின் சூத்திரத்தைக்கூட அறியாத டாக்டர்கள் இதை வியாதி யஸ்தர்க்குக் கொடுக்கிறார்கள். ஒரு சிறு குழந்தையின் வயிற்று நோயைக் கூட தீர்க்க முடியாத ஸ்பெஷலிஸ்ட். டாக்டர்கள்'-! ஆனால் நமக்குக் கிடைத்துள்ளது என்ன-? பேராசையுள்ள ஏதோ ஒரு இழுப்பு அல்லது ஏதோ ஒன்று. முந்தைய நாட்களைப் போல பழைய பாணியில் உன்னோடு உட்கார்ந்து பேசி ஆறுதல் படுத்தி மற்றும் எல்லாவற்றையும் செய்யும் கிராமப் புறத்து வைத்தியன் இப்போது அவர்களுக்கில்லை. அவர்கள் தேவனை விட்டு விட்டு தங்கள் சொந்த வழி முறைகளின் பின் சென்று விட்டார்கள். தேவனை தங்கள் நடுவினின்று அகற்றுவதற்காக தங்கள் வழி முறைகளை விவரித்துச் சென்று விட்டார்கள், அங்கே தான் நாம் இருக்கிறோம். 104. கலப்பினமாக்குதலினால் இதைத் தான் நாம் செய்துள்ளோம். பாருங்கள், சரீரம்; ஒரு பூச்சிகூட அரிக்காத நலமான செடியை எது உண்டாக்குகிறது-? இந்த உஷ்ணப்படுக்கை செடிகள்... ஆனால் கலப்பினச் செடி கொடிகள் மீது எப்போதும் மருந்துகளை அடித்துக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. நான் பேசிய கலப்பினம் பத்தி (Hybrid Religion) செய்தியைப் படித்திருப்பீர்கள். அதை எப்பொழுதும் மருந்தடித்து வளர்த்துப் பிரயாசப்பட வேண்டி உள்ளது. கவனியுங்கள்-! உண்மையான மூலச் செடிக்கு இவ்வித மருந்தடிப்புகள் அவசியமில்லை. அது மூல வித்தாக இருக்கிறது. 105. மனுஷனுடைய சரீரத்தில் வியாதி எப்படி வருகிறது-? சரிரமானது... எனக்கு மிகவும் அருமையான வைத்திய சகோதரன் ஒருவர். அவருடைய பெயரை இப்பொழுது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் மிகவும் அருமையான சகோதரன் அவர்-! மருத்துவத்துறையில் நவீன காலத்துக்கு உரிய குறிப்புகளடங்கிய பத்திரிகைகளை தனது அலுவலகத்தில் வைத்து இருந்தார் அதிலிருந்து சமீபத்தில் வாசித்துக் காண்பித்தார். அது பெலவீனம், உண்மையாக இருக்கக் கூடிய ஆளைப்பார். உன் சரிரமானது பெலவீனம் அடைந்து நலிந்து போகிறது. சீக்கிரமாக சளியானது உன்னைப் பற்றிப் பிடிக்கிறது. அது என்ன-? உன்னுடைய சரீர பெலவீனத்தினால் உன்னுடைய சுரப்பிகளில் ஒரு வித வழவழப்பானதை உண்டாக்குகிறது. அதிலே சளி நோய்க் கிருமி வளர்ந்து உன்னை சளிப் பிடித்துக் கொள்ளுகிறது. ஆனால் உன் சரீரம் திடகாத்திரமாய் இருக்கும் பொழுது, அது அந்த சளிக் கிருமியைக் கொன்று, அது உன்னைத் தீண்டாதபடிச் செய்கிறது. 106. ஆகையால், நீ பார்-! தேவன், முதன் முதலாக மனிதனைச் சிருஷ்டித்த போது அவன் எல்லா வியாதிகளையும் எதிர்க்கும் சக்தியைப் பெற்று இருந்தான். ஆனால் அவிசுவாசமும், கல்வியும், விஞ்ஞானமும் தேவன் இடமிருந்து முதலாவதாக அவனைப் பிரித்துச் சென்று விட்டது. அது இப்பொழுதும் நடந்தேறி வருகிறது. 107. நன்றாகப் பாருங்கள்-! புகை பிடித்தல், குடி, மற்றும் அரை நிர்வாண உடுத்துதலும் எவ்விதமாக இந்தச் சந்ததியைக் கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது என்று. நீங்கள் ஆச்சரியப்படுவீர்களென நினைக்கிறேன். நான் இப்பொழுது ஒரு காரியத்தைச் சொல்லப்போகிறேன்- நான் அவ்லிதமாகச் செய்வதாக இல்லை. ஆனால் அப்படிச் செய்வேன் என்று நம்புகிறேன். 108. பாருங்கள். அவர்கள் அதிசயித்து என்னிடம் அடிக்கடிச் சொல்லு கிறார்கள்-! சகோதரன் பிரான்ஹாமே-! ஏன் இந்த விதமான காரியங்களையே எடுத்து நீங்கள் பேசக் காரணம் என்ன-? நீங்கள் கேள்விப்படவில்லையா-? ஒரு மனிதனுடைய சபைக்குச் சென்றால் அங்கே நாங்கள் அழைத்துச் செல்கிற பெண்கள் வசதியாக உட்கார்ந்து நீர் பேசுகிற காரியங்களைக் கேட்கக் கூட முடிகிறதில்லை. நீர் எப்பொழுதும் அவர்கள் மீது பாய்ந்து, அவர்களுடைய குட்டையான முடியைப் பற்றியும் அந்தப் பெண்கள் அணிகிற ஆண்களின் ஆடைகளைப் பற்றியும் மற்ற இந்த எல்லாக் காரியங்களையும் அல்லவா கூறிக் கொண்டிருக்கிறீர். ஏன் இப்படிச் செய்கிறீர்-? சொல்லும்,'' என்று கேட்கிறார்கள். இப்பொழுது நான்... 109. அடுத்த கோடைகாலம் வரைக்கும் இதுவே என் கடைசிச் செய்தி என்று சொல்ல விரும்புகிறேன், இதோ... அது என்னவென்றால்... காரியங்களை நிதானித்து பகுத்தறிந்து இந்தக் கடைசி நாட்களில் கூறுதலே... அது தேவனுக்கு முன்பாக சபிக்கப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது என்று அறிதலே. இந்தக் கடைசி காலங்களை பகுத்து நிதானித்தறிதல் இந்தக் கால போதகருக்கு இருக்கிறதா என்று நினைத்து ஆச்சரியப்படுகின்றேன். உன்னுடைய உண்மையான நிலைகளையும், நீ கடந்த காலத்தில் செய்தது, செய்யப் போவது, உன்னிடத்தில் உள்ள கஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்தப்பிரசங்க மேடையிலிருந்து கூறுகிற அதே தேவன்... அதே ஆவி ஆனவர் உன்னை நோக்கி உன்னை முற்றிலும் உள்புறமும் வெளிப்புறமும் அலசி எடுத்து, காலங்களின் அடையாங்களைப் பகுத்தறிந்து நிதானித்துக் கூறுகிறார். அவரால் சத்தம் போட்டுக் கூறாமல் இருக்க முடியவே முடியாது. அது பகுத்தறிந்து நிதானித்துச் சொல்லக் கூடிய ஆவியே... ஏனென்றால் பரிசுத்தாவியானவர் தாமே இந்தக் காரியத்தைப் பாவம் என்றும், அதிலே பங்கெடுக்கிறவர்கள் எவராய் இருப்பினும் அழிந்து போவார்கள் என்றும் கூறுகிறார். இந்த விதமாய் உள்ள என் சகோதர சகோதரிகளின் நிலையைக் கண்டு நான் அவைகளுக்கு விரோதமாக என் வார்த்தையை எழுப்பாவிடில், நான் தேவனுடைய பார்வையில் எப்படி. நீதி உள்ளவனாக எண்ணப்பட முடியும்-? அவர்கள் என் மீது கோபம் கொண்டாலும் கூட, அதற்கு எதிராக நான் பேசித் தான் ஆகவேண்டும். அது ஆவியில் பகுத்தறிந்து கூறுதலாகும். சில சமயங்களில் பகுத்தறிந்து கூறும் ஆவியில்லாமல் அவர்கள் வார்த்தை முதலானவற்றில் வேறுபடுகிறார்கள். பாருங்கள்-! அது உண்மையென்று நாம் அறிவோம். நல்லது. அது சத்தியமென்று நமக்குத்தெரியும். அது கடைசிகாலங்களின் பகுத்தறிதலாகும். 110. இப்பொழுது விஞ்ஞானத்தைப் பற்றிப் பார்த்தோம். அதைப் பற்றி இனி நான் கூற விரும்பவில்லை. என்னுடைய நேரம் கடந்து போகிறது. கல்வியைப் பற்றி இரண்டாம் முறை நோக்குவோம். அது செய்தது என்ன என்று பார்ப்போம். இப்பொழுது இரண்டு வகையான சபைகள் உண்டு என்று பொதுவாக நாம் கூறலாம். 111. இப்பொழுது. முதலாவதாக சந்தேகம், விவேகம், மனித அறிவை உபயோகித்தல், பாவம் என்பதை தொடங்கச் செய்தது என்று நாம் உணர்கிறோம், எதன் மீது மனித அறிவை உபயோகித்தல்-? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக மனித அறிவை உபயோகித்து சிந்தித்தல். தேவன், ஆதாம் ஏவாளிடத்திலே நீங்கள் அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள்,'' என்று சொன்ன பொழுது, அது முடிவு பெற்ற காரியமாக விளங்கிற்று. மேலும் அவர், அவர்களை விரோதிக்கு எதிராக வார்த்தையால் பாதுகாப்பு அளித்து, அவர்களை பத்திரமாக வைத்தார். ஆனால் ஏவாளோ சாத்தானுடைய கலாச்சாரம், அறியுந்தன்மை, கல்வி, முன்னேற்றம் இவைகளைக் கண்டு தேவனால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பினின்று வெளி வந்தவளாய், சாத்தானுடைய வியாக்கியானத்திற்குச் செவிக் கொடுத்து. தேவன் செய்ய வேண்டாம் என்று சொன்ன காரியத்தையே செய்தாள். மேலும் வார்த்தைக்கு எதிராக மனித அறிவு கொண்டு சிந்தித்த ஒரே காரணத்தினால் இவ்வளவு குழப்பம் ஏற்படுமானால் வார்த்தைக்கு எதிரான மற்றொரு விவேகச் சிந்தையும் உன்னை மறுபடியும் அதே இடத்திற்கு பாவத்தில் விழுவதற்கு, முன்னிருந்த நிலைக்கு எடுத்துச் செல்லாது. ஏனென்றால், எந்தக் காரணத்திற்காக அவர், அவனை அவ்விடத்திலிருந்து வெளியே அனுப்பினாரோ, அதே இடத்திற்கு திரும்ப அவனை அதே காரணத்திற்காக கொண்டு வருதல் தேவனுடைய பார்வையில் புத்தி இல்லாத ஒரு காரியமாகும். பார்-! பார்-! நீ சிந்தப்பட்ட கிறிஸ்துவினுடைய இரத்தத்திற்கே வரவேண்டும். உன்னுடைய ஸ்தபானம் கிரியை செய்ய முடியாது, உன்னுடைய விவேகச் சிந்தையில் பயனில்லை. அது இரத்தமும் பிறப்புமே. கிறிஸ்து, என்கிற புது சிருஷ்டியை அது உன்னில் உருவாக்கி, கிறிஸ்துவின் மாதிரியை உன்னில் ஜீவிக்க வைக்கிறது. ஏனென்றல் நீ எடுத்துக் கொண்ட விஷத்தை கொல்லும் 'விஷநாசினி,' தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான அவிசுவாசப் பாவத்தைக் கொல்லுகிறது. 112. கல்வி நமக்கு எதைக் கொடுக்கிறது. இன்று காலையில் நாம் இரண்டு சபைகளைப் பற்றிப் பார்ப்போம். அதில் ஒன்று பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியினால் ஏற்படுத்தப்பட்ட சபை. அது பெந்தேகொஸ்தே சபை என்று தன்னை அழைத்துக் கொண்டது. இரண்டாவதாக நிசாயாவில் தோன்றிய ரோமன் கத்தோலிக்க ஸ்தாபனம். அதில் ஒன்று ஆவிக்குரிய பிறப்பைக் கொண்டது. மற்றது புத்திக் கூர்மையின் அங்கத்தினர்களைக் கொண்டது. அந்தச் சபையிலிருந்து எல்லா பிராடெஸ்டண்டுகளும், எல்லா ஸ்தாபனங்களும் வந்தன. அது தான் முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தாபனம், எல்லாச் சபைப் பிரிவுகளும் அந்த ஒன்றிலிருந்து வந்த ஸ்தாபனங்களாகும். அவைகள் அதனுடன் தொடர்பு உள்ளவைகளாகும். வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட 'அவள் வேசியும், வேசிகளுக்குத் தாயுமாகவும் இருந்தாள்'' அது சரியே. ஆகையால்... அங்கே இல்லை... பானையானது, காப்பிப் பாத்திரத்தை வழ வழப்பாக இருக்கிறாய் என்று கூற முடியாது. ஏன் என்றால் அவைகள் எல்லாம் ஒன்றே அது தன்னையே ரோமாபுரியில் ஸ்தாபித்துக் கொண்டது. அது என்ன என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அது முடிந்தது. சபைக்காலங்களைக் கடந்து வந்து நமக்கு வேதமானது இதை நிரூபிக்கிறது. ஒன்று ஆவிக்குரிய நிதானத்தினால் ஆவிக்குரிய அஸ்திபாரத்தைக் கொண்டது. மற்றொன்று கல்வி மற்றும் புத்திக் கூர்மையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டது. 113. இப்பொழுது - ஏதேன் தோட்டத்துக்கு திரும்ப வருவோம். அதே இடத்துக்கு வருவோம் ஸ்திரியானவளே(சபை) செவி கொடுத்தாள். ஆதாம் அல்ல. ஸ்திரியே. அவர்கள் இப்பொழுது தாய்ச்சபையை விரும்புகிறார்கள். செல்லட்டும். அது மிகவும் சரியே-! காலத்திற்கு மிஞ்சியது ஒன்றுமில்லை. தங்களுடைய சொந்த அறிக்கையை உண்டு பண்ணி... பாருங்கள் திரும்பவும் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கச் சொல்லுகிறார்கள். ரோமாபுரியில் உள்ள நிசாயாவிலே தண்ணீர் ஞானஸ்நானம் மற்றும் காரியங்கள், பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் குறித்த கேள்விகள் எழும்பிய போது, அங்குள்ள, பேராயர்கள் ரோமன் கத்தோலிக்க சபை – ராஜரீக ரோமன் மார்கள்'' என்று தங்களை அழைத்து ஸ்தாபனமாக்கிக் கொண்டார்கள். நேற்று தான் அந்தச் சரித்திரம் முழுவதையும் வாசித்து, கவனித்து, திரும்பவுமாக நோக்கிப் பார்த்தேன். அந்தச் சபை ரோமாபுரிக்கு மாத்திரமே. ரோமாபுரி- ராஜரீக சபை. மற்ற சபைகள் எல்லாம் சின்ன சகோதரி சபைகளாக இருந்தன - அவைகளைத் தான் கத்தோலிக்க சபை என்றனர். 114. நமது சபையும் கூட அவ்வாறே - கத்தோலிக்கம், உலகெங்கும் வியாபித்துள்ள சபை - அது எல்லா விசுவாசிகளும் சேர்ந்து, உலகமெங்கும் வியாபித்துள்ள ஒரே விசுவாசத்தையே குறிக்கிறது. அவைகளில் ஒன்று தேவ ஆவியினால் பிறந்து, தன்னிலே பரிசுத்த ஆவியைக் கொண்டதாக இருக்கிறது, அது தன்னிலே பரிசுத்த ஆவியைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய போதகம், தன்னுடைய நடத்தை இவைகளாலே கிறிஸ்துவை நிரூபித்துக் காண்பிக்கிறது. ஏன் என்றால் அதுவே தேற்றரவாளனாக- கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்ததும், தம்முடைய சபையிலே கிரியை செய்கிறதும் ஆரம்பத்திலே செய்த அதே காரியத்தைச் செய்கிறதுமாய் இருக்கிறது. கிறிஸ்துவின் இரட்சிப்பாகிய விஷநாசினி இதைப் போலவே ஆரம்பத்தில் கிரியை செய்து, இன்றைக்கும் அதே முறையில் கிரியை செய்து, அதே காரியத்தைக் கொண்டு வருகிறது. 115. மற்றொன்று ஒரு கூட்டம் மனிதர்களால் புத்திக் கூர்மையின் விளைவினால் உண்டான ஸ்தாபனமாக இருந்து, தீர்க்கதரிசி சொல்கிற பிரகாரம் "தேவ பக்தியின் வேஷத்தை மாத்திரம் தரித்து, இந்த சத்தியத்தின் வல்லமையை மறுதலிக்கிறதாக இருக்கிறது,'' இப்பொழுது நான் கூறினது எந்த அளவுக்கு என்னால் தெளிவாகக் கூறமுடியுமோ, அவ்வளவு தெளிவாக இருக்கிறது. 116. இப்பொழுது இரண்டு சபைகள் உள்ளன, அதில் ஒன்று நிசாயாவில் பிறந்தது. மற்றது பெந்தேகொஸ்தேயில் பிறந்தது. ஒன்று மற்றொன்றுக்கு எதிராக எப்பொழுதுமே இருந்து வருகிறது. இக்காரியத்தை நாம் சபைகளின் காலங்களைக் குறித்து பிரசங்கித்த போது நிரூபித்தோம். அவைகளில் ஒன்று மிகவும் அழகான கனத்துக்குரிய புத்திக் கூர்மையுள்ள சபையாக மிகச்சிறந்த கல்விமான்கள் முதலியவற்றைக் கொண்டதாக இருக்கிறது, மற்றொன்று ''ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள்'' என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. அது ஆரம்பத்திலே கல்வி அறிவற்ற (பேதமையுள்ள) வெறித்த மீன் பிடிக்கிறவர் களாக இருந்தது போல, இப்பொழுதும் அவ்வாறே உள்ளது. அவ்வாறே பாகுபடுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒன்று விஞ்ஞான ரீதியிலும் மற்றொன்று ஆவிக்குரியதாகவும் இருக்கிறது. ஒன்று விஞ்ஞான ஒழுங்கு முறைப்படியும் மற்றொன்று வசனத்தைப் பகுத்தறியும் ஆவிக்குரிய நிதானத்தைக் கொண்டது. ஒன்று விஞ்ஞான ஒழுங்கின்படியும் மனித குழுக்கள் கூறுகின்ற புத்திக் கூர்மையுள்ள பேராயரையும் உடையதாக இருக்கிறது. மற்றொன்று முழுக்க முழுக்க தேவ ஆவியினால் பிறந்ததும், தேவ ஆவியினால் ஜீவித்தும், தேவன் வாக்குப்பண்ணின வார்த்தைகளை நடத்திக் காண்பிக்கவும், நிறைவேறப்பண்ணவுமாய் இருக்கிறது. எந்த விஷநாசினியை உடையவனாக இருக்கிறாய் என்பதை அது காண்பிக்கிறது. நீ கல்வி என்கிற விஷநாசினியை உடையவனா-? பரிசுத்த ஆவி என்கிற விஷநாசினியை (Toxln) உடையவனா-? பாருங்கள். எல்லாம் சரிதான். 117. ஓ-! சாத்தானின் அந்த நயவஞ்சகம்-! ஓ-! எவ்வளவாக புத்திக் கூர்மையினாலே ஒரு அழகான படத்தை அவன் சித்தரித்து ஆவியினாலே பிறக்காத ஒரு மனிதனை அதைச் சுற்றிக் கொண்டே இருக்கச் செய்யும்-! புத்திக் கூர்மையினாலன்றி மற்றெவ்விதத்திலும் அவனை கீழே தள்ள முடியாது வேறு ஒரு வழியும் இல்லை . 118. அது விசுவாசத்தினால் பகுத்தறிதலாகும். ஓர் பகுத்தறிதல். நாம் வார்த்தை என்ன சொல்லுகிறதோ, அதையே நம்புகிருறோம். 119. ஆனால் சகோதரன் பிரான்ஹாமே-! அவர்களும் பகுத்தறிதல் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்படியானால் பரிசுத்தாவியானவர் எதைச் செய்வேன் என்று வாக்குப் பண்ணினாரோ, அதை அவர்கள் செய்து காட்டட்டும். அப்பொழுது அதை விசுவாசிப்போம். பாருங்கள். அதனுடைய சான்று அங்கு உண்டு. 120. அந்த விஷநாசினி (Toxin) அந்த ஆளை தீண்டிய போது எவ்விதம் கிரியை செய்தது. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று அவர் கூறுகிறார். அந்த விஷநாசினி அதைத் தீண்டினால் அது போதும் அது சரியாகி விடும். பாருங்கள். ஆகையால் அவைகள் நமக்குக் கொண்டு வருகின்றன 121. இப்பொழுது அது இன்னும் சில நிமிஷங்களில் நாம் முடிக்கப் போகிறோம். ஆபேலிலிருந்து காயீனுக்கும், நோவாவின் காலத்தின் நியாயத் தீர்ப்புக்கும், நோவாவின் நாட்களுக்கும், நம்மைக் கொண்டு வருகிறது. நான் இங்கே உள்ள சின்ன வேத பாடத்தை வேத வசனங்களினாலே வேகமாகச் சொல்லி விளக்குவதை மிகவும் கவனமாகக் கேளுங்கள். அதன் பின் ஜெப வரிசைக்குச் செல்லப் போகிறோம். 122, உலகமானது வார்த்தையை மனித ஞானத்தினாலும் புத்திக் கூர்மையிலும் விளக்கம் காட்டி அதை ஏற்றுக் கொள்ளும்போது இந்த மனிதர்கள் பெரியவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகிறார்கள் என்று பார்த்தோம். வேதமும், அவ்வாறே ஆதி-6:4-ல் கூறுகிறது. இன்றைக்கு உலகம் எங்கிலும் காணப்படுவது போல் புகழ் பெற்ற மனிதர்கள் உண்மையில் அழகு வாய்ந்த பெண்களின் பின்னும் பொருட்களின் பின்னும் செல்கிறார்கள். சமீபத்தில் தான் ''பிரகாசிக்கிற சிவப்பு விளக்குகள்,'' என்ற செய்தியினை நாம் பார்த்தோம். அன்றொரு இரவின் செய்தியான இந்தச் செய்தியை நாம் பேசி, எவ்விதம் கடைசி காலத்திலே மிகவும் அழகாக இருப்பார்கள் என்றும், மனிதர்கள் புகழ் வாய்ந்த மனிதர்கள், கடைசிக் காலத்திலே மிகவும் அழகு வாய்ந்த பெண்களின் பின்னே சென்று; குறிப்பாக அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும்; அவர்கள் அவகீர்த்தி உண்டாக்கி இருக்கின்றனர் என்பதையும் அறிவோம். இந்த நாட்களில் இது கண்டு பிடிக்கப்பட்டாக வேண்டும். பாருங்கள், கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவிகளைக் காட்டிலும் மூன்று பங்கு பெண்கள் மதுபானக்கடைகளின் பணிப்பெண்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா-? மூன்றில் ஒருவர் என்ற விகிதத்திலே மதுபானக் கடைகளில் பணக்கார பெண்களும், உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, மாணவிகளும் இருக்கிறார்கள். நமது தேசத்திலே ஏறத்தாழ முன்றில் ஒரு பங்கு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது; அல்லது தங்கள் படிப்பை விட்டு விட்டு தாய்களாக மாறி வீடு செல்ல வேண்டியிருக்கிறது என்பதை அறிவீர்களா-? நான் இதைக் கணக்கெடுத்து எழுதிவைக்கவில்லை, ஆனால் இது உண்மையே. பால்வினை நோயை (Venereal) விரட்டியடிக்க பயன்படுத்தப்படும் பென்சிலின் மருந்தானது மக்களிடையே சரிரத்தைக் கறைப்படுத்தி, அந்தப்பூச்சி சாகாமலே தலைமுறைகளைச் சேதப்படுத்து கிறது. ஆனால் பாருங்கள்-! தேவன் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராக (நியாயந்தீர்க்கிறவராக) இருக்கிறார். அது மங்கோலிய குணங்களை (சப்பை மூக்கு, குறுகிய கண்கள், சிறிய தலை) மற்றும் அநேக கேடுகளை உண்டாக்குகிறது. பிள்ளைகள் ஓ-! பாவமானது எவ்வளவு வஞ்சனை உள்ளதாக இருக்கிறது-! எவ்வளவாக பாதிரியார்கள் ஜனங்களுக்கு முன்பாக நின்று அரைநிர்வாண ஸ்தீரீகளுக்கு அவர்களின் ஒழுக்கங்கெட்ட ஆடைகளுக்கு விரோதமாக ஒன்றும் பேசாதபடி, அவர்களை ஆலய பாடகர் குழுக்களிலும் அனுமதித்து, இன்னும் அவ்விதமான காரியங்களைச் செய்து நமது தேசத்தையும் நமது இனத்தையும் நரகத்துக்கு அனுப்புகிறார்கள். அது சரி-! தேவன் இக்காரியங்களைக் கண்டு இன்று அவைகள் அதிகமான அளவுக்கு காணப்படுவதை நோக்குகிறார். 123 இப்பொழுது என்னுடைய பிரசங்கத்துக்கு வருகிறேன், நான் ஒரு வினோதமான முறையைக் கையாண்டு கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக சொல்லிக் கொண்டே கடைசியில் என்னுடைய பிரசங்க வாக்கியத்தின் முக்கிய பாகத்தைப் பேசுகிறேன். நோவாவின் நாட்களில் நாம் பார்த்ததைப் போல இந்நாட்களில் நடக்கும் என்று சொன்ன தேவன், இன்று விசாரிக்கிறது போல அன்று விசாரிக்கிறவராக இருந்தாரா-? விசாரித்தாரா-? நிச்சயமாகவே அவர் விசாரித்தார். எதற்காக கவலைப்பட்டார்-? நியாயத்தீர்ப்பைக் கூறிய அவர், அது வரப்போவதை அறிந்தும் தம்மைத் தேடுகிறவர்களைக் குறித்துக் கவலைப்படுகிறவராய் இருந்தார். இன்றும் அவ்விதமாகவே இருக்கிறார். தம்மைக் குறித்து கவலை கொள்கிறவர்களை அவர் விசாரிக்கிறவராய் இருந்தார். அவர்களை வழி நடத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி தம்மால் தெரிந்து கொள்ப்பட்ட மக்களுக்கு தம்மால் நியமிக்கப்பட்ட முறையில் விடுதலை அனுப்பினார். அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். பாருங்கள். தேவன் தமது மக்களை விசாரிக்கிறவராக இருக்கிறார் என்று பார்க்கிறோம். (ஒலிநாடாவில் ஓர் காலிப்பகுதி- ஆசிரியர்) 124 நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம் என்பதை தெளிவாகப் பார்க்கிறோம். சோதோம், கொமோரா பட்டினங்களின் பாழடைந்தவைகளின் மீது நாம் எப்படி ஒரு நகரைக் கட்ட முடியும்-? ஒரே ஒரு போனிக்ஸ் நினைவுச்சின்னம் மாத்திரம் விடப்பட்டுள்ளது- அது கர்த்தராகிய இயேசுவின் வருகையே-! தேவனுடைய பார்வையில் நீதியுள்ளவர்களுக்கும் அவருடைய வார்த்தையிலே ஜீவிக்கிறவர்களுக்கும் ஓர் உலகத்தை, உபத்திரவ காலத்தின் மூலமாக அவர் சுத்திகரித்து, திரும்பவுமாக அதன் நிலைக்கு கொண்டு வரப்போகிறார். 125 கவனியுங்கள்-! நோவாவின் நாட்களில் தப்பும்படியாக சிரத்தை எடுத்தவர்களுக்காகக் கவலை கொண்டு அவர்களுக்கு ஓர் தீர்க்கதரிசியை அனுப்பினார். மேலும் அத்தீர்க்கதரிசி (தேவனால்) நியமிக்கப்பட்ட வழியிலே அவர்களை நடத்தினார். பாருங்கள் தேவன், நோவாவுடன் பேசி (அப்பொழுது எழுதப்பட்டிராத வார்த்தையின் மூலமாகப் பேசி) மக்களை இரட்சிக்கும் படியாக ஒரு பேழையை ஆயத்தப்படுத்தவும், எல்லா மக்களின் இரட்சிப்புக்கு ஒரே வழி தான் உண்டு, என்று எச்சரிக்கவும் சொன்னார். இந்த மனுஷன் தேவனால் நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக அவர்களுக்கு தப்பி கொள்ளும் வழியை நிருபிக்கிறவராக இருந்தார். கவனியுங்கள்-! தாழ்மையும் உண்மைத் தன்மையும் உள்ளவர்கள் இந்த மனிதனைக் கேட்டு: அவனை விசுவாசித்து அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். எதற்குத் தப்பித்துக் கொண்டார்கள்-? அந்த நாளில் அழிக்கப்படப் போகிற பாவ உலகத்தின் மரணத்தினின்றும், உலக முழுவதுக்கும் நியமிக்கப்பட்ட மரண மார்க்கத்தினின்றும் அவர்கள் தப்பினார்கள். தேவன் எவ்வளவாய் விசாரிக்கிறவராக, இருந்தார். (ஓ-! தேவனே-! ஜெபவரிசையில் நிற்கிற இவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் இவைகள் செல்லட்டும்), (தேவன் விசாரிக்கிறவராயிருந்தார்.) 126 இன்று உலக முழுவதையும் நோக்கிப் பார்த்து, மக்களை அவர் அழைக்கிறார். ஆனால் அவர்களோ கேலி செய்து அவரது அழைப்பை புறக்கணிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஆரம்பத்திலே மனம் திரும்புதலுக் கான ஓர் தருணம் இருந்தது. தேவன் ஏசாயாவை நோக்கி, நீ எழும்பிப் போய் எசேக்கியா மரிக்கப்போகிறான் என்று சொல்,'' என்றார். எசேக்கியா மனம் திரும்பினான். அங்கே இரக்கத்தைப் பெற்றான். தேவன் யோனாவை நோக்கி, நீ நினிவேக்குச் சென்று இன்னும் நாற்பது நாட்களில் அந்தப் பட்டணத்தை அழித்துப் போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்'' என்றார். அவர்கள் இரக்கத்திற்காகக் கெஞ்சினார்கள். அங்கே மனந்திரும்புதல் காணப்பட்டது. ஆனால் அவர்கள் அதை நிராகரித்த பொழுது, நியாயத் தீர்ப்பைத் தவிர வேறொன்றும் இல்லை. தேசமானது கிறிஸ்துவை புறக்கணித்தது. அவரது அழைப்புக்கு செவி கொடுக்கவில்லை. ஆகையால் நியாயத்தீர்ப்பை மாத்திரமே நாம் சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது. 127 இப்பொழுது மனந்திரும்புகிறவர்களைக் குறித்துத் தேவன் கவலை கொள்கிறாரா-? அவர்களுக்காக ஒரு வழியை எற்படுத்தினாரா-? இப்பொழுது நாம் கடந்த காலங்களில் அவர் செய்தவற்றைக் காணப்போகிறோம். 128 நோவாவின் காலத்தில் அவர் விசாரித்தார்-! தீர்க்கதரிசியை அவர் அனுப்பி, வழியைக் கொண்டு வந்து, அவர், அவளுக்கு வழியைக் காண்பித்து, அவர்கள் தப்பித்துக்கொள்ள வழியை உண்டு பண்ணினபடியால் நியாயத் தீர்ப்புக்கு அவர்கள் தப்பினார்கள். அவர்களுக்காகவும் அவர் கவலைப்பட்டார். வரப்போகிற எல்லா நியாயத்தீர்ப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படும்படியாக ஓர் வழியை அவர் ஆயத்தப்படுத்தி, அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்னாலேயே, கடைசி நாட்களில், அவர்களை ஓர் இடத்துக்குள் பத்திரமாக வைப்பதற்காக அவர் விசாரிக்கிறவராக இருந்தார். 129. தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடையவர்களுக்கு அவர் இவ்விதமாகச் செய்தார். தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே இவ்விதமாகச் செய்தார் என்று நாம் அறிகிறோம். ஜீவனின் வித்தை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களே. அதைக்காணும்படியாக முன் குறிக்கப்பட்டவர்களும் அவர்களே அவர்கள் மாத்திரமே. நாம் வேதத்திலே விசுவாசம் வைக்கிறவர்களானால் முன் குறிக்கப்படுதலை விசுவாசிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பாருங்கள். அது சரியே. யாரும் துன்பப்பட வேண்டியது தேவனுடைய சித்தமாய் இருக்கவில்லை. ஆனால் யார் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், யார் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் அறிந்து இருந்தார். 130. எகிப்து அழிக்கப்படுகின்ற நாட்களிலே தம்முடையத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக அவர் விசாரிக்கிறவராக இருந்தார். அவர்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்தார்கள். மோசேயின் நாட்களில் அவர் தம்முடைய ஜனங்களை விசாரிக்கிறவராக இருந்தார். அவர்களுக்கு யாரை அனுப்பினார்-? மறுபடியுமாக ஒரு தீர்க்கதரிசியையே; அது சரியா-? தம்டைய ஜனங்களை அவிசுவாச உலகினின்றும், அந்த நாளுக்குரிய வரப்போகிற நியாயத் தீர்ப்பினின்றும் அவர் பிரித்தெடுத்தார். அதை அவர் செய்தாரா-? எகிப்து தன்னுடைய பாவங்களை எவ்வளவு உயரத்துக்குக் குவித்ததோ, அந்த அளவுக்கு அவர் நியாயத்தீர்ப்பை எகிப்துக்கு அனுப்பி, தம் உடையவர்களை விசாரித்தார். ஏனென்றால் ஏற்கனவே அவர் ஆபிரகாம் இடத்திலே "அந்த தேசத்தை தண்டிப்பேன்,'' என்று சொல்லி இருந்தார். தம்முடைய உக்கிரத்தை அவர்கள் எல்லார் மேலும் ஊற்றுவதற்குப் பதிலாக, தம்முடைய கவனிப்பை அவர்களுக்கு அனுப்பினார். தமது தேற்றரவாளனை அவர்களுக்கு அனுப்பினார். தமது வார்த்தையை அவர்களுக்கு அனுப்பினார். நோவாவின் காலத்தில் செய்தது போல தமது வார்த்தையை தம்முடைய தீர்க்கதரிசியின் மூலமாகவே எப்பொழுதும் அனுப்புகிறார். நோவாவின் நாட்களில் அதே காரியத்தைச் செய்தார் எலியாவின் நாட்களில், மோசேயின் நாட்களில், இதே காரியத்தைச் செய்தார் என்று காண்கிறோம். தம்முடைய தீர்க்கதரிசியை அவர் அவர்களுக்கு அனுப்பி, அவர்கள் அவிசுவாசத்தினின்று தங்களைப் பிரித்துக் கொண்டனர். இப்போதும் அதே விதமாக நடக்கிறது. அவ்விதமானவர்களே அதை விசுவாசித்தனர். அவர்கள் மோசேயை விசுவாசித்தனர். பார்வோனின் கண்களில், மோசே - ஒரு மதவெறியனாக, மந்திரவாதியாக மாய்மாலக்காரனாக, பயங்கரமானவனாகக் காணப்பட்டான். ஆனால் கர்த்தருடைய வார்த்தையின்படி வெளி வந்தவர்களுக்கு தெரிந்து எடுக்கப்பட்டவர்களுக்கு - (''நான் அவர்களைக் கொண்டு வருவேன்'' என்பது கர்த்தருடைய வார்த்தை)- அவர்களுக்கு அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான், தேவன் நியமித்த வழியாக அந்த தீர்க்கதரிசி இருந்தான். கவனியுங்கள். அவர்கள் அவனை விசுவாசித்து, அந்த நாளின் நியாயத் தீர்ப்பிலிருந்து தப்பினார்கள். அவர்கள் மோசேயை விசுவாசித்தார்கள். 131 அவர்களை வெளியே கொண்டு வர அவர்களை விசாரிக்கிறவராக இருப்பேன் என்று சொன்ன அவர், அவர்கள் வெளி வந்த பிறகு, அவர்கள் பிரயாணத்திலும் அவர்களை விசாரிக்கிறவராக இருந்தார். சரீரப் பிரகாரமாக அன்று இருந்தது போல, ஆவிக்குரிய பிரகாரமாய் இன்று இவ்வாறு காணப்படுகிறது. அவர்களை விசாரித்தார். ஏன்-? அவர்கள் பிரயாணத்தில் அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர் சந்தித்து விசாரித்தார். அவ்விதம் செய்தாரா-? அவர்கள் வியாதிப்பட்ட பொழுது அவர்களை சுகப்படுத்தினார். அவர்கள் வியாதியினின்று விடுதலை பெற ஒரு வழியை உண்டாக்கி, சுகத்தை அவர்களுக்குக் கொடுத்தார். பாவத்தின் ஓர் சின்னமான ஒரு வெண்கல சர்ப்பத்தை அவர்களுக்குத் தந்தருளி, அதை நோக்கிப் பார்க்கும் பொழுது சுகத்தைக் கொடுத்தார். அவர்களுடைய வழியிலே அவர்களைப் போஷித்து, அங்கு அப்பம் இல்லாத பொழுது வானத்திலிருந்து அப்பத்தை வருவிக்கப் பண்ணினார். அவர், அவர்களைப் போஷித்தார். அது மாத்திரம் அல்ல, தம்மைத் தேடுகிறவர்களை விசாரிக்கிறார் என்று காண்பிக்கும் பொருட்டு, அவர்களை உடுத்துவிக்கவும் செய்தார். 132 அவர்கள் பாவ அறிக்கை செய்து, மனந்திரும்பி, விசுவாசித்து, ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தால், தேவன் விசாரிக்கிறவராய் இருக்கிறார், ஆனால் நீ முதலாவது கவலை கொண்டு அவர் உனக்காக அனுப்பினதை ஏற்றுக் கொள்ளுகிறவனாக இருக்க வேண்டும். ஒரு சிறு பிழை கூட இல்லாதவாறு அவர்கள் நிச்சயிக்கும் வண்ணம் அவர்களுக்காக கவலைப்பட்டு, ஒரு அக்கினி ஸ்தம்ப அடையாளத்தோடு நிரூபிக்கப்பட்ட தம்முடைய தீர்க்கதரிசி, தனிமையாக இல்லாமல், தனக்கு மேல் தேவனே இருந்து, அவரே அவர்கள் பாதையிலே வழி நடத்துகிறவராய் இருக்கிறார் என்பதைத் தம் மக்கள் காணும்படியாகத் தம்மைத் தேடுகிறவர்களை விசாரிக்கிறவராக இருக்கிறார். தமக்காகக் கவலை கொள்கிறவர்களுக்கு அவர் விசாரிக்கிற தேவனாக இருக்கிறார். தேவன் அந்த மனுஷனை நிரூபித்து, அவன், தேவனுடைய ஊழியக்காரன் என்பதை காண்பிக்க ஒரு அக்கினி ஸ்தம்பத்தை அனுப்பி, அந்தத் தேசம் வரைக்கும் வழி நடத்தினார். அவர் அக்கினி ஸ்தம்பத்தையும் மேக ஸ்தம்பத்தையும் அவர்கள் மத்தியில் இருந்து எடுக்கவில்லை'' என்று அவர் கூறினார். அந்த அக்கினி... ஓர் அக்கினிஸ்தம்பமும் மேகஸ்தம்பமும் அவர்களைப் பின்பற்றும் வரை, அவர்கள் அதை அறிந்தவர்களாய் இருந்தனர். அவர்களோடு அந்த வனாந்தரத்தில் வருஷங்களாக, வருஷ ங்களாக 40 வருஷங்கள் அவர் இருந்தார். அது சரியா-? அந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களை வழி நடத்திற்று. அவர்களுக்காக அவர் கவலைப் படுகிறவராய் இருந்தார். அவர்கள் அது ஏதோ விஞ்ஞான ரீதியானதோ அல்லது தப்பித்தவறி நடந்து விட்டதோ என்று எண்ணாமல், அது நியாயம் என்று நிரூபிக்கப்பட்ட செய்தி என்று உணரும் வரை - நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று அவர்கள் அறிந்து கொள்ளும் வரை, அவர்களுக்காக கவலைப் படுகிறவராய் இருந்தார். 133 இஸ்ரவேலராய் இராத புறஜாதியான ஒரு ஸ்திரிக்காகவும் கூட அவர் கவலைப்படுகிறவராய் இருந்தார். அவள் அந்த குழுவைச் சேராமல் வெளியிலுள்ளவளாக- பிரஸ்பிடேரியன் மெதோடிஸ்டு அல்லது ஏதோ ஒன்றைச் சேர்ந்தவளாக மற்ற பக்கத்திலுள்ளவளாக இருந்தாள். ஆனால் அவள் அதைக் கேட்டபொழுது அவளது பெயர் ராகாப் - ஒரு வேசியாக ஜீவித்து வந்தாள். ஆனால் அவள் தேவன், ஒரு அக்கினிஸ்தம்பத்தின் மூலமாக அவர்களை வழி நடத்தியதைக் கேட்ட பொழுது, தேவனை நோக்கிக் கூப்பிட்டு, தேசத்தை வேவு பார்க்க வந்தவர்களுக்கு இரக்கம் காண்பித்தாள். அவள் தனக்காகவும் தன்னுடைய ஜனங்களுக்காகவும் கவலைப்படுகிறவளாக இருந்தபடியால், தேவன் அவளை விசாரிக்கிறவர் ஆனார். அவள் தன் சொந்த ஸ்தாபனத்திலே தனது தேவர்களைச் சேவித்துக் கொண்டிருந்த பொழுது, அவள் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனின் ஓர் அடையாளத்தைக் கண்டு, தனக்குண்டான எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு அந்த அதி உன்னத காரணத்துக்கு - ஒப்புக் கொடுத்துவிட்டாள். இந்தப் பெரிய இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளத்தைக் கண்ட போது அவள் கூப்பிட்டு, இரக்கத்துக்காக, தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்குமாக கெஞ்சினாள். ஆனால் தேவனோ, அந்தப் பட்டணம் முழுவதும் சரிந்து விழும்படியாகச் செய்தபோது, இவளுடைய வீட்டில் ஒரு கல்கூட விழாதவாறு காத்து, அந்த அளவுக்கு அவளுக்காக கவலைப்படுகிறவரானார். அவர் விசாரிக்கிறார்-! அவள் வெளியில் இருந்தவள் ஆனாலும், அவள் அந்தக் கூட்டத்தில் இல்லாமல் இருந்த போதும், அவளுக்காக விசாரிக்கிறவரானார். அவர் எப்பொழுதும் விசாரிக்கிறார். அவர் எலியாவுக்காக, அவன் மாத்திரம் தன்னந் தனியாய் தேவனைத் தேடியபொழுது கவலைப்படுகிறவரானார். 134 அல்லேலூயா-! அது இந்த இடத்திற்கே வந்து சேருகிறது. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவல்களையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்" 1-பேதுரு-5,7 பேதுரு, தெரிந்தெடுக்கப்பட்ட மூப்பர்களுக்கும் சபையில் உள்ளவர்களுக்கும், உங்கள் கவலைகளை எல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்காக கவலைப்படுகிறார். அங்கே எல்லாவற்றையும் வைத்து விடுங்கள். ஏனென்றால், தேவனுக்கு முன்பாக நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாய் நடந்து கொண்டிருக்கிறீர்கள்,'' என்றான். 135 "எலியா தேவனுக்காக கவலை கொண்டபடியால் தேவன் எலியாவை விசாரிக்கிறவரானார். மற்ற எல்லாப் பிரசங்கிமார்களும் அந்த நாளின் தரிசனத்தை இழந்து தேவ சித்தத்தையும், தேவ வசனத்தின் மீதுள்ள அன்பையும் இழந்து, நவநாகரீக உள்ளவர்களானார்கள். யேசபேல் எந்த அளவுக்கு அந்தப் பிரசங்கிமார்களை நாகரீகமாக வைத்திருந்த போதிலும், அந்த தேசத்தின் முதல் ஸ்திரியான அவள் மற்ற பிரசங்கிமார்களை எவ்விதம் ஆட்டிப்படைத்தாளோ; அல்லது அந்தக்காலத்துப் பிரசங்கிமார்கள், அன்றைக்குள்ள ஸ்திரீகளை அவர்கள் இஷ்டத்திற்கெல்லாம் விட்டு இருந்தாலும், எலியா என்பவன், கர்த்தரின் நாமத்திலே அதற்கெதிராகக் கூக்குரலிட்டான், கூவி அழைத்தான். அவன் தேவன் சொன்னதைக் குறித்துக் கவலை உள்ளவனானபடியால், தேவன் எலியாவுக்காகவும் அவன் கூறின தேவ வார்த்தைக்காகவும் கவலை கொள்ளுகிறவராய் விசாரிக்கிறவரானார். நீ கர்த்தருக்காக கவலை கொள்ளும்போது, கர்த்தர் உன்னை, விசாரிக்கிறார். ஆனால் நீ முதலாவது கவலை கொள்ள வேண்டும், ஆம். 136 கவனியுங்கள். எலியாவைத் தம்முடைய வார்த்தையினாலே, ஸ்தாப னங்களிலிருந்து அழைத்த பொழுது, அவர் விசாரிக்கிறவராக இருந்தார். அப்பொழுது உள்ள சூழ்நிலையைப் பார்த்தால் அவன் பட்டினியால் செத்துப் போவானோ என்று இருந்தது. ஏனென்றால் அவனுக்குத் தசமபாகமும் காணிக்கைகளும் வருவது நின்றுபோயிருந்தன. தேவனுடைய வார்த்தை-க்குக் கீழ்ப்படிந்து கொண்டிருந்த நேரத்தில், தேவன் எலியாவுக்காகக் கவலைப்பட்டு, அவன் உணவில்லாதபடி வருந்த விடவில்லை அவர் காகங்களுக்குக் கட்டளையிட்டு, அவைகள் அவனைப் போஷிக்கும்படி செய்தார். வார்த்தையாகிய அவருக்காக எலியா கவலை கொள்கிறவனாக இருந்தபடியால், அவர் எலியாவை விசாரிக்கிறவராய் இருந்தார். 137 தேவனுடைய வார்த்தையின் மேல் அக்கறை கொண்டு, ஜெபிக்க விசுவாசமுள்ளவனாக தானியேல் தேவனைத் தேடினபடியால், தானியேலை அவர் விசாரிக்கிறவரானார். அந்த விதமான ஜெபத்தை இனிச் செய்யாதே,'' என்று ராஜா கூறிய போதிலும், தானியேல் பலகணிகளைத் திறந்து, எருசலேமை நோக்கி ஜெபித்தான். தானியேல் தேவன் பேரில் கவலை கொண்டான் தேவன் தானியேலை விசாரிக்கிறவரானார். தானியேல் தேவனுடைய வார்த்தைக்காகக் கவலைப்பட்டான். தேவன் தானியேலுக் காகக் கவலைப்பட்டார் அவர் ஒரு அக்கினிஸ்தம்பக்தை அனுப்பி, அந்தச் சிங்கத்தைப் பயமுறுத்தி, அது அந்த இரவு முழுவதும் தானியேலைத் தீண்டாதபடி பார்த்துக் கொண்டார். தானியேல் கவலை கொண்டபடியால் கர்த்தர் அவனை விசாரிக்கிறவரானார். ஆம் ஐயா. ஸ்தாபனங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் சிங்கங்களின் கெபிக்குள்ளே தூக்கி எறியப்படுவான் என்று அறிந்திருந்தும், உத்தமத்தோடு அவன் ஜெபித்தான். மனிதன் என்ன சொன்னான் என்பதைக் குறித்துப் பயப்படாமல் ஜண்னலண்டை முழங்கால் படியிட்டு ஜெபித்தான். தேவனிடமிருந்து வந்த ஒரு கட்டளையாக அது இருந்தபடியால், அவன் பலகணிகளைத் திறந்து உண்மையோடும் உத்தமத்தோடும் தன்னுடைய தேவனை நோக்கி தினந் தோறும் ஜெபித்து வந்தான். தேவனுக்காகவும் அவரது கட்டளைக்காகவும் அவன் கவலைப்பட்ட பொழுது, தேவன் திரும்பி தானியேலுக்காகவும் அவன் நின்ற ஆவிக்குரிய நிலைக்காகவும் அவனை விசாரிக்கிறவரானார். தானியேல் தேவனுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் நின்ற பொழுது, தேவன் அவனுக்காகவும், அவன் வார்த்தைக்காகவும், நின்ற உறுதிக்காகவும், அவனை விசாரிக்கிறவரானார். ஒவ்வொரு முறையும் தேவன் அவ்விதமாகவே செய்வார். ஆமென், 138 தங்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக, தேவனுடைய வார்த்தைக்காக, எபிரேய வாலிபர்கள் கவனத்துடன் அதை மதித்து, உண்மையோடு கீழ்ப்படிந்த போது, அவர்களை விசாரிக்கிறவரானார். எக்காளம் ஊதப்படும் வரை அவர்களுக்காக அவர் கவலைப்பட்டார். அவர்கள் தேவனிடத்திலிருந்து ஒரு கட்டளையைப் பெற்று இருந்தனர். "எந்த சிலைகளுக்கும், எந்த அந்நிய தேவனுக்கும் முன் பணிந்து கொள்ள வேண்டாம். அதை குனிந்து வணங்க வேண்டாம்,'' அதுவே கட்டளையாக இருந்தது. அவர்கள் எக்காளத்தை முழங்கி, வணங்காதவர்களை, சிலைக்கு முன் பணியாதவர்களை, சூளைக்குள்ளே, எரிகிற சூளைக்குள்ளே, தூக்கி எறிவோம்,'' என்றனர். அவர்கள் (இஸ்ரவேல் வாலிபர்கள்) சிலைக்குத் தங்கள் முதுகை காட்டும் வரைக்கும் கவனமாய் இருந்தனர். அது சரியே, தேவன் அவர்கள் மேல் கவலையுள்ளவராய் அக்கினி வந்த போது, அந்த நாலாவது ஆளை எரிகிற சூளைக்குள் அனுப்பி, அவர்களைக் குளிர்ச்சியாகப் பாதுகாத்தார். அவர்கள் அவரைத் தேடினபடியால், அவர்களை விசாரித்தார். 139 நீ ஏதாவதொரு ஸ்தாபன பிரமாணத்தை பற்றிக் கொள்ள விரும்பினால், நீ செய்வதைக் குறித்து தேவன் கவலைப்படுவதில்லை. நீ அதைச் செய்ய விரும்பினால், உன்னைக் குறித்து அவர் ஒன்றும் விசாரிக்க மாட்டார். ஏனென்றால், நீ மனிதன் சொன்னதைச் செய்கிறாய். ஆனால் உன்னுடைய உண்மையான பாவ அறிக்கையோடு, தேவ வசனத்தைப் பற்றிக் கொண்டு, தேவன் சுகமளிக்கிறவர் என்றும், அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் விசுவாசிப்பாயானால், அவர் உன்னை விசாரிக்கிறவராக இருப்பார். 140 அவர்களுக்காக அன்று கவலைப்பட்டு, அந்த எபிரேயப் பிள்ளைகளுக்காக விசாரிக்கிறவராய், கிறிஸ்துவாகிய நாலாவது ஆளை அனுப்பி அவர்களை விடுவித்தார். இதை நாம் அறிவோம். 141 குஷ்டரோகி கதறி ''ஆண்டவரே" என்ற போது பத்துக்குஷ்டரோகிகள் ஓடி வந்து உண்மைத் தன்மையுடன் ஆண்டவரே-! எங்கள் மீது இரக்கமாயிரும்,' என்று கதறி, தங்களுடைய தேவைகளுக்காக அவரை அணுகிய போது, அவர் தமது வல்லமையினால் அவர்களை விசாரிக்கிறவராய் இருந்தார். குஷ்டரோகிக்காக அவர் கவலைப்பட்டு, அவனை விசாரித்தார். ஏன் என்றால் அந்த தொழுநோயாளி தனது அறிக்கையில் அவரை ஆண்டவராக ஏற்று "ஆண்டவரே,'' என்று அறிக்கை செய்ய கவனமாக இருந்தான். 142 நூற்றுக்கதிபதி தன்னைக் குறித்து கவலையுள்ளவனாய், இயேசுவின் இடத்தில் உதவிக்காய் அனுப்பிய பொழுது, அவர் விசாரிக்கிறவராய் இருந்தார். ரோமாபுரியின் விக்கிரகங்களை எல்லாம் விட்டு விட்டு எல்லாரும் காணும்படியாய் பகிரங்க சாட்சியோடு, தன்னுடைய மகனைச் சுகப்படுத்த அவருக்காக அனுப்பிய பொழுது, கிறிஸ்துவுக்காக முன் நின்றதால், இயேசுவும் அவனை விசாரித்து அவன் இல்லத்துக்குச் சென்று அவனைச் சுகப்படுத்தினார். நீ கவலைப்படும் பொழுது, அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரித்தாலும் முதலாவது நீ அவரைத் தேடியாக வேண்டும். 143 இயேசுவைக் குறித்துத் தேடி விசாரிக்கையில், இயேசு யவீரை விசாரிக்கிறவரானார். அவன் இரகசிய விசுவாசியாக இருந்தான். அவன் சரியான பாதையில் இருப்பதாக விசுவாசித்தான். ஆனால் அவன் தன் ஸ்தாபனக் கொள்கையின் நிமித்தம் அதை விட்டு வெளி வந்து, தன் விசுவாசத்தை அறிக்கையிட முடியவில்லை. ஆனால் அவனுடைய சிறிய குழந்தை வியாதிப்பட்டு மரித்தது. அவன் தன் குழந்தையின் மரணத்தைக் கண்டு இயேசுவைத்தேடி, விசுவாசத்தோடு தன்னுடைய ஸ்தாபனத்தின் தொப்பியை அணிந்தவனாய் சென்று இயேசுவைக் கண்டான், யவீரு கவலையுடன் இயேசுவைத் தேடிய பொழுது, இயேசு தாமே விசாரிக்கிறவராய் அவனுடைய வீட்டுக்குச் சென்று அவளை உயிரோடு எழுப்பினார். அவர் மீது உன் கவலைகளை வைத்து விடு. ஏனென்றால் அவர் உன்னை விசாரிக்கிறவராய் இருக்கிறார். எந்த சூழ்நிலையானாலும், அவர் விசாரிக்கிறவராய் இருக்கிறார் 144 இதைப் பற்றிய கட்டளையில்லாதிருக்கும் பொழுதே, அதைப் பற்றி அவர் ஒன்றும் கூறாமல் இருக்கும் பொழுதே, அவர் விசாரிக்கிறவராய் இருந்தார். ஜெபவரிசையில் நிற்கக்கூடாத அளவிலே, அந்த சிறிய ஸ்திரி, "அவரின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாலே சொஸ்தமாவேன்,'' என்ற விசுவாசத்தோடு அவரைத்தேடினாள். அவர் அவளுக்காகக் கவலை யுற்றவராய் அவளை விசாரிக்கிறவராய் அவர் திரும்பிப் பார்த்து, அந்தக் கூட்டத்திலே அவளைக் கூப்பிட்டு, அவளுடைய விசுவாசம் அவளைச் சுகமாக்கிற்று என்று கூறினார். அந்த ஸ்திரி அவரை தேடினபடியால், அவர் விசாரித்துச் சுகப்படுத்தினார். 145 மனோவியாதியினால் பீடிக்கப்பட்ட லேகியோன் எனப்பட்டவன் சிரத்தை எடுத்து, எதிர்ப்பின் மத்தியில், பிசாசுகளின் கல்லறைகளின் மத்தியிலிருந்து, உருவிக் கொண்டு வந்தவனாய், இயேசுவைச் சந்திக்க அவர் முன்பு சாஷ்டாங்கமாய் விழுந்தான். லேகியோன்-! லேகியோன் முயற்சி செய்து அவரைச் சந்திக்க வராவிட்டால், அந்தப் பிசாசுகள் அங்கு வரவே வராது. அந்த லேகியோன் அந்த முயற்சி எடுக்க கவனம் செலுத்தியதால். தன் உடைய விசுவாசத்தில் நின்றதால், இயேசு அவனை விசாரித்து, லேகியோனுக்கும் அதிகமான எண்ணிக்கையுள்ள பிசாசுகளை அவனிடம் இருந்து விரட்டி அவனுடைய மனோவியாதியையும் சுகப்படுத்தினார். நீ அவரைத் தேடும்பொழுது அவர் உனக்காக கவலைப்படுகிறார். ஆம், ஐயா. நீ அவரைத் தேடும், பொழுது, அவர் உன்னை விசாரிக்கிறார், 146 இப்பொழுது, யூதனாக ஆதிகாலத்து சபையின் மனிதனாக, யூதருடைய ஜெபாலயத்தில் நன்மதிப்பைப் பெற்றவனாக இருந்த அந்த குருடான மனிதன் எரிகோவின் வாசலில், 'ஓ இயேசுவே,' என்று கத்தினான். ''இங்கே கேட்கிற இந்த சத்தம்,'' என்று அவன் கேட்ட பொழுது, அவர்கள், "நசரேயனாகிய இயேசு போகிறார், ஒரு தீர்க்கதரிசி,'' என்று கூறினார்கள். 147 இயேசுவே-! தாவீதின் குமாரனே'' என்று அவன் கூப்பிட்டது, அங்கே நின்ற போதகர்களுக்கும் குருமார்களுக்கும் என்னே கடிந்து கொள்ளுதலாக இருந்தது-! அவன் குருமார், போதகன்மார் என்ன சொன்னார்கள் என்று கவலைப்படவில்லை. ஆனால் அவர், மீதே அவன் நோக்கம் இருந்தது. தன் கண்களுக்குப் பார்வை கிடைக்கவே அவன் அவரைத்தேடி, அவரை நோக்கிக் கூப்பிட்டான் இயேசு அவனை விசாரிக்கிறவராய் அவனைச் சுகப்படுத்தினார். அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் நீ அவரைத்தேடும் பொழுது, அவர் உன்னை விசாரிக்கிறார் ஆனால் நீ முதலாவது அவரைத் தேடுகின்றதை நிரூபிக்க வேண்டும். 148 அவர், ஆறு மனிதர்களுடன் ஜீவித்த ஒரு ஸ்திரியை கூட விசாரிக்கிற வரானார். அந்த ஸ்திரி மேசியாவின் அடையாளமான பகுத்தறிதலை கண்டு கொண்டு, அவரை அறிந்து, அடையாளம் கண்டு கொண்டாள். அவள் அவரை யாரென்று கண்டு கொண்டதினால், அவர் அவளை விசாரிக்கிறவராய் அவளுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, அவள் அங்கே மொண்டு கொள்ளக்கூடாத ஜீவத்தண்ணீரையும் அவளுக்கு கொடுத்தார். அவளுடைய ஜீவியத்தின் தவறுகளை அவர் எடுத்துக் கூறிய பொழுது, அவள் அவரை, நோக்கி, ''ஐயா-! நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்'' என்று கூறினாள் அவள் அந்த நாள் வரும் படியாக நோக்கிய வண்ணம் இருந்தாள். அவள் எல்லா சபைகளின் குழுக்களில் ஓர் அங்கமாக இருந்ததால், அதைச் செய்ய அவளுக்குத் தருணமில்லாதிருந்தது. ஆனால் தன்னிலுள்ள அந்த தவறைச் சொன்ன அந்த ஓர் மனிதனைக் கண்ட போது அவள், ''ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி, என்று நான் அறிவேன். மேசியா வரும் பொழுது இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் அவர் செய்வார்,'' என்றாள். அப்பொழுது அவர், ''நானே அவர்,'' என்றார். 149 அது போதும் அவள் தேடினாள். அவள் அந்த தண்ணிர் பானையை வைத்து விட்டு, பட்டணத்துக்குள்ளே போய், ''வந்து பாருங்கள். நான் செய்தவைகளையெல்லாம் எனக்குக் கூறின அவர் தான் அந்த மேசியா அல்லவா-? என்றாள். அவள் ராகாபைப் போல் காணப்பட்டாள். அந்தப் பட்டணத்தையே விழிப்புறச் செய்யும் வரை அவள் கவனமாக இருந்தாள். ஏதோ ஒன்று சம்பவித்ததினாலே அவள் தேடினாள். நிரூபிக்கப்பட்ட வேத வாக்கியம் நிறைவேறியபொழுது - நிச்சயமாய் நிரூபிக்கப்பட்ட பொழுது அவள் கவலையுடன் தேடினாள். மனிதர்கள் என்ன சொன்னார்களென்றோ அல்லது யாராவது ஒருவர் என்ன கூறினார்களென்றோ அவள் கவலைப் படவில்லை. அவள் அதைக் கண்டாள். அது நடந்த பொழுது அவள் அங்கு இருந்தாள். அவள் விசாரத்துடன் தேடினாள். தன்னுடைய ஜனங்களுக்காக கவலையுற்று, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றிக் கூறி, அந்தப் பட்டணம் முழுவதுமே இயேசுக் கிறிஸ்துவை விசுவாசிக்கும்பாடியாகச் செய்தாள். அவள் தேடினாள். அவர் விசாரித்தார். நிச்சயமாய் அவர் அவ்விதம் செய்தார் 150. இயேசு இன்றைக்குரிய செய்திக்காகவும் விசாரித்தவராய், இன்றைக்கு அதே காரியங்களை தாம் சொன்னப்படியே நடந்தேறும்படியாகச் செய்தார். அவர் மரித்து உயிர்தெழுந்து, தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியை அனுப்பி, இன்றைக்கு தம்முடைய ஊழியத்தைக் காண்பித்து தாம் இன்னமும் உயிரோடு இருப்பதை நிரூபித்து காண்பிக்கிறார். அவர் தேவையுள்ளதற்கேற்ப விசாரிக்கிறார். நாம் கவலைப்படவேண்டாமோ-? அது சரியானதே-! நாம் அவரைக் குறித்து கவனமற்றவர்களாய் இருக்கலாமா-? அவர் இந்த ஊழியத்துக்காக மரித்தார். அவர் மரித்ததால் இங்கு இன்று பரிசுத்தாவியானவர் இந்த நாட்களில் இந்தக் காரியங்களை நமக்குக் காண்பிக்கிறார். அவர் உனக்காகக் கவலைப்படுகிறார். அவர் கவனத்துடன் அதை இங்கு கொண்டு வந்தார். அவர், இந்த சொற்றொடர்களை இங்கே பேசக் கவனமாக இருக்கிறார். அவர் உன்னை நேசித்தபடியினால் உனக்காக விசாரிக்கிறவராய் இருக்கிறார். அவர் இதைச் செய்யக் கவனமாயிருந்து பரிசுத்தாவியை இதற்காக அனுப்பி, இந்த ஊழியத்தை இன்று இங்கு செய்கிறார். 151. அந்த நாளிலே அவர் விசாரித்து அந்த விதமாக நிரூபித்தார். ஏன் என்றால் தேவன் எவ்விதமாக, தாம் இருப்பார் என்று கூறியதை நிரூபிப்பதற்காக அவர் வந்தார். அந்தக் காரணத்தினாலே தான் அந்த ஸ்திரீ அவரை அடையாளம் கண்டு கொண்டாள் அவள். மேசியா வரும் போது தீர்க்கதரிசியாக இருப்பார் என்று அறிவேன். ''மேசியா வரும் பொழுது நமக்கு இந்தக் காரியங்கள் அனைத்தையும் கூறுவார்,'' என்றாள் பாருங்கள்-! அவர் தேவனுடைய வார்த்தையை அவளிடத்தில் நிரூபிப்பதற்காக விசாரிக்கிற வராயிருந்தார். ஆமென். 152. இப்பொழுது பரிசுத்தாவியை அனுப்பி, அறிவு, விஞ்ஞானம், புத்திக் கூர்மை முதிர்ந்து உள்ள இந்நாட்களில், அதே பரிசுத்தாவியினாலே நம் மூலமாக அவர், இன்னும் மேசியாவாக அதே விதத்தில் நிரூபிக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது உள்ள கேள்வி நீ அவருக்காக கவலை கொள்கிறாயா-? இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்-? அது இங்கே இருக்கிறது. மறுபடியும் மறுபடியுமாக அது நிரூபிக்கப்பட்டது நீ கவலை கொண்டு, அதை விசுவாசிக்க முயலுகிறாயா-? நீ தவறு என்று கூறி உன்னுடைய பாவங்களை அறிக்கையிடக் கவனமாக இருக்கிறாயா-? உன்னுடைய அவிசுவாசத்தை அறிக்கையிட்டு அதை ஏற்றுக் கொள். நீ அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குக் கவலை கொள்கிறாயா-? அவர் இதை உனக்குக் கொண்டு வரும்படியாக மரித்து, மறுபடியும் உயிர்த்து எழுந்து, உன்னை விசாரிக்கிரவராய் இருக்கிறார். நீ அதைக் கவனத்துடன் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறாயா-? நோவாவின் நாட்களிலிருந்து ஆதியாமத்திலிருந்து கடைசி வரை எல்லா ஆகமங்களிலேயும் அது முழுவதுமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. நாம் அது முழுவதையும் நோக்குவ தற்கு நேரமில்லை. அவர் உன்னை விசாரிக்கிறவராகப் பார்த்துக் கொள். நீ தேடி ஒரு வழியைக் கொள்வதற்காகவே அவர் மரித்தார். அவர் அவ்விதமாகவே கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் அந்த வழியானது எதைச் செய்யும் என்று சரியாகக் கூறினதுமல்லாமல் இப்பொழுது, இங்கு இன்று உங்களுக்கு அதைச் சத்தியம் என்று காண்பித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது. நாம் வசிக்கும் இந்தப் பொல்லாத மணி நேரத்தில் உன் முழு இருதயத்துடன் இதை விசுவாசிப்பதற்கு, நீ கவனத்துடன் இதைத் தேடுகிறாயா-? 153. இந்த ஜெபவரிசையில் நின்றாலோ, அல்லது நிற்க முடியாமல் போனாலோ, நீ அவரைத் தேடுகிறாயா-? உன் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடு. அவர் உன்னை விசாரிக்கிறவராய் இருக்கிறார். இதைக் குறித்து உண்மைத் தன்மை உள்ளவனாய் இரு. நீ உண்மை உள்ளவனாய் இருக்கக் கவனமாய் இரு. ஏனென்றால் அவர் தமது நிருபிக்கப்பட்ட வார்த்தையினால் உன்னை விசாரிக்கிறவராக நிருபித்திருக்கிறார். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்து, அதைச் செய்திருக்கிறார். அவர் வார்த்தையில் வாக்குப் பண்ணியது. இதோ. இங்கே இருக்கிறது. அவர் விசாரிக்கிறார், உன்னைப் பற்றி என்ன-? அடுத்ததாக, நீ அவரைக் கவனத்துடன் தேடவேண்டும். 154. அவர் உன்னை விசாரிக்கிறவராய் அவர் தாமே உனக்காக எல்லா விரோதியையும் வென்று, நீ செய்ய வேண்டியதொன்றாகிய உண்மை தன்மையுடன் அதை விசுவாசிப்பதை மாத்திரமே உனக்காக வைத்து இருக்கிறார். அவர் மரணத்தை வென்றார். மரணமானது இனி மேல் வெல்ல முடியாத ஒன்றாக எனக்கில்லை. ஏனென்றால் ஏற்கனவே அது வெல்லப் பட்டுள்ளது. வியாதியானது வெல்ல முடியாத ஒன்றல்ல. கிறிஸ்துவுக்கு அது வெல்ல முடியாத ஒன்றல்ல. அது ஏற்கனவே வெல்லப்பட்ட, ஒன்று ஆகும். நான் கவனமாக சிரத்தையெடுத்து அதை விசுவாசிக்க மாத்திரம் வேண்டும். மற்றவர்கள் சொன்னதைக் குறித்து ஏதாவது உனக்கு பயம் உண்டா-? வைத்தியர்கள் உன்னுடைய வியாதியைக் கண்டு பிடித்துச் சொன்னதைப் பற்றி பயப்படுகிறாயா-? சபையானது உன்னிடத்தில் என்ன சொல்லும்,' என்று பயப்படுகிறாயா-? பிசாசுக்கு எதிரே நேரிடையாக நிற்பதற்குப் பயப்படுகிறாயா-? என் பாவங்கள் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டேன். எல்லாக் காரியத்தையும் தூக்கி இறக்கி வைத்து விட்டேன். ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்திருக்கிறேன். இங்கே இருக்கிறேன், ஆண்டவரே-! நான் வாஞ்சித்து உம்மைத் தேடும் ஆவலை என்னில் சிருஷ்டியும், நீர் என்னை விசாரித்தீர். நான் உம்மை வாஞ்சிக்கிறேன்'' என்று சொல். 155. கிருபை பொருந்திய அந்தப் பழைய பாட்டை நான் சிந்திக்கிறேன். அவர் உன்னை விசாரிக்சிறார். அவர் உன்னை விசாரிக்கிறார் சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்கள் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார்'' நாம் இப்பொழுது தலைகளை வணங்குவோம். இனிமேல் நாம் இதற்கு மேல் செல்லமுடியாது. அவர் உன்னை விசாரிக்கிறார் அவர் உன்னை விசாரிக்கிறார் சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்கள் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார். நமது இருதயமும் தலைகளும் வணங்க அவரிடத்தில் இந்தப் பாடலைப் பாடுவோம். அவர் உன்னை விசாரிக்கிறார்... (அவர் செய்த எல்லாவற்றையும் நாம் நோக்குவோம்) அவர் உன்னை விசாரிக்கிறார். சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்கள் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார் அவர் விசாரிக்க....... (இப்பொழுது, நீ அவரை வாஞ்சித்தால் (தேடினால்) நீ இந்தப் பாட்டைப் பாடும் பொழுது கைகளை உயர்த்து ) அவர் உன்னை விசாரிக்கிறார். சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்கள் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார் 156. பரலோகப் பிதாவே, இந்த பிந்திய மணிவேளையான இன்றைக்கு இந்த நேரத்தில் இருதயத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் அறிக்கையிடுகிறோம், உம்முடைய சொந்த ஜனத்துக்காக நீர் எப்பொழுதும் கவலை கொள்ளுகிறீர் என்று இப்போழுது உம்முடைய வார்த்தையினாலே நாங்கள் அறிகிறோம். ஆனால் எங்கள் மீதுள்ள தவறு. நாங்கள் கவலை கொள்கிறோமா-? கல்வியை மாத்திரம் பெற்று, நல்லது. எனக்கு டாக்டர் பட்டம் அல்லது சட்ட நிபுணத்துவத்திலே டாக்டர் பட்டம் எனக்குண்டு,'' என்று பெருமை பாராட்ட விரும்புகிறோமா-? - சிகிச்சையை அறிந்து, அதை எடுக்காமலிருப்பது. 157. தேவனே, இன்றைக்கு எங்களில் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் துக்கங்களை எங்கள் சொந்த இருதயத்தில் ஏற்று அவருடைய பாடுகளை எங்கள் மீது எடுத்துக் கொண்டு, நாங்கள் சகித்துக் கொள்ளவேண்டிய, உமது நாமத்தினாலே வரும் அவமானத்தையும் சகிக்க எங்களுக்கு உணர்வைத் தாரும். நாங்கள் ஆதிகாலத்துச் சீஷர்களைப் போல, திரும்பும் போது, அவருடைய நாமத்தினித்தம் வருகிற நிந்தையைச் சுமப்பதற்கு சிலாக்கியம் பெற்றவர்களாய் எண்ணப்படுவதற்கு சந்தோஷப்படச் செய்யும். இதைக் கொடுத்தருளும், பிதாவே. 158. நான் வியாதியஸ்தருக்காக அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபிக்கப் போகிறேன், பிதாவே அவர்களில் அநேகர் தங்கள் கைகளை உயர்த்தி, தங்களுடைய ஜெப அட்டைகளை உடையவர்களாய் ஜெபிக்கப்படப் போகிறார்கள். இங்கே இருக்கிறவர்களில் சிலர் ஜெப அட்டைகளைப் பெற சரியான நேரத்தில் வரவில்லை. ஆனால் அவர்கள் விசுவாசிக்கப் போகின்றார்கள். கர்த்தாவே, அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தலாம். இங்கே குழுமியிருக்கிற அனைவருமே அப்படிச் செய்தது போல எனக்கு தெரிகிறது. அபிஷேகிக்கப்பட்ட உமது வார்த்தையினால் உமது தெய்வீக பிரசன்னத்தை உணர்ந்து, இங்கே வைக்கப்பட்ட இந்தக் கைக்குட்டைகளி னால் அவர்களை சுகப்படுத்தும் கர்த்தாவே. அவர்கள் வேண்டுகோள் பதிலளிக்கப்படக் கிருபை செய்யும். 159. மேலும் இப்பொழுது இந்தக் கைக்குட்டைகளில் இருந்து, குழுமியிருப் போருக்கு வேதனையுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிற மனித உயிர்களுக்கு, ஓ, பிதாவே, கர்த்தரின் பிரசன்னம் வந்து அவர்கள் அனைவரையும் சுகப்படுத்தட்டும். இந்தக் காலையில் தெய்வீகக் கிருபையினாலே, நாங்கள் பாவங்களை அறிக்கை செய்யும் பொழுது நீர் செய்யமாட்டீரா-? என்னுடைய ஒன்றும் செய்யக்கூடாத தன்மையை உம்முடைய ஊழியக்காரனாகிய நான் அறிக்கையிடுகிறேன். நான் உமக்கு அளிக்கத்தக்கதாக நன்மை (Merit) என்று ஒன்று கூட இல்லை. நாங்கள் அபாத்திரர். நாங்கள் ஒருவர்கூட அதைச் செய்ய முடியாது. கர்த்தாவே, நாங்கள் கேட்கப் போகிறவைகளுக்கு நாங்கள் சிறிதேனும் பாத்திரர் அல்ல ஆனாலும் கர்த்தாவே, இயேசு மகிமையில் மேலே சென்று எங்களைத் தம்முடன் சேர்த்துக் சொள்வதற்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி எங்களை வந்து அழைத்துச் செல்வார் என்று அறிவோம். அவர் பரிசுத்தாவியாகிய தேற்றரவாளனை எங்களுக்கு அனுப்பி, அவர் அவருடைய வேலையைச் செய்து, எங்களுடனே எப்பொழுதும் இருப்பார் என்று கூறினார். 160. ஓ... பரிசுத்தாவியானவரே-! தேவ ஆவியே, நீர் இந்த பூமியிலே நடந்து செய்த காரியத்தைக் கர்த்தாவே, இப்பொழுது அதே பாணியில் செய்து, இக் காலையில் புதிய விதத்தில் எங்கள் மீது இறங்கி, உமது பிரசன்னத்தை நிருபியும், கர்த்தாவே. இந்தக் கடைசி நாட்களில், உமது வார்த்தையை நிருபிப்பதற்காக. நீர் இங்கே இருக்கிறதை இங்கே குழுமியுள்ளவர்கள் அறிந்து கொள்ளும்படியாகச் செய்து, லோத்தின் நாட்களில் இருந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் இருக்கும்' என்பதை நிருபித்தருளும். எங்களுடைய பாவ அறிக்கையோடு இதைச் சமர்ப்பிக்கும் பொழுது, உமது மகத்துவத்திற்காகவும் மகிமைக்காகவும் இதைக் கேட்கிறோம். உமது இரத்தத்தினாலே சுத்திகரியும், இரத்தத்திற்குள் எங்களை சுத்திகரித்து, வார்த்தையாகிய தண்ணீரினால் எங்களைக் கழுவியருளும். இக்காலையிலே பேதுரு கூறிய அந்த வேத பாகத்திலே, இந்த அவிசுவாச உலகிற்கு, நாங்கள் முன் மாதிரிகளாக இருக்க எங்களை அர்ப்பணிக்கிறோம். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 161. பியானோ அருகில் உள்ள சகோதரியை ஒரு நிமிடம் கேட்கப்போகிறேன். இன்று மிகச் சிறிதான அளவு நேரம் நாம் பிந்திவிடலாம். ஆனால் அப்படி நான் செய்வதில்லை. எங்களோடு. பொறுமையாயிருங்கள். ஒவ்வொரு வருக்காக ஜெபிக்க போகிறோம். பில்லிபால், இங்கே எங்கே இருக்கிறார்-? உன்னுடைய ஜெப அட்டைகளை எங்கே கொடுத்தாய்-? 'பி' என்ற எழுத்திலிருந்து 100. 'பி' என்ற எழுத்துடன் உள்ள சிலவற்றை எடுத்து அவர் நமக்குத் தெரிந்து கொள்ளும் அறிவைத் தருகிறாரா என்று பார்ப்போம். இது எப்படி-? நம்முடன் இங்கு இருக்கிறாரா என்று பார்ப்போம். அவரிடத்தில் கேள். அவர் அதைச்செய்வார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நான் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தேன். நான் பிரசங்கித்து அதை தீர்த்து விட்டேன். 162. நாம் இப்பொழுது ஜனங்களை நிற்கச் சொல்லுவோம். அவர்கள் எல்லாருக்காகவும் ஜெபிக்கப் போகிறோம். முதலாவது எண்ணிலிருந்து ஆரம்பிப்போம், 'பி' யாரிடத்தில் உள்ளது-? (சகோ.பிரான்ஹாம் 'பி' வரிசையில் ஒன்று முதல் பத்து எண்கள் வரையிலுள்ள ஸ்திரி, புருஷர், சிறுவர்களை ஒவ்வொருவராக அழைத்து வரிசைப்படுத்துகிறார்) "பத்து' எண் உள்ள சிறு பையன். 163. இந்த அருமையான காரியத்தைச் சிந்தித்துக்கொண்டிருக்கும் பொழுது, நான் உள்ளே நுழைகையில், ஒரு சிறு பையன்- அதை நினைக்கும் நினைவு என்னைக் கொல்லுவதைப் போல் இருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு சிறு பையன் எழும்பி, சகோ.பிரான்ஹாமே, எனக்காக ஏதாவதொன்றைச் செய்வீர்களா,'' என்று கேட்டான். இந்தச் சிறுவனைப் போன்றவன். நான் என்ன காரியம் மகனே,' என்று வினவினேன். 164. என்னுடைய தாய்க்காக ஜெபியுங்கள்,'' என்று கூறி, "அவள் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி, பயங்கரமான ஜீவியத்தைச் செய்கிறாள் என்று சொன்னான். நான், நீ எங்கு வசிக்கிறாய்-? இந்தப் பட்டணத்திலேயா-! என்று கேட்டேன். ''ஆம், ஐயா,'' என்று சொன்னான். 165. அவன் தனது தாய் ஒரு நல்ல ஸ்திரீயாக வாழ விரும்பினான். ஆகையினால் தான், ஏசாயா, ஒரு சிறு பையன் அவர்களை நடத்துவான்,'' என்று கூறினார். 166. (இப்பொழுது 10 எண்ணிலிருந்து 18 எண்கள் வரையிலுள்ள வரிகளை சகோ. பிரான்ஹாம் ஒவ்வொருவராய் ஒழுங்குபடுத்துகிறார்) 167. (சகோ,நெவிலை அழைத்து ஜெபவரிசைக் குறைய குறைய, காத்து இருப்பவர்களை வரிசையில் சேர்க்கும்படி கூறி, சகோ.பிரான்ஹாம் தொடர்கிறார். 168. இப்பொழுது உருளும் நாற்காலியில் இருக்கும் மனிதர் ஜெப அட்டையை உடையவராய் இருக்கிறாரா-? அவரிடத்தில் ஜெப அட்டை உண்டு. சரி, இவரை ஜெப வரிசைக்குள் எடுத்துச் செல்லுங்கள். இப்போது எழும்ப முடியாத யாராவது இங்கே இருக்கிறீர்களா-? அவர்கள் தருணம் வரும் பொழுது யாராகிலும் உதவுங்கள். 18, 20, நான் விட்டதில் இருந்து ஆரம்பியுங்கள். பின்பு 21, 2 - நீங்கள் வந்து நிற்கவேண்டிய உங்கள் இடம் உங்களுக்குத் தெரியும். 169. இப்பொழுது நீ கவலை கொள்கிறாயா-? அவர் எப்போதும் விசாரிக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா-? இப்போது அவர் உன்னை விசாரிக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா-? அவர் ஒரு முறை விசாரித்தால், தொடர்ந்து எப்பொழுதும் விசாரிப்பார்' நீ அதை விசுவாசிக்கிறாயா-? (சபையார் -? 'ஆம்'' என்கின்றனர் - பதிப்பாசிரியர்) இப்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான பக்தியுடன் உங்கள் இடத்திலே நின்று ஜெபியுங்கள். கூட்டத்திலே உள்ள நீங்களும் ஜெபியுங்கள். இப்பொழுது அவர் எப்படி விசாரித்தார். அவர் இனி மேல் விசாரிக்கமுடியாத அளவுக்கு எந்த மனிதனோ, எந்தத் தீர்க்கதரிசியோ, வேறெந்த மனுஷனோ தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கிரியைகளின் எல்லைகளுக்கப்பால் செல்ல, செய்ய முடியாது. அது சரியா-? இப்பொழுது, நீ இந்த ஜெப வரிசையில் 100 முறை வந்து சென்றிருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் இப்பொழுது நின்று கொண்டிருக்கிற, உட்கார்ந்து கொண்டிருக்கிற நீ உன்னுடைய ஜீவியத்தில் அவிசுவாசமாகிய பாவம் இருந்தால், இப்பொழுதே அறிக்கை செய். அதைச் செய்யாமல் இங்கு வரத்துணியாதே. நீ இந்த வரிசையினுள் வந்து ஒரு மனிதன் எவ்வளவுதான் அபிஷேகிக்கப்பட்டு, நின்று, உன் மீது கைகளை வைத்தாலும் நீ அதை விசுவாசிக்காவிட்டால் 100 மைல்களுக்கப்பால் அதை தவறவிட்டு விடவாய். நீ அதை விசுவாசிக்க வேண்டும். நீ அதை அறிக்கை செய்ய வேண்டும். பாருங்கள். பின்பு நீ இங்கே நோக்கினால், நீ இதைக் கண்டு கொண்டாய் என்று நம்புகிறேன். நீ உன்னுடைய வார்த்தையை தேவனிடத்தில் வைத்து இருக்கும் பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை உனக்கு அளிக்காமல் இருப்பது, முழுவதும் அவரால் கூடாத ஒரு காரியமாகும், பார்-! உண்மையாக அதை நீ விசுவாசித்தால் அதை சந்தேகிப்பதற்கு உன்னில் ஒன்றும் இருக்காது. நேரமோ இடமோ, மற்ற எந்த ஒரு காரியமோ உன்னை சந்தேகிக்க ஒட்டாது... நீ அதை விசுவாசி. நீ அதை விசுவாசிக்கிறாயா-? (சபையார் ஆம். ''ஆமென்'' என்கின்றனர் - பதிப்பாசிரியர்) 170 நான் இப்பொழுது இந்த ஜெப வரிசையை நோக்கிப் பார்க்கிறேன். நான் தெரிந்த வரையில் இங்கே இருக்கிற இந்த மனுஷனைத் தவிர நான் யாரையும் அறியேன். ஜீன் ஸ்லாட்டர் அங்கே நிற்கிறார், அவரைத் தவிர மற்ற யாரும் எதற்காக. நிற்கிறார்கள் என்று அறியேன். எதற்காக நிற்கிறார்கள் என்று எனக்கு ஒரு எண்ணம் கூடக் கிடையாது. தேவன் அதை அறிவார். நீங்களெல்லாரும் உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். அங்கே நிற்கிற நீங்களும் கூட. இந்தக் கூட்டத்தில் உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள் இப்பொழுது இயேசுகிறிஸ்து உங்களைப் பற்றி அறிகிறார் என்று எத்தனை பேர் உணர்வுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்-? 171 எத்தனை பேர் இவ்விதமாகச் சொல்ல விருப்பம் உள்ளவர்களாய் இருக்கிறீர்கள்-? (சகோ.பிரான்ஹாம் சொல்லுகிற கீழ்க் கண்ட, வாக்கியத்தை, ஒவ்வொரு வார்த்தையாக அவர் கூற, சபையார் கூடச் சேர்ந்து சொல்கின்றனர்) ''இயேசுக்கிறிஸ்து கல்வாரிச் சிலுவையில் அறையப்பட்ட பொழுது, அவர் என்னைச் சுகப்படுத்தினார் என்று முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன்'' என்பதே. அது சரியே. பாருங்கள். இப்பொழுது, அவர் ஏற்கனவே அதைச் செய்து இருந்தால், பின்பு உன்னுடைய விசுவாசத்தினால் அதை ஏற்றுக் கொள். இப்பொழுது அவர் உன்னை விசாரிக்கிறவராய் அதைச் செய்து முடித்தார். நீ உன்னுடைய எல்லா சந்தேகங்களையும் போக்கி விட்டு, விசுவாசித்து, அவரைத் தேடுகிறாயா-? உன்னுடைய கவலைகளை அவர் மீது வைத்து விடு ஏனென்றால் அவர் உன்னை விசாரிக்கிறார். 172 இப்போது நீ வியாதியால், பீடிக்கப்பட்டவனாய் இருந்தால், நல்லது, ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான காரியங்களை பரிசுத்தாவியானவர் செய்ததை நான் கண்டு உள்ளேன் - சூம்பிப்போன கரங்களிலிருந்து, மரித்த மனிதர் வரை சுகமாக்கப்பட்டதை, உயிர்ப்பிக்கப்பட்டதை அறிவாய். 173 இங்கே மேடையிலே, எங்கள் முன்னாலே, மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு மனிதன் செத்தவனாய் கீழே விழுந்தார். இங்கே இப்பொழுது அவர் மனைவி ஒரு பதிவான நர்ஸ். =இங்கே நம் மத்தியிலே இருக்கிறாள். அந்த மனிதன் நெடுஞ்சான் கிடையாய் கீழே விழுந்தார். இங்கு அந்த மனிதன் திடீரென்று கீழே விழுந்தார். இங்கு எங்கேயோ அவர் இப்பொழுது உட்கார்ந்து இருக்கிறார். இங்கு இதோ அவருடைய மனைவி உட்கார்ந்து இருக்கிறாள். இங்கு இப்பொழுது அவர் எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். ஆ-! இதோ இங்கே தான் நின்று கொண்டிருக்கிறார். கண்கள் பின்னாலே செருகி, கருமை நிறம் அடைந்தவராய் கீழே விழுந்தார். நான் உடனே கீழே இறங்கினேன். அவள் அந்த மனுஷனை பரிசோதித்து, நாடித் துடிப்பு இருதயத்துடிப்பு ஒன்றும் இலலை என்றாள். நான் என் கையை வைத்துப் பார்த்தபோது, மரித்துப் போயிருந்தார் அந்த மனுஷன், அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய ஆவியை அழைத்த போது எழுந்திருந்தார், பாருங்கள். பாருங்கள். 174 அது என்ன-? அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். அது நானல்ல. அதுவே தேற்றரவாளன் கிரியை செய்தது. பரிசுத்தாவியானவர் நமக்காகப் பரிந்து பேசியது. பார்த்தீர்களா-? நாம் அவரை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இனி அவர் தான் நமக்காக பரிந்து பேச வேணடியது. பின்பு எந்த அளவுக்கு நான் தேவன் உனது சித்தத்துக்கு எதிராக உன்னை இரட்சிக்க முடியுமா-? முடியவே முடியாது. உன்னுடைய சித்தத்துக்கு எதிராக அவர் உன்னைச் சுகப்படுத்த முடியாது. நீ அதை விசுவாசிக்க வேண்டும். 175 இப்பொழுது தம்மை அவர் நிரூபித்தால் எப்படி இருக்கும்-? தம்மால் எனக்கு அளிக்கப்பட்ட தெய்வீக ஈவினால் இயேசு கிறிஸ்து நம்மோடு இருப்பதையும், இந்த தேற்றரவாளனே இயேசுகிறிஸ்து என்பதையும், அவரே வார்த்தை என்பதையும் நிரூபிப்பார். அது சரியா-? ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அது சரியா-? அந்த வார்த்தை தேவனாக இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்,' வேதம் எபி.4-ம் அதிகாரத்தில், தேவனுடைய வார்த்தை இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் கருக்கான தாயும் இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கிறதாயும் இருக்கிறது,'' என்று கூறுகிறது, அது சரியா-? அதைத் தான் இயேசுவும் அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையாக நிரூபித்தார். மேசியா: ஓ, என்னே இது-! அதை நீ பார்க்க முடிகிறதா-? மேசியா என்றால் யார்-? அபிஷேகிக்கப்பட்டவர். என்ன அபிஷேகம்-? அபிஷேகிக்கப்பட்ட வார்த்தை-! வார்த்தை மாம்சமானார்,' அவரே அபிஷேகிக்கப்பட்ட வார்த்தை-! சகோதரன் வேயில் பார்த்தீர்களா-? அவரே அபிஷேகிக்கப்பட்ட வார்த்தை . 176 இப்பொழுது நீ உன்னை அவருக்கு ஒப்புக் கொடுக்கும் பொழுது அவர் நீ அறிவதற்கு மேலாக உன்னை உபயோகப்படுத்தி, அவர் இன்னும் அபிஷேகிக் கப்பட்ட வார்த்தை என்றும், இருதயத்தின் எண்ணங்களை வகையறுக்கிறவர் என்றும் நிரூபிக்கிறார். ஓ-! எவ்விதமாக யாரும் சந்தேகிக்கலாம்-? விசுவாசி சந்தேகப்படாதே-! இங்கே உட்கார்ந்திருக்கிற உனக்கு அந்த காரியத்தை வலியுறுத்திச் சொல்லுகிறேன். ஒரு சிறு ஸ்திரீ, அவன் ஒரு வேளை ஜெப வரிசையில் நிற்கக்கூடாது என்று எண்ணி, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்ட பொழுது அவர் திரும்பிப் பார்த்தார். இதை விசுவாசிக் கிறாயா-? இன்றைக்கும் அவர் அதைச் செய்யமுடியும் என விசுவாசிக் கிறாயா-? ஆம் இப்பொழுது அவரை எப்படித் தொடுவாய்-? 177 வேதம், அவரைப் பிரதான-ஆசாரியன் என்றும், இப்பொழுது தேவன் உடைய மகத்துவத்தின் வலது பாரிசத்தில் இருந்து நமது பாவங்களுக்காக பரிந்து பேசுகிறவராய் இருக்கிறார் என்றும் கூறுகிறது. அவரை விசுவாசிக் கிறோம் என்று அறிக்கையிடுகிறோம். பிரதான ஆசாரியாரைத் தொட நாம் விரும்புகிறோம். நாம் அவரைத் தொடுகிறோம், அவர் எவ்விதம் கிரியை செய்கிறார்-? அவர் இங்கு பரிசுத்தாவியின் ரூபத்தில் இருக்கிறார். அவர் உன்னிடத்தில் திரும்பவுமாகப் பேசி உன்னிடத்தில் உள்ளதை அப்படியே கூறுவார். அது சரியா-? நீ இப்பொழுது அதை விசுவாசித்து அமைதியாக உன் இருக்கையில் அமர்ந்து, பயபக்தியுடன் இதைக் கவனி. இப்பொழுது அதை அவர் 3 முறை செய்தால் அது போதுமானதாக இருக்கும். இல்லையா-? 3 முறைகள் அதைச் செய்தால் - 1, 2, 3, அதைச் செய்தால், நீ எப்படி செய்கிறாய்-? 178 இப்பொழுது ஒரு நிமிடம் ஜெபிப்போம். பார். இப்பொழுது சிறிது வித்தியாசமான ஏதோ ஒன்று. பிரசங்கித்து விட்டு, இதற்குத் திரும்பு. இப்போது நான் இதற்காக அநேக நாட்கள் கர்த்தரிடத்தில் கேட்கவில்லை. ஆனால் தேவன் என் இருதயத்தை அறிந்து, உனது விண்ணப்பத்தை உனக்கு அருள் செய்வார். அவர் அதைச் செய்வார் என்று விசுவாசிக்கிறேன். 179 இங்கே ஒரு ஸ்திரீ நிற்கிறாள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியராய் இருக்கிறோம். எனக்குத் தெரிந்த வரை இவளை என் ஜீவியத்தில் நான் பார்த்ததே கிடையாது. இவள், என்னுடைய கூட்டங்களில் எங்காவது இருந்து கேட்டிருக்கலாம், அல்லது என்னுடைய புஸ்தகங்களின் மூலமாக அறிந்து இருக்கலாம். ஆனால் என் பரம பிதா அறிந்திருக்கிறார். என் கண்கள் என் வாழ் நாளில் அவளைக் கண்டதே இல்லை. அவள் அந்நியராக இருக்கிறாள். 180 அவர் மாறாதவராக இருக்கிறார். இங்கே நான் சிறிது நேரத்துக்கு முன் பேசிய கிணற்றண்டையிலுள்ள ஸ்திரீயை இயேசு சந்தித்தது போல இங்கே ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை சந்திக்கிறார், அவளை அவர் விசாரித்தார். இப்பொழுது, இங்குள்ள ஸ்திரி, அந்த ஸ்திரியைப் போல குற்றம் புரிந்தவளாக இராமல், ஏதோ ஒரு குறையோடு இருக்கிறாள். ஸ்திரீக்கு அவர் கவலைப்பட்டது போல் இங்கே உள்ள இவளுக்காக கவலைப்படுகிறார். பாருங்கள். அவர் விசாரிக்கிறார். அவள் அதைக் கண்ட போது, அடையாளம் கண்டு கொண்டாள். அதைப் போன்று இன்று நாங்கள் இருவரும் நின்று கொண்டிருக்கிறோம். அவளை நான் பார்த்ததே கிடையாது. 181 இப்பொழுது அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் காணக்கூடாத அவர், இப்பொழுது விசுவாச உணர்வுகளினால் அவரை எனக்கு வெளிப் படுத்தும் போது, அவருடைய வார்த்தை அந்த விசுவாச உணர்வுகளை இந்தக் கடைசி நாட்களில் நமக்கு அருகில் கொண்டு வந்து, தத்ரூபமாய் அதைக் காண்பிக்கின்றது. நமது புலன்களுக்கு மிக அருகாமையில் கொண்டு வந்து, அபிஷேகித்து, நமது மத்தியிலே ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்திலே அசைவாடி நாம் காணும்படியாகச் சென்று விட்டார். அப்படிச் செய்ய வில்லையா-? இப்பொழுது இங்கே இருக்கிறார். இங்கே இருக்கிறார் என்று நான் அறிகிறேன். என்னுடைய விசுவாசம் அவர் இங்கிருக்கிறார் என்று கூறுகிறது. அவர் இல்லையா-? அவர் வாக்குப் பண்ணியது போல, அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்தும் வண்ணம் தம்மை காண்பித்து இந்த ஸ்திரீயின் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள முடியும். அவர் செய்த அதே கிரியையை பரிசுத்தாவியானவர் செய்வார், 182 நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் உங்களோடு ஒரு நிமிஷம் பேச விரும்புகிறேன். 183 தாகத்துக்குத்...தா என்று, அன்று கிணற்றண்டையில் உள்ள ஸ்திரீ இடத்தில் பேசியது போல - சீஷர்கள் ஆகாரத்துக்காக வெளியே சென்ற பொழுது. கிணற்றண்டை யோசித்துக் கொண்டு அந்த ஸ்திரீயினிடத்தில் ஒரு நிமிஷம் பேச வேண்டியிருந்தது. பிதா தாமே அவரை அங்கு அனுப்பி இருந்தார். அவரை அனுப்ப வேண்டி இருந்தது. எரிகோவுக்குப் போய்க் கொண்டிருந்தார். சமாரியா வரைக்கும் சென்றார் - மலையின் மேல் வரைக்கும் அங்கே போக வேண்டிய அவசியம் இருந்தது. 184 எப்படியாகிலும் நான் இங்கு வரவேண்டியிருந்ததால் பிதாவானவர் அரிசோனாவிலிருந்து என்னை இங்கு அனுப்ப, நீ இங்கு உள்ளே வந்தாய். இதெல்லாம் அதைப் போலவே இருக்கிறது. எதேச்சையாக எதுவும் நடப்பது இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக இதெல்லாம் நடக்கிறது. கர்த்தரின் கிருபையே - சரி-! 185 இப்பொழுது உன்னை அறியாதவனாய், நீ நல்ல சுகத்துடன் காணப்படுகிறாய். நீ அதற்காக இல்லாமல் வேறொரு காரியத்திற்காக இருக்கலாம், உனக்கு மிக நெருங்கினவர்களுக்காக இருக்கலாம், வீட்டுக் காரியமாக, பணத்தைப் பற்றிய காரியமாக இருக்கலாம் - அதைத் தெரிந்து கொள்ள எனக்கு வேறு வழியில்லை என்று நீ அறிவாய். ஆனால் அவர், நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்று எனக்கு விளக்கிக் கூறுவாரே ஆனால் அது சத்தியமா இல்லையா என்று நீ அறிவாய். பின்பு குழுமி இருப்போர் ஒரே இருதயத்தோடு அதை விசுவாசிப்பீர்களா-? நாங்கள் பேசுவதை நீ இப்பொழுது கேட்டாய். அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் மேடையில் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். 186 நான் தலையை இவ்விதமாகப் பிடித்து கொண்டிருக்கிற, ஒரு ஸ்திரியைப் பார்க்கிறேன். ஒரு தலைக்குத்து போல பாதிக்கப்பட்ட வளாய் அந்தத் தலைவலி அவளை வேதனையுறச் செய்கிறதாய், எப்பொழுதும் இருந்து கொண்டே அவளுக்குக் தொல்லை விளைவிக்கிறது அது உண்மையா-? அது சரியானால் உன்னுடைய கையை உயர்த்து. பாருங்கள்-! அது சரியே. மற்றொரு காரியம்-! அவளுக்கு தைராய்டு சுரப்பியில் கஷ்டம் என்று சொல்லப்பட்டு, அது அவளைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. அது தைராய்டு சுரப்பியின் வியாதியே. மேலும் அநேக பெலவீனங்கள் உன்னை வருத்தப்படுத்தி, நரம்புத்தளர்ச்சியில் பெலவீனம் அடைந்து குழப்பமடைந்து சில சமயத்தில் எங்கே நிற்கிறோம் என்று கூடத் தெரியாமல் இருக்கிறோமோ அல்லது இல்லையா என்று கூட நினைத்து'' இருக்கிறாய். அது சரியே. அது சாத்தியமே. அது அவருக்குத் தெரியும். அதை மறைக்க முயன்றாலும் உன்னால் இயலாது. பார். நீ யார் என்னவென்று அவர் எனக்குக் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறாயா-? நீ சரியானவலாய், வீடு திரும்பலாம். இயேசு கிறிஸ்து உன்னைச் சுகப்படுத்தினார். நீ இதை விசுவாசிக்கிறாயா-? 187 எனக்குத் தெரியாது. இயேசு கிறிஸ்து எல்லாக் காரியங்களையும் அறிகிறார். இப்பொழுது மற்றொரு அன்னியராக எனக்கு ஒருவர். தேவன் நம் இருவரையும் அறிகிறார். அவரது ஊழியக்காரனாக, அவரது தீர்க்க தரிசியாக என்னை விசுவாசிக்கிறாயா-? அவரது வார்த்தையிலிருந்து பேசிய இக்காரியங்கள் சத்தியம் என்று நம்புகிறாயா-? நீ அப்படிச் செய்கிறாயா-? கர்த்தராகிய இயேசு நீ எதற்காக இங்கிருக்கிறாய் என்று கூறினால், நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கலாம். அவர் உன்னை விசாரிக்கிறபடியால், இதை செய்கிறார். அவரது கவனம் உன் மீது இருக்க, அவர் உன் மீது கவலை கொள்ளுகிறபடியால் உன்னை விசாரிக்கிறார். இந்த வரிசையில் வந்திருக்கிற மற்றவர்களுக்காகவும் விசாரிக்கிறார். அவர்களை விசாரிக்கிறர். உனக்கு ஒரு தொந்தாவு - ஒரு விபத்து - மோட்டார் விபத்து நீங்கள் யாவரும் அதிர்ச்சியடைந்துள்ளீர்கள் அது சரி. உனக்கு உன் காலில் கஷ்டம். அது சரியே. அது சரியாகி விடும். அந்த நரம்புத் தளர்ச்சி உன்னை விட்டு அகலும். ஆகையால் வீட்டுக்குப் போய் கர்த்தருக்கு நன்றி சொல். 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறு. 'நீ விசுவாசித்தால் எல்லாம் கூடும்'' அது சரியே. 188 நீ விசுவாசிக்கிறாயா-? உன்னை எனக்குத் தெரியாது. நீ எனக்கு ஒரு அன்னியன். ஆனால் தேவன் உன்னை அறிவார். நீ எந்தக் காரணத்தைக் கொண்டு இங்கிருக்கிறாய் என்று அவர் என்னிடத்தில் கூற முடியும் என்று விசுவாசிக்கிறாயா-? அதை விசுவாசிக்கிறாயா-? ஸ்திரீ, 'ஆம்' என்று கூறுகிறார்-பதிப்பாசிரியர்) மற்றொரு ஸ்திரி - உனக்கு வியாதி ஒன்றும் இல்லை. இல்லை உனக்கில்லை. நீ மற்றொருவருக்காக இங்கிருக்கிறாய். அது உன்னுடைய தாய்க்காக, அது சரியே. அவளுடைய கை கால்களில் ஏதோ ஒரு வியாதி. அது சரி. அவள் இங்கில்லை: அவள் இங்கிலாந்தை தேசத்தவள். இங்கே அருகில் எங்கோ இருக்கிறாள். அது சரியே. நீ விசுவாசிக்கிறாயா-? அது சரி. போகலாம். அவள் சொஸ்தமானாள், 189 இங்கே இரண்டு ஸ்திரீகள். ஒருத்தி மற்றவளை விட வயது முதிர்ந்தவள். அது எங்கே என்று வியந்தேன். நான் காணும் படியாக எங்கே என்று நோக்கினேன். கர்த்தராகிய தேவன் எல்லாக் காரியங்களையும் அறிவார். இல்லையா-? அவர் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும். அதை நீ விசுவாசிக்கிறாயா-? ஆமென். அவர் அற்புதமானவர் அல்லவா-? அவரை நான் நேசிக்கிறேன். அவர் என் ஜீவனானவர். எனக்குண்டான எல்லாம் அவரே. என் தேவை எல்லாம் அவரே. 190 அபிஷேகம் அந்த ஸ்திரீயைப் பின் தொடர்ந்தது, அங்கே மற்றொரு ஸ்திரீ உட்கார்ந்து நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு தன் அக்குளில், ஒரு வளர்ச்சியைக் கொண்டவளாக இருக்கிறாள். அதுசரியா-? அவள் தன்னுடைய கையை அங்கு வைத்த போது, நீ ஒரு வினோதமான தொன்றைத் தொட்ட உணர்வு உனக்கு ஏற்பட்டது. அதுசரியா-? அவர் உன்னைச் சுகப்படுத்திய போது அவ்வாறு உணர்ந்தாய். நீ சுகமாக்கப்படப் போகிறாய். இதை தாங்கிக் கொள்ளக்கூடிய கைதாங்கி," உனக்குத் தேவையில்லை. அவள் எங்கே என்று பாருங்கள். அவள் ஜெபித்துக் கொண்டிருந்ததை நோக்கினீர்களா-? அவளுக்காக ஜெபித்தேன். என்ன நடந்தது-? பார். மற்றொரு ஸ்திரீயைப் பார்க்கிறேன். நான் அந்தப் பக்கத்தை நோக்கினேன். அங்கே பெரிய உணர்வு இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். அவர்கள் பழக்கமுள்ளவர்களாக இருந்தனர். ஏனென்றால், அந்த ஸ்திரீ, இங்கே இருந்த ஸ்திரிக்காக ஓர் உணர்வுள்ளவளாக இருந்தாள். இந்த ஸ்திரீ குனிந்து அந்த ஸ்திரீயைத் தொட்டாள். அதைச் செய்த பொழுது நான் பார்த்தேன். அங்கே ஏதோ ஒன்றைப் பார்த்தேன். அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள். அந்த ஸ்திரியை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. பரலோகத்தில் இருக்கிற தேவன் அதை அறிவார். ஓ என்னே-! ஏன் சந்தேகிக்கிறாய்-? - 191 அவரை விசுவாசித்தால், உன்னுடைய பழக்கங்களைக் கூட உன்னில் இருந்து அவரால் எடுத்துவிட முடியும். அதை நீ விசுவாசிக்கிறாயா-? உன்னை முழுவதுமாக சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? போகலாம். இப்பொழுதே அதை நிறுத்தி இனி அடுத்த ஒரு சிகரெட்டைத் தொடக்கூட மாட்டாய். போகலாம். உன் முழு இருதயத்துடன் விசுவாசி. தேவனில் விசுவாசமுள்ளவனாயிரு சந்தேகப்படாதே. 192 நீ விசுவாசிக்கிறாயா-? மூன்று பேர்களை முடித்து விட்டோமா-? தேவனிடத்தில் விசுவாசமாயிரு. சந்தேகப்படாதே. விசுவாசி, இப்பொழுது இங்கே அபிஷேகம் உண்டென்று விசுவாசிக்கிறாயா (சபையார் 'ஆம்' என்கின்றனர்.- பதிப்பாசிரியர்) ஆமென். சந்தேகப்படாதே விசுவாசி. 193 உன் மீது கைகளை வைக்கப் போகிறேன், விசுவாசி. என்னோடு கூட விசுவாசிப்பாயா-? (அந்த மனிதன் சரி ஆம் ஐயா'' என்கிறார் - பதிப்பாசிரியர்) இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் இந்தச் சகோதரன் சுகமாகட்டும். ஆமென். இப்பொழுது விசுவாசி. சந்தேகப்படாதே. ஒரு நிமிஷமே. 194 அங்கே கூட்டத்திலே ஏதோ ஒன்று சம்பவித்தது. நான் காண முடியவில்லை அது கூட்டத்தின் பின்னால், அது எனக்கு மறைக்கப்பட்டதாக இருக்கிறது. இங்கே இருக்கிறது. அதை நிழலாகப் பார்க்கிறேன். அது ஓர் மனிதன். அவர் நரம்புத் தளர்ச்சியினால் அவதியுறுகிறார். அவருக்கு காக்கா வலிப்பு உள்ள ஒரு பையனிருக்கிறான். உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா, ஐயா-? அது தான். சரியே. உமது கையை உமது மகன் மீது வையும் - அவன் சுகமாவான். ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 195 நீ விசுவாசிக்கிறாயா-? பிசாசானவன் அதை மறைக்கப் பார்த்து தோல்வி அடைந்தான். அதை நீ விசுவாசிக்கிறாயா-? அது அங்கே அசைவாடிக் கொண்டிருக்கிறது. ஓ-! கிருபையும் விசாரிப்பும், நிறைந்து. இங்கே மற்றொரு காக்கா வலிப்புக்காரர் உள்ளார். ஆம் இங்கேயே இருக்கிறார். நீர் விசுவாசிக்கிறீரா-? விசுவாசம் கொண்டவராயிரும். தேவன் உம்மை அறிகிறார் என்று விசுவாசிக்கிறீரா-? திரு நெல்சன் டி. கிராண்ட் என்பவரே, நீர் ஒஹையோ பட்டணத்திற்குத் திரும்பிப் போகலாம், குணமடைந்து விட்டீர்கள். உம் பேர் அதுவே. நீர் விசுவாசித்தால் உம்மைப் பற்றிப் பிடித்த காரியங்கள் உம்மை விட்டகன்று, திரும்பவும் அவதியுறாமல் நீர் இருப்பீர். என் ஜீவியத்தில் அந்த மனிதனை நான் கண்டதே இல்லை. அவரைப்பற்றி ஒன்று கூட எனக்குத் தெரியாது. நீர் அதை இப்பொழுது மறைக்க முடியாது. பரிசுத்தாவியானவர் இங்கிருக்கிறார்-! 196 நாம் நமது தலைகளை வணங்கி தேவனுக்கு துதி ஏறெடுப்போம். கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர். கர்த்தாவே, உமது கிருபை எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது. கிடைக்காமற் போவது இல்லை. உமது பெருத்த இரக்கமும் நன்மையும் ஜனங்கள் மீது இறங்க ஜெபிக்கிறேன். நீர் வந்து உம்மையே நிரூபித்து, எங்களுக்குப் போதிய அளவு விசாரிக்கிறவராய் இருக்கிறீர். நீர் மகா பரிசுத்தமுள்ளவராய் மாபெரும் பரிசுத்த ஆவியாய் இருக்கிறீர். கர்த்தாவே இங்கே இந்த வரிசையில் கடந்து செல்லக் கூடிய ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும், உமது அபிஷேகம் இங்கு இருக்கையில், என்னை இந்தக் கைக்குட்டைகள் மீது வைக்கிறேன். பிதாவே, இந்த வேண்டுதல்களை கிருபையாய் அருளிச்செய்யும், கர்த்தாவே. இந்தக் கூட்டத்திலுள்ள மற்றவர்க்கும் அருளிச் செய்யும், ஆண்டவரே. 197. மேலும் இங்கே தேவ பிரசன்னத்திலிருக்கும் ஒவ்வொருவரையும், இக் கடைசி நாளில் நீர் உமது ஜனங்கள் மத்தியிலே எழும்பி, விசாரிக்கிறவராய், நிருபிக்கிறீர். நீர் அவர்களை சுகப்படுத்த முடியாது, கர்த்தாவே, நீர் ஏற்கனவே செய்து முடித்ததை இப்போது செய்ய முடியாது. நீர் ஏற்கனவே அவர்களைச் சுகப்படுத்திவிட்டீர். இந்த ஒரே ஒரு காரியத்தை மாத்திரம் நிகழ்த்தும். அவர்களை விசுவாசிக்கச் செய்வதையே-! நீர் எங்கள் மத்தியில் மரித்தோரில் இருந்து எழுந்தவராய், ஜீவிக்கிற உம்மை எங்களுக்குக் காண்பித்து, நாங்கள் அவிசுவாசத்தின் வழியாய் தடுமாறும் பொழுதும்கூட, எங்களை விசாரிக்க வராய் இருக்கிறீர். எங்களுடைய எல்லா பாரங்களையும் உம் மீது வைத்து, தெய்வீகப் பிரசன்னத்தில் இருக்கும் ஒவ்வொருவருடைய ஆத்துமா, சரீரத்தைச் சுகப்படுத்தும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்-! ஆமென். 198. சரி, இந்த வழியாக ஜனங்கள் நேரே வரட்டும். சரி, பில்லி அவர்களை அழைப்பார் - பிரிவு பிரிவாக, இப்பொழுது பேசவேண்டாம். அபிஷேகம் என் மீது இருக்கிறது, பார், 'அது' இங்கே இருக்கும் போது, உங்கள் மீது என் கைகளை வைக்க விரும்புகிறேன், பார் அந்தப் பகுத்தறிதலை நான் நிறுத்த மாட்டேன். அதை நிறுத்தினால் இங்கே இன்னும் எத்தனை பேர் ஜெபிக்கப்பட வேண்டி உள்ளது - கைகளை உயர்த்தி பாருங்கள்-! எழுபது சதவீதம். பாருங்கள்-! இப்பொழுது ஒரு மணியாக பத்து நிமிடங்கள் உள்ளன. இதன் பின்பு ஞானஸ்நான ஆராதனை வருகிறது நானாகச் செய்ய முடியாது, ஆனால் நீ விசுவாசிக்கக் கூடும். அவர் விசாரிக்கிறவராய் தம்மை வெளிப்படுத்துகையில், நீ விசுவாசிக்க முழு சிரத்தை எடுக்க வேண்டும். அது சரியா-? அதுசரி. குழுமியுள்ள எல்லோரும் ஜெபிக்கவும். பில்லியோ அல்லது சகோ.நெவிலோ இந்தச் ஒலிபெருக்கியை உபயோகிக்கலாம். நாம் தலைகளை வணங்கி, ஜெப வரிசையில் நடந்து செல்கையில் ஜெபித்துக் கொண்டே இருப்போம் உங்களில் ஒவ்வொருவருக்காக கைகளை உங்கள் மேல் வைத்து ஜெபிக்கப் போகின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அபிஷேகிக்கப்பட்ட இடத்தின் வழியாய் நடந்து செல்கையில், உங்களைப் பிடித்திருக்கிற பொல்லாத ஆவிகள் உங்களை விட்டு கடந்து செல்லும் படியாக நடக்கும் அபிஷேகமானது திரும்ப வந்து அங்கேயும் இங்கேயும் காணப்படுகிறது. (அதாவது ஜெபவரிசையிலும், மக்கள் குழுமியுள்ள கூட்டத்திலும் தமிழாக்கியோன்) ஆனால் அதை உங்கள் விசுவாசத்திற்கு விட்டு விடுகிறேன். ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். 199. (சகோ.பிரான்ஹாம் வரிசையில் நிற்கும் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியே கைகளை வைத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் பெறும்படி ஜெபிக்கிறார் நடுவிலே-? அவர் விசாரிக்கிறார். நீ கவலை கொள்கிறாயா-?'' என்று கூறி ஜெபித்து சுகமளிக்கும் ஜெப வரிசையை முடிக்கிறார் - தமிழாக்கியோன்.) (ஒவ்வொருவருக்கும் 'இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் சுகத்தைப் பெற்றுக் கொள்'' என்று கூறி ஜெபிக்கிறார் - தமிழாக்கியோன்) 200. ஒவ்வொருவருக்காகவும் என்னுடைய உண்மையான ஜெபத்தை ஏறெடுக்கிறேன். நீ இப்பொழுது கவலை கொள்கிறாயா-? இயேசு விசாரிக் கிறார். இயேசு இந்தச் செய்தியை அனுப்பினார். இயேசு தமது ஆவியை அனுப்பினார். இயேசு தமது வார்த்தையை அனுப்பினார். இயேசு தமது ஊழியக்காரனை அனுப்பினார், நாம் யாவரும் அவரைத் தேடுகிறோம். நீ இப்பொழுது அவரைத் தேடுகிறாயா-? நீ தேடினால் அதை விசுவாசித்து உண்மையுடன் அதைப் பெற்றுக் கொள். அது உனக்குக் செய்யப்படும். (சகோ.பிரான்ஹாம் தொடர்ந்து வியாதியஸ்தர்க்காக ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்- பதிப்பாசிரியர்) அவர் உன்னை விசாரிக்கிறார் அவர் உன்னை விசாரிக்கிறார்; சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்களின் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரிக்கிறார் (அவர் மீது உன் கவலைகளை வைத்துவிடு) அவர் உன்னை விசாரிக்கிறார் சூரிய வெளிச்சத்தின் மூலமோ "அல்லது நிழல்களின் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார்-? 201. நீ அவரைத் தேடுகிறாயா-? அவருடைய வார்த்தையைத் தேடுகிறாயா-? ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒரு நிமிடம் தலைகளை வணங்குவோம். நான் இந்த விண்ணப்பங்களுக்கு, பதில் கிடைத்து விட்டதாக நம்புகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய வேண்டுகோளுக்கும் பதிலளித்து விட்டேன், இல்லையா-? 202. சிறிது நேரத்துக்கு முன் கூட்டத்தில் ஒரு சிறு தவறைச் செய்தேன். யாராவது அதைக் கவனித்திருப்பீர்களென நம்புகிறேன். கர்த்தர் அதை எனக்குக் காண்பித்தார். யாரொருவாருக்காக சொன்னதை மற்றவர்க்குக் கூறினேன். அந்த ஆள் எங்கே இருந்தாரென்று நான் காணமுடியவில்லை. ஆனால் மற்றவர்க்குக் கூறவேண்டிய ஆசீர்வாதத்தை இன்னொருவருக்குக் கூறிவிட்டேன். ஜெப வரிசையில் வேகமாக மக்கள் வந்து கொண்டிருந்ததால் நான் கவனிக்க இயலவில்லை. ஆம் அப்படியே ஆனால் இப்பொழுது நான் பார்க்கிறேன். இங்கே உட்கார்ந்திருக்கிற இந்த ஸ்திரியும் புருஷனுமே. நான் நேற்று ஒரு உணவு விடுதியின் முன் பாகத்திலே ஜெபர்ஸன் வில்லிலே உங்களோடு கை குலுக்கினேன் என்று எண்ணுகிறேன் (நான் தவறாகக் கூறவில்லை என்று நம்புகிறேன்) அந்த மனிதனிடத்தில் ஜெப வரிசையில் கடந்து செல்லும் பொழுது, சகோதரனே என்பதற்குச் சகோதரி' என்று கூறி விட்டேன். அதைக் கவனித்தீர்களா-? அதை உம்முடைய மனைவிக்காகக் கூறினேன், அவள் அநேக வருஷங்களாக குடல் உபாதையினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். நீங்கள் இல்லினாய் பட்டணத்திலிருந்து வந்தவர்கள். திருமதி. மோங்கா லேண்ட் என்பது உங்கள் பெயர். உங்களைத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நீ தொடர்புடன் இருக்கிறாய். நீ முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், எப்பொழுதும் நடப்பது போல, உனது வியாதிகள் முழுவதுமாக நீங்கி, நீ சாதாரணமாக எப்போதும் போல் இருப்பாய். அதை எப்பொழுதும் காண்பாய். 203. கடந்த இரவு இந்த மனிதனை நினைத்துக் கொண்டு, அழகிய முடியுடன், தலை நடுவில் கூர் எடுத்து அழகாகத் தலை சீவி கருமையான தலையை உடையவர் உட்கார்ந்திருப்பதை ஞாபகப்படுத்கிறேன், நான் நோக்கிப் பார்த்த போது, வெளிச்சமானது அவர்கள் மேல் பிரகாசிக்க அது அப்படி இருந்தது. அந்த தரிசனம் தெளிவாக காணப்பட்டது. அவர்களைப் பற்றி ஒன்றும் அறியாதிருந்தேன். நேற்றிரவு அந்த ஸ்திரியை நோக்கி, "கூட்டத்துக்கு வருகிறாயா,'' என்று வினவ, அவள் 'ஆம்' என்றாள். ஆனால் தேவனுடைய கிருபை திரும்பவுமாக இழுத்து, அவள் யாரென்று அறிந்து கொள்ள முடிந்தது. ஜெப வரிசையில் ஒருவருக்காகக் கூறியது மற்றவர்க்குக் கடந்து சென்றதைக் கவனித்தீர்களா-? சகோதரனே, உமக்காக வந்தது சகோதரிக் காகவே. அது சரியே. அது உம்மைக்கடந்து அங்கே இருந்த சகோதரிக்குச் சென்றது. 204 இந்த ஜெபவரிசையின் மூலமாக கர்த்தருடைய தூதன் அங்கிருந்ததை தெரிந்திருக்கலாம். அது அழைத்திருக்கலாம். ஆனால் நீ அழைக்க, அழைக்க அது பெலவீனமடைந்துவிடும். பார். அவர் உன்னை விசாரிக்கிறார். நான் உனக்காகக் கவலைப்படுகிறேன். நான் இன்னும் 5 அல்லது 4 பேர்களை அதிகமாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் முதலாவது நீங்கள் அறிய வேண்டியது என்னவென்றால் 'பில்லி' என்னை பிரசங்க பீடத்தினின்று அழைத்துச் சென்று விட்டார். ஆனால் நான் நினைத்தது என்னவென்றால் உங்கள் எல்லோரோடும் இத்தனை வருடங்கள் ஜீவித்து தேசம் முழுவதிலும் உங்களை அறிந்தவனாக இருந்து நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய சொந்தப் பிள்ளைகளாக நான் உங்களை நேசிக்கிறேன்' நீங்கள் சுவிசேஷத்தில் என் பிள்ளைகளாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவுக்கு சுவிசேஷத்தின் மூலமாக உங்களைப் பெற்றெடுத்தேன். இப்பொழுது இங்கே உள்ள வேண்டுகோள்களுக்கெல்லாம் நான் பதில் கூறி விட்டேன் என்று நினைக்கிறேன். 205 நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை ஜெபவரிசையில் உங்கள் மீது கைகளை வைத்து பரிசுத்த ஆவியில் ஜெபித்திருக்கும்போது-வேகமாகச் செல்கையில் ஒரு ஆசீர்வாதம் மற்றவருக்குச் சொல்லப்பட்டபோது பரிசுத்த ஆவியானவர் திரும்ப வந்து கூட்டம் முடிவதற்குள் அதைக் காண்பித்து, அந்த ஆசீர்வாதம் கிடைக்கும்படி அந்த ஆளுக்குக் கிருபை புரிந்தார், பாருங்கள். அவர் விசாரிக்கிறார். ஆனால் நீ கவலைகொள்கிறாயா-? நீ கவனத்துடன், இந்த நேரத்திலிருந்து, என் இருதயத்தில் ஏதோ ஒன்று என்னுடைய கஷ்டங்களெல்லாம் முடிந்தது- நான் நலமாக இருக்கிறேன். நலமாக இருக்கப் போகிறேன்,'' என்று சொல்வாயா-? நீ அதை விசுவாசிக்கிறாயா-? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அதை நான் விசுவாசிக்கிறேன்,'' கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. சூர்ய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்களின் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார். 206 இது ஒரு பெரிய அன்பின் விருந்து. நாம் பாட்டுப்பாடி. ஒருவருக் கொருவர் கைக்குலுக்கிக் கொள்ளுவோமாக. அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரிக்கிறார் சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்களின் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார். 207 இக்காலையில் உங்களை அதிக நேரம் இருக்கும்படி செய்து விட்டேன். என்னுடைய போதகர் நான் பிரசங்கிக்கும் நேரம் பிரசங்கிப்பதில்லை இன்று இரவு அவர் உங்களுக்குச் செய்தி கொடுக்க முயற்சிப்பார். அடுத்த ஞாயிறைப் பற்றிய செய்தியின் தலைப்பை அப்பொழுது கூறுவோம். நான் இல்லாவிட்டால் ஆராதனைகள் அதே போல வழக்கமாக நடைபெறும், கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஞானஸ்நான ஆராதனை உடனே தொடர்ந்து நடைபெறும். 208 நாம் கலைவதற்கு முன்னால் ஒரு நிமிஷம் எழுந்து நின்று, அதை மறுபடியும் பாடுவோம். உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்களுக்காக கவலைப்படுகிறார்' 'நீ அவரைத் தேடுவாயாகில், நாம் சேர்ந்து : இப்பொழுது, இந்த வாக்கியத்தைச் சொல்லுவோம். நீங்கள் அவ்விதம் செய்யும்போது ''கர்த்தாவே-! நீர் என்னை விசாரிக்கிறீர் என்று நான் அறிவேன், நான் என் கைகளை உயர்த்தி, உம்மைத் தேடுகிறேன்,'' என்று கூறுங்கள். நாம் நமது கைகளை கோர்த்துக் கொண்டு இந்த அன்பின் விருந்தில் இவ்விதமாய் பாடுவோம். அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரிக்கிறார். சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்களின் மூலமோ அவர் உன்னை விசாரிக்கிறார். 209 இப்போது தலைகளை வணங்கி, இவ்விதமாக (சகோ. பிரான்ஹாம்" அவர் விசாரிக்கிறார்' என்ற பாட்டை முணுமுணுக்கிறார் - பதிப்பாசிரியர்) ஒ என் ஆண்டவரின் இனிமை. அவரது அன்பு உணர்கிறாயா-? ''கர்த்தாவே, உம்மை நேசிக்கிறேன்-நேசிக்கிறேன். நீர் என்னை விசாரிக்கிறீர். ஆண்டவரே, நான் பாவியாயிருக்கையில் நீர் எனக்காக மரித்து என்னை விசாரிக்கிறவரானீர் எனது பாவங்களுக்காக நீர் காயப்பட்டீர் உம்முடைய தழும்புகளால் நான் குணமானேன்'. அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரிர்கிறார். சூரிய வெளிச்சத்தின் மூலமோ அல்லது நிழல்களின் மூலமோ அவர் இன்னும் உன்னை விசாரிக்கிறார். 210 நீங்கள் தலைகன் வணங்கியிருக்கும் போது, சகோ.எட்வர்டை ஜெபித்துக் கூட்டத்தைக் கலைக்கும்படி கேட்கிறேன். திரும்பவுமாக அந்தப் பாட்டை அமைதியாக சத்தம் வராமல் பாடுவோம். (சகோ, பிரன்ஹாம், அவர் உன்னை விசாரிக்கிறார் என்ற பல்லவியை முணுமுணுக்கிறார்- பதிப்பாசிரியர்) சூரியவெளிச்சமோ, நிழலோ, ஞாபகம் வைத்துக்கொள், அவர் விசாரிக்கிறார். அவர் விசாரித்தார். நீ அவரைத் தேடுகிறாயா-? ஆம் ஆண்டவரே-! நான் தேடுவேன் என்று வாக்குப் பண்ணுகிறேன். இனிமேல் நான் என் சாட்சிக்காக கவனமாயிருப்பேன். (சகோ. பிரான்ஹாம் தொடர்ந்து முணுமுணுக்கிறார். அவர் உன்னை விசாரிக்கிறார். அவர் உன்னை விசாரிக்கிறார்'' சகோ.எட்வர்ட்ஸ்....